Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
செந்தமிழ்மாரி கவிதைகள்

வாலைப்பருவம்

மலர்கள்தாம் அவளைக் கொய்து
மாலையாக்கியிருந்தன

அம்மலர்களிடம் சொல்லவில்லை அவள்
எந்தவொரு தந்திரமும் -
அதுவேதான் வாசமூட்டின
தோள் கனக்கும் மாலையெங்கும்

கடல்சேரும் நதியைப் போல
பீரிட்ட முதிர்ச்சியோடு
பாதையமைத்துக்
காத்திருக்கிறது அவள் முன்

சேரும் கரம் யாதென
வருவோர் மீதெல்லாம்
வாசமிட்டுப் பரிசீலித்தபடி
தலைசாய்ந்திருக்கிறது
அப்பருவம்
பிறை நிரம்பிய நிலவாய்!


கற்பிதங்கள்

அன்பின் கணங்களிடும்
சதுக்க முனையறியாது
கொடி பரப்பிய நிழலில்
ஒற்றையாய்த் தளிர் ரோஜா
கொடிகள் எதுவும் பரவாமல்
அரண்கள் அதுவே இட்டுக் கொண்டது
தானே -
தனிமை போக்குவதாய்ச் சொல்லி
ரோஜாக்களைப் பறித்தபடியே இருக்கிறான்
அவ்வனத்தின் காவல்காரன்
காலம்காலமாய்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.