Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
வலியின் நிறம்
சு. வெங்குட்டுவன்

உயரே வந்து விட்டது சூரியன்
சாட்சியாய்

கடைவீதியில் கழிகிறது
இம்முற்பகல்
நின்றிருந்த மினி ஆட்டோ
செல்கிறது கிளம்பி
வெறிச்சிட்ட இடம் மனதுள்
தருகிறது கணச் சூன்யம்

அலட்சியமாய்க்
கடக்கிறாள்
பெருமித யுவதி

சலூனிலிருந்து கசிகிறது
வானொலியின் பாடல்
மிதித்து நசுக்கிப் போகிறது
லாரியின் இரைச்சல்

ஈக்களாய் மானுடர்
நிணமும் சாணமும்
மிதித்துப் பார்த்திருக்க
அமுக்கிப் பிடித்திருக்கிறது
முரட்டுக்கரங்கள்

அலறவும் துடிக்கவும்
ஏலாது
பாதியறுந்த சங்கின் வழி
பொங்கி வழிந்து
கிண்ணம் வழிந்து
கிண்ணம் நிரப்புகிறது ரத்தம்
கண்ணீராய்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.