Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
கண்ணாடிக்கு மாறுவோம்
மு.குருமூர்த்தி

கொஞ்சகாலம் முன்புவரை கண்ணாடி பாட்டில்களின் உபயோகம் அதிகமாக இருந்துவந்தது. மருந்து, பானம், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி பாட்டில்களில் சேமிக்கப்பட்டு வந்தன. இன்றோ, நிலைமை தலைகீழ். பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வழிவிட்ட நாம் நோய் நொடிகளுக்கும் வழி திறந்துவிட்டிருக்கிறோம்.

Light கைதவறி விழுந்தால் கண்ணாடி உடைந்துவிடும் என்று அச்சப்பட்டது ஒரு காலம். தற்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையாத இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும், கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. நுண்பெருக்காடிகள், காமிரா வில்லைகள், சோதனைக்குடுவைகள் இவையெல்லாம் கண்ணாடியைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

முகம் பார்க்கவும், கைவளையாகவும் மட்டுமே கண்ணாடி பயன்பட்டுவந்த காலம் மலையேறிவிட்டது.

தூய்மையாக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு, சலவை சோடா ஆகியவை கண்ணாடி செய்ய தேவையான மூலப்பொருட்கள். இவற்றை கொதிக்க வைத்தால் அவை உருகி 1500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாகு போலாகும். பல்வேறு வடிவங்களில் உள்ள அச்சுக்களில் ஊற்றி பலவகை வடிவக் கண்ணாடிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. சில வடிவங்கள் வாயால் ஊதி வார்க்கப்படுவதும் உண்டு.

கண்ணாடியில் எந்த வடிவமும் கொண்டு வரமுடியும் என்பதை இன்றைய அலங்கார விளக்குகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். சில உலோகச் சேர்மங்களை கண்ணாடிக் குழம்புடன் சேர்ப்பதால் வெவ்வேறு நிறமுள்ள கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன.

நன்றி: கலைக்கதிர்

தகவல்: மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.