தாமதமாக வரும் பட்டாபி
பட்டாபி எப்போதும் போல் அன்றும் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தான். அடுத்த முறை இப்படி தாமதமாக வந்தால், வேலையிலிருந்து தூக்கி விடுவதாக மேலாளர் எச்சரித்தார். ரொம்பவும் பயந்துபோன பட்டாபி, அன்று மாலையில் மருத்துவரைப் போய் பார்த்தான். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு, மாத்திரை ஒன்றை கொடுத்து அனுப்பினார்.
அன்று அலுவலகம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவன் வந்து சேர்ந்து விட்டான். மகிழ்ச்சியுடன் மேலாளர் அறைக்குப் போனான். மருத்துவரைச் சந்தித்ததையும், அவர் கொடுத்த மாத்திரை வேலை செய்வதையும் கூறினான்.
“எல்லாம் சரி! நேற்று ஏன் அலுவலகம் வரவில்லை?”
|