Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
கையெழுத்துகள் அழகானவை
சூர்யநிலா

உனது கையெழுத்துகள்
அழகானவை
அவை எப்போதும்
இலயிக்கச் செய்பவை
மனதை.

அழகான அவ்வெழுத்தினைத்
தாங்கிய மடலுக்காக
அஞ்சலகரை அதீத
அக்கறையுடன் எதிர்பார்ப்பேன்.

ஓர் ஓவியம் போன்ற
கலையழகுடனும்
பெருங்காவியம் போன்ற
மொழியழகுடனும்
உமது கையெழுத்துகள்
காணக்கிடைக்கின்றன

சில காலங்களில்
தெளிவற்ற கையெழுத்துகள்
உடல் நலிவையும்
வலுவான கையெழுத்துகள்
மனத்தெளிவுகளையும்
எனக்குச் சொல்லாமல்
சொல்லிப்போயின

மறைபொருளுடன்
எழுதப்படும் கையெழுத்து மடல்கள்
எனக்கு மட்டுமே புரிபடும்
பூடக மொழிகளை
புதுப் பரிமாணத்தில்
இனம் காட்டின

நேருவின் கையெழுத்து
அவரது அறிவைக் காட்டுவனவென்றும்
காந்தியின் கையெழுத்து
வெள்ளையனையும்
கிறங்கச் செய்திருந்தனவென்றும்
ஏடுகளில் படித்திருக்கிறேன்

கணினியில் டைப் செய்து
முகவரியினையும் ஒட்டியபடி
வருகின்ற தற்போதைய
உனது மடல்கள்
காணச் சகியாமல்
கிழிபடத் துவங்கினேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.