Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
சில வானங்கள் சில பறவைகள்
சரவணன் மாரியப்பன்

சிறுமி ஒருத்தி பாட்டியிடம்
வானம் உயரேப் போன
கதையன்று கேட்டு வந்தவள்
வானம் எத்தனை உயரத்தில் இருக்கிறது என்றாள்
நான் அப்பொழுது குடித்திருந்தேன்
எளக்குத் தெரியாது நான் வெளியூரு
வேண்டுமென்றால் பறவைகளிடம்
கேட்டுத் தெரிந்து கொள் என்றேன்.
வல்லூறிடம் கேட்டிருக்கிறாள் அதுவும்
நான் எப்பொழுதாவது ஒரு முறை அதன்
உச்சியைத் தொட்டு வருவேன் என்றிருக்கிறது.
புறாவிடம் கேட்டிருக்கிறாள் நான் அதன்
உச்சத்தில்தான் இருக்கிறேன் என்றிருக்கிறது பெருமையாக
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டிருக்கிறாள்
நான் அதன் உச்சியில்தான் பறக்கிறேன்
என்றிருக்கிறது - இவ்வளவு கீழயா
இருக்கிறது வானம் பாட்டி
நீ இன்னொரு முறை இடி
அது இன்னும் மேலேப் போகவில்லை என்றாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.