Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
பாரதி நிவேதன் கவிதைகள்


1. வெளுத்த தசை

கடந்துபோன பேருந்து சன்னலில் இணக்கமுள்ள
பிம்பமொன்றை அவ்விசையில் பிடித்தவன்
உறுவி தடவி தன்குறியை மேலும் விசைக்க
புழுதி வளர்க்கும் நெடுஞ்சாலையில்
ஒரு தொலைபேசி இணைப்புப்பெட்டி போதுமானதாயிருக்க
சிறுநீர் கழிப்பவனாயிருப்பவன் என்பதை நம்பமாட்டாமல்
இணக்கமுள்ள பிம்பத்தை இன்னொரு பேருந்தில் பிடித்தவன்
கடைசி நியான் விளக்கு அவிந்த
இருள் விரிவில் தன் பிம்பங்களை
கைப்பிள்ளையாக இறக்கி விடுவதிலிருந்து
தலைமுட்டியாகும் அடர்காடு
முற்பகல் வரையிலும் மீண்டும் நடுநிசிக்குத் தயாராவதிலும்
சில கப்களை புரோட்டா உதிரியை
உடைந்த தீப்பெட்டியை பொட்டணக் கயிறுகளை
நிணம்படிந்த புளிச்ச வீச்சமுடைய
கொஞ்சம் காலம் கவிந்து கெட்டித்து வாசத்தை
புதரிலிருந்து கடத்திவிடுகிறது இப்படி

2. திசை மறுத்தவன் மீது வெயில்ஒளிர்வது

ஒளிப்பறவையின் காந்தப்புலம்
இதழ்முனையை இமைவிளிம்பை
தப்பிக்க வைப்பதாக
படபடப்புக்குள்ளாக்கி அதையே சிறகுகளாக்க
விசும்பு வாசம்பிடித்து உலகில் படரும்
இமைகளற்று இதழ்களற்று
வன்முறையின் முதல்வாளை
தன்னுறையிலிருந்து தன்னை உறுவி
அந்தத்திசை கண்விழித்துப் பார்த்தது
வேறு வேறாகிவிட்டபின்
திசைமறுத்தவன் காலத்தைத் தொடரவில்லை
தூரகாலத்தில் அவன்மீது வெயில் ஒளிர்கிறது

3. நீர்பாம்பினன்கு

இரண்டு மூன்று சிகரெட்டுகளுக்குப்பிறகு நமது
ஒற்றுமையை அழித்தலையோ
மிடறு வைத்தும் வைக்காதும் முடித்துவிட்ட தேநீரிலிருந்து
நமது கபடங்களை அழித்தலையோ
இரவைத் தயாரிப்பதற்கும் பகலை முண்டுகட்டுவதற்கும்
அலைக்கழியும் வெள்ளரி மேசையையோ
காலத்தின் மேலோட்டில் பிசிறுவிட்டு முளைத்திருக்கும்
உடலின் மீது களிம்பாக
அதன் காயங்களுக்கு உவப்பானதாகுமென்றால்
தேர்ந்தெடுக்காத வார்த்தையிலிருந்து
உதிர்ந்துவிழும் உத்திரத்தின் மூலம்
கல்லறைக்குள் இருக்கும் உடலை
அழுகையின்றி முத்தமிட்டு
அதன் தசைகளை மென்று தின்பது
தூரவணிகளின் இரவுக்குள்
ஒரு மெல்லிய பாம்பாய் விட்டுவிடுவதைத்தவிர
பராபரத்திற்கு வேறொன்றும் கடவுவதில்லை பிடாரா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com