Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
தமிழ் அறிக

அசைத்தல்
அறைதல்
அரற்றுதல்
இசைத்தல்
இறுத்தல்
இயம்புதல்
உரைத்தல்
உளறுதல்
உன்னுதல்
என்னுதல்
ஓதுதல்
கதைத்தல்
கத்துதல்
கரைதல்
கழறுதல்
கிளத்துதல்
குயிலுதல்
குழறுதல்
குறித்தல்
கூறுதல்
சாற்றுதல்
செப்புதல்
சொல்லுதல்
நவிலுதல்
நுவலுதல்
நுதலுதல்
நொடித்தல்
பறைதல்
பகருதல்
பயிருதல்
பன்னுதல்
பிதற்றுதல்
பினாத்துதல்
பீற்றுதல்
புகலுதல்
புலம்புதல்
புகழுதல்
பேசுதல்
பொழிதல்
போற்றுதல்
மாறுதல்
மிழற்றுதல்
முழங்குதல்
மொழிதல்
விள்ளுதல்
விளத்தல்
விளம்புதல்
விடுத்தல்
விதத்தல்
வலித்தல்

பொதுவாக, ‘சொல்லுதல்’ என்னும் பொருளினை இச்சொற்கள் குறித்தாலும், கூர்ந்து நோக்குங்கால் நுட்பமான பொருட்சிறப்பினைத் தருவதாகவும் இருக்கின்றன.

குயிலுதல் - குயில் போலப் பேசுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
கதைத்தல் - கதைபோல் சொல்லுதல்
கரைதல் - காக்கைபோல் கரைந்து அழைத்துச் சொல்லுதல்
இயம்புதல் - இசைக் கருவியின் இனிமையுடன் பேசுதல்
உளறுதல் - ஒன்று கிடக்க ஒன்று சொல்லுதல்
பொழிதல் - மழைபோல் இடையறாது சொல்லுதல்
விளம்புதல் - சகலமானவர்களுக்கும் சொல்லுதல்.

கூறுதலைக் கூறத் தமிழில் இத்தனை சொற்களா? நம் புருவங்கள் உயர்கின்றன.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.