vijaykarthi book 450சமீப ஆண்டுகளில் சுயமுன்னேற்ற நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. நம் அரசும், அரசியல்வாதிகளும்,தத்துவங்களும் தராத நம்பிக்கையை சுயமுன்னேற்ற நூல்கள் தருகின்றன போலும். ஆனால் அவை தரும் செய்திகளைத் தமிழ்ச்சமூகம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதா என்பது சந்தேகமே.

சுயமுன்னேற்ற நூல்களில் காணப்படும் அறிவுரை மலைகளும், குட்டிக்கதைகளின் குவியல்களும் இன்றைக்கு தட்டையான நிலையிலிருந்து அந்நூல்களின் தன்மையை மாற்றி நாவல் வடிவத்தில் சொல்ல முயற்சிகள் வடிவெடுத்திருப்பது சுயமுன்னேற்ற நூல்களை வெளிப்படுத்தும் முறையில் புது அணுகுமுறையைக் கொண்டு வந்திருக்கின்றது. தரகுகளை முன் வைத்து எழுதப்படும் டாக்கு நாவல்களைப்போல் சுயமுன்னேற்றக் குறிக்கோளுடன் கட்டமைக்கப்படும் இந்நாவல் வகைகளை செல்பி நாவல் என்றழைக்கலாம் என்று ஒரு வகையும் வந்துள்ளது.அதை விடுத்து இயல்பான இன்னொரு முறையும் பிரபலமாக உள்ளது.

ஒரே கல்லில் பதிமூன்று மாங்காய். டாக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களின் ஒரு சுயமுன்னேற்ற நூல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர். எண்களில் பலருக்கு பல எண்களைப் பிடிப்பதில்லை உதாரணமாக எட்டு, ஒன்பது போன்றவை அதேபோல் 13... 13ஐ மையமாகக் கொண்டு பல மூட நம்பிக்கைகளும் சொல்லப்பட்டு அந்த குருட்டு வழிகளும் தடுத்துக் கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த 13-யை மையமாக வைத்து மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக தலைப்பே அமைந்திருப்பது விசேஷமானது.

இந்த 13 கட்டுரைகளிலும் 13 வகையான தத்துவ விசாரங்கள் இருக்கின்றன என்று சொல்லலாம். வீட்டு விளையாட்டு அனுபவங்கள் முதல் உலக அனுபவங்கள், உலக புத்தக விவரங்கள் வரை பல விஷயங்கள் இணைந்தவை. இந்த புத்தகத்தின் வெவ்வேறுவிதமான கட்டுரைகள் தலைப்பு நம்மை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தும் அவை: கணக்கு வழக்கு, கல்லானாலும் கம்ப்யூட்டர், வெச்சா குடுமி அடிச்சா மொட்டை, சின்ன சின்ன விஷயங்கள் ஏன், இந்த ஓட்டம் தொட்டதெல்லாம் துலங்கும், நினைப்புதான் பொழப்பை கெடுக்கும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு, தோல்வி படிக்கட்டுகள், மாங்காய் இங்கே இருக்கு கல் எங்கே இருக்கு.. இப்படி தலைப்புகளே வாசிப்பதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கின்றன.

கணக்குப் போடுதல் என்பது திட்டமிடல் தான் அந்த திட்டமிடல் சரியாக அடங்கியபோது கணக்குக்கும் சரியான விடை கிடைத்துவிடுகிறது. வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி கணக்கு போடுவது திட்டமிடுவதும் கூட இப்படித்தான் என்கிறார் நூல் ஆசிரியர். கடவுள் போட்ட கணக்கை மீறி மனிதர்கள் படும் வீரதீரமான செயல்பாடுகள் அல்லது வெற்றிகள் பற்றியும் சொல்கிறார். பல்வேறு ஆங்கில நூல்களின் ஆதாரங்களும் வழிகாட்டுதலும் இந்த சுயமுன்னேற்ற நூலுக்கு ஒரு புதிய தளத்தை கொடுத்திருக்கிறது, என் புத்தகம் நான்தானே பிரதர் முடிவு பண்ணனும் என்று பளிச்சென்று சொல்லும் விஷயங்கள் என்றாலும் அந்த விஷயங்களுக்குள் நம்மையும் உறவாட அவர் அழைத்துக் கொண்டு போகும்போது தான் ஒரு முக்கிய விஷயமாக சொல்வதி நான் யார் தெரியுமா இது நான் எழுதிய புத்தகம் தெரியுமா என்ற ஒரு பார்வை பல எழுத்தாளரிடம் இருக்கும் ஆனால் அப்படி இல்லாமல் இது சாதாரணமாக ஒரு தேனீர் கடை பெஞ்சில் உட்கார்ந்து சகஜமாக உரையாடும் தொனியில் அமைந்திருக்கிறது, ஒரு கட்டுரையின் பின்பக்கத்தில் பின்குறிப்பு ஒன்று வந்திருக்கிறது..

இந்த புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டு கன்னாபின்னாவென்று சிரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல இப்படித்தான் கண்ணா பின்னா என்று சிரிப்பதற்கான பல்வேறு நகைச்சுவை விஷயங்களையும் இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது. வாழ்க்கையை பாசிட்டிவான சிகரமாக மாற்ற நமக்கு மனிதர்களும் அற்புதங்களும் முக்கிய தேவையாக இருக்கிறது என்பதை இதில் உள்ள பல கட்டுரைகள் சொல்லின. மாங்காய் இருக்கு கல் எங்கே இருக்கு என்று ஒரு கட்டுரை விடுதலை பெறுகிறது. விளம்பர இடைவேளை இல்லாமல் பாத்துக்குவாங்க பிரதர் என்று சொல்கிற ஒரு உரையாடல் தன்மையில் இந்த கட்டுரைகள்.

