Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruInformationGeneral
அரைமனிதனாக்கிய விபத்து

1995ல் நடைபெற்றது அந்த விபத்து.

handi ஒரு பெரிய லாரிவிபத்தில் பெங் ஷுலினின் உடல் இரண்டு துண்டுகளாகிப் போனது. ஆனால் அந்த மனிதர் உயிர்பிழைத்து டாக்டர்களையே அதிசயப்படுத்தினார். விந்தை நிகழ்வு இத்துடன் நின்றுபோகவில்லை. அந்த “அரை” மனிதர் இப்போது நடக்கத் தொடங்கிவிட்டார்!


செயற்கைக்கால்களுடன் பெங் ஷுலின்

20 டாக்டர்கள் தங்களுடைய சலிப்பறியா உழைப்பைக் கொடுத்து பெங் ஷுலினின் உயிரைக் காப்பாற்றினார்கள்.

வெட்டுப்பட்ட கீழுடலை காப்பாற்ற முடியாமல் போனது. பெங் ஷுலினுக்கு மிஞ்சிய உயரம் வெறும் 78 செண்டிமீட்டர்கள்தான். துண்டிக்கப்பாட்ட உடல்பகுதியை மூடுவதற்காக தலைப்பகுதியில் இருந்து தோல் வெட்டி எடுக்கப்பட்டது.

ஆண்டுக்கணக்கில் படுக்கையில் இருந்துவிட்டார் பெங் ஷுலின். ஆனால் சீன டாக்டர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெங் ஷுலினுக்கு சாதாரண வாழ்க்கையை கொடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அது.
handi

கைகளுக்குப் பயிற்சியளித்து வலிமையேற்றிக்கொண்டார் பெங். இப்போது அவரால் முகத்தைக் கழுவிக்கொள்ளவும், பல்துலக்கவும் முடியும்.

பெய்ஜிங்கில் உள்ள சீன புனர்வாழ்வு ஆய்வு மைய மருத்துவர்கள் பெங்கின் முயற்சியால் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அவரை மீண்டும் நடக்கவைக்க இப்போது முயற்சிகள் தொடங்கியுள்ளன.

முட்டையின் ஓடு போன்ற ஒரு அமைப்பை டாக்டர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த அமைப்பு அவருடைய உடலை தாங்கிப்பிடித்துக் கொள்கிறது. கிண்ணப்பகுதியில் அமைந்த செயற்கைக் கால்களின் உதவியால் மருத்துவமனையின் உட்புறம் தன்னுடைய முதல் சில அடிகளை பெங் எடுத்து வைத்துவிட்டார்.

தகவல்: மு.குருமூர்த்தி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.