Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
வலிகள்
வளவ. துரையன்

எனக்கு இந்த வலிகள் வர
காரணங்கள் பல இருக்கலாம்

என் செயலாலோ
பிறரது தூண்டல்களாலோ
வலிகள் வருகின்றன.

இந்த வலிகள் சில நேரங்களில்
நாட்டின் மீதும்
சமூகத்தின் மீதும் விழுகின்றன.

அதனால் ஏற்படும் சினம்
பொறுத்துக்கொள்ள இயலாமல்
பொங்கவைத்து விடுகிறது.

முதுகில் விழுந்த வலியைவிட
முகத்தில் விழுவது கொடூரமானது

கடவுளுக்குக் கூட அடிபட்டு
வலி வந்ததாம்
ஆனால் சாமர்த்தியமாக
எல்லார்க்கும் மாற்றிவிட்டாராம்.

இங்கு சாமர்த்தியம் போதாது
தாங்கு சக்தியே தேவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.