Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
ஆவணப்படம்
தொம்பறை
பொன். குமார்

அறுவடைக் காலத்தில் தானியங்களை சேமித்தும் பாதுகாத்தும் வைப்பது மக்களின் வழக்கம். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது 'தொம்பறை'. சமீப காலங்களில் தொம்பறையின் பயன்பாடும் குறைந்து விட்டது. தொம்பறையும் குறைந்து வருகிறது. காண்பதும் அரிதாகி விட்டது. தொம்பறை இருந்ததையும், இருப்பதையும் ஆவணப் படமாக்கித் தந்துள்ளார் புவனராஜன். முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் உரையுடன் தொடங்குகிறது ஆவணப்படம். மிக விரிவான விவரமான பேச்சு. 'தொம்பறை'யின் பயன்பாட்டையும் தொம்பறை எவ்வாறு தானியத்தை பாதுகாக்கிறது எனவும் அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் மிக நுட்பமாக தெரிவித்ததை பதிவுசெய்து காட்டுகிறது.

தொடர்ந்து தொம்பறையை பயன்படுத்தியவர்களின் நேர்காணலையும் அவர்களின் எண்ணங்களையும் பதிவுசெய்து காட்டி தொம்பறையின் உபயோகத்தைப் புரியச் செய்துள்ளார். காலத்தால் பல அழிந்து வந்தாலும், அழிக்கப்பட்டு வந்தாலும் தற்போதுள்ளவைகளை காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். அழியும் நிலையில் இருப்பவைகளைக் காணும்போது மனம் கவலையுறுவதை உணரமுடிகிறது. 'தொம்பறை' அழிந்து வருவதற்கு பாகப்பிவினை ஒரு காரணம் என்றும் விளைச்சல் இல்லாதது மற்றொரு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'தொம்பறை'யை 'தானியவீடு' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 'தொம்பறை'க்குள் இறங்கும்போதோ அல்லது தானியம் எடுக்கும் போதோ ஆண்களாயிருப்பவர் மது அருந்தக்கூடாது என்றும், பெண்களாயிருந்தால் தீட்டு காலமாக இருக்கக்கூடாது என்றும் பேச்சின் வழியே தெரிகிறது. தொம்பறையை மக்கள் வழிபட்டனர் என்றும் பெண்கள் சிலருக்கு தொம்பறையம்மா என பெயர் இடப்பட்டதையும் சுட்டுகிறது.

தானியக்குழிகள், களஞ்சியங்கள், மண் தொம்பறை, காமரா, மாசல் குலுக்கைகள், பெரிய மண்பானைகள் என தொம்பறையில் பல வகைகள் உள்ளதையும் ஆவணப்படம் காட்டுகிறது. ஆனால் 'குதிர்' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. பூமிக்கு மேலும் பூமிக்கு அடியிலும் தொம்பறைகள் அமைக்கப்படுகின்றன என்றும் உணர்த்துகிறது. பிற்காலங்களில் பெண்கள் பானைகளில், மொடாக்களில், 'சிறுவாடு' என்னும் சேமிப்பு பழக்கம் ஏற்பட்டதையும் நினைவுக் கூரச் செய்கிறது. சோளம், திணை, நெல், சாமை ஆகிய தானியங்கள் சேமிக்கப்படுவதையும் சொல்கிறது.

தாசப்பிரகாஷின் ஒளிப்பதிவு 'தொம்பறை'யைத் தெளிவாய்க் காட்டுகிறது. ஜெகதீஸ் கார்த்திக்கின் படத்தொகுப்பும் தொய்வு ஏற்படுத்தவில்லை. ஜெ. ராஜேஸ்குமாரின் இசையும் சிந்தனையைச் சிதறடிக்காமல் கொண்டு செல்கிறது. அ. மன்னர் மன்னனின் வர்னணையும் 'தொம்பறை' மீதுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. 'திரைத்தொனி' சார்பாக எழுதி இயக்கி இருப்பவர் புவனராஜன். தொம்பறை என்னும் தானிய சேமிப்பு அழிந்து வருவதைக் கண்டு வருந்தி ஆவணப்படுத்தியுள்ளார் புவனராஜன். பழைமையைப் போற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்பட்டுள்ளது. இருப்பவர்களுக்கு நினைவுக்கூர்ந்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்கு காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். நல்ல முயற்சி.

வெளியீடு : திரைத்தொனி
தங்கம் மெடிக்கல்ஸ், ஆண்டிப்பட்டி, தேனி - 625 521


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com