ஒரே மொடக்கில்
அன்பின் இறுதிச் சொட்டுவரை
உறிஞ்சி விட எத்தனிக்கும்
வாய்களை நிரப்பத்
தினவெடுத்தவிரு முலைகளில்லாதது
என் நான்

மடியில் தலை வைத்த காலத்துக்கு
திதியாகி விட்டது
தலையில் மடி வைத்துப்
பாளம் பாளமாய் வெடித்துக்
கிடந்த வெக்கைப் பரப்பின்
அருகம்புற் பனித்துளியில்
முகம் பார்க்கையில்

தலையில் வைத்திருந்த
மடிக்குள்ளேயே உறிஞ்சப்பட்டது
முழுவுடலும்

முனை மழுங்கிய
கோரைப்பற்களை மறைக்க முற்படுகிறது
நானிற்குள் பதுங்கிய
விலங்கொன்று

-மதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It