இந்த உரையாடல் தன்மை இந்த நூலுக்கு வாசகர்கள் எளிதாக நுழைந்து வெளிவரும், அதிலிருந்து உள்வாங்கிக் கொள்வதற்குமான பல்வேறு விஷயங்களை முன் வைத்திருக்கிறது, மந்திரம் பார்த்தா,, மந்திரம் நம் குறிக் கோள்கள் ஒவ்வொன்றும் சொல்லி எடுக்கும் என்று நினைத்தால் அது மந்திரக்கல் நம் மனசு தான் இந்த கல்லை வைத்து பதிமூன்று மாங்கா என்ன எத்தனை மாங்காய்களை வேண்டுமானாலும் அடிக்கலாம். கல்லை மட்டும் குறச்சுராதீங்க என்று இந்த நூல் முடிகிறது என்பது வாசகப் பார்வையாக எடுத்துக் கொண்டு ஒரு நடுத்தர மக்களுக்கு எல்லாம் சுலபமாக கொண்டு செல்ல முடிகிறது இதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விலை ரூ120

drvijakarthikeyan book 450“அதுவும் இதுவும்” டாக்டர் விஜய கார்த்திகேயனின் இன்னொரு புத்தகம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்களை மாற்றம் என்பது என்னிடமிருந்து என்று ஆரம்பிப்பதால் என்னுடைய மையமாகக் கொள்ளலாம் என்கிறார். மாற்றத்தை ஒவ்வொருவரும் நம்முடைய வழிகாட்டுதல்கள் நடத்தைகள் மூலம் உருவாக்கிக் கொள்வதற்கான அவசியத்தை அவர் கோடிட்டுக் காட்டுவதை முகப்பிலேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

 அதேபோல ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கையே நம்பாதவன் இந்த உலகில் என்ன சாதிக்க முடியும். தன்னம்பிக்கை வரும் போதுதான் உழைப்பு என்னும் அடுத்த கட்டத்திற்குப் போக முடியும் என்பதை இன்றைய தலைமுறை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்றைய தலைமுறையை முன்வைத்து அவர் பல கட்டுரைகளை இதில் தொகுத்திருக்கிறார். அப்படித்தான் அவர் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு நிலையில் சமுதாயத்தைப் பற்றிய அனுபவங்களை இந்த தொகுப்பில் நிறைந்திருக்கின்றன.

இந்த தொகுப்பில் புதிய தலைமுறை இடைவெளி பற்றிய ஒரு செய்தியை மிக அழகாக சொல்கிறார். ஒரு மீன் வளர்க்கலாம் என்று ஒரு குழந்தையிடம் கேட்கிறபோது தினமும் கவனிக்கவேண்டும்.அதற்கெல்லாம் வாரந்தோறும் மீன் தொட்டியை சுத்தப்படுத்தலாம் பின் ஒருசில மீன்களுக்கு சண்டை வரும். அவற்றை விரட்டி விடலாம் சில மீன் குட்டி போடும் அவற்றைத் தனியே அடைத்து வளர்க்கலாம். அது ஒரு தனி சுகம் என்கிறார் ஒருவர். அதையெல்லாம் கேட்ட ஒரு குழந்தை இதெல்லாம் நடக்க சுமார் ஒரு ஆண்டு ஆகும். இதையே ஒரு மணி நேரத்தில் வீடியோ கேமில் முடித்து விடுவேன் என்று சொல்லிக் காட்டுகிறது. அந்த குழந்தை மூலம் எப்படி இளைய தலைமுறை வெகுநேரமாக மரியிருப்பதை பற்றிய பல தகவல்களை இந்த நூலில் சொல்லியிருக்கிறார். உலகம் வேகமாக ஓடிட்டு இருக்கு மச்சி நாமும் சேர்ந்து ஓடணூம்.

வேகம் பொறுமை நிதானம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இளைய தலைமுறை சொல்லுகிற அதே சமயத்தில் உரிமையும் கடமையும் எப்படி வெற்றிக்கு மையமாக இருக்கிறது என்பதை பல கட்டுரைகள் சொல்கின்றன.பல முன்னேற்ற வெற்றியாளர்கள் முன்னேற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள் குறிப்பிடும் புராணக்கதைகள் பற்றிய குறிப்புகளும் விவரங்களும் அதிகம் இல்லாமல் இந்த தொகுப்பு அமைந்திருப்பது ஒரு முக்கியமான தன்மை என்று சொல்லலாம். பெரும்பாலும் சுயமுன்னேற்ற விஷயங்களை புராணக் கதைகளை முன்வைத்து நகர்த்துவது சிலரின் பாணியாக இருக்கிறது. அந்த பாணி ஓரளவு தவிர்க்கப்பட்டு இருப்பது அவருடைய முக்கியமான அம்சம் என்று சொல்லலாம்.

பிறர் பற்றிய வெறுப்பு எப்படி ஒரு வகையில் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது என்பதை ஒரு கட்டுரை சொல்கிறது. வெறுப்பு எவ்வாறு உந்து சக்தியாக மரி வெற்றியினை தருகிறதோ அதுபோல வெற்றிக்குப்பின் ஒருவரின் வெற்றி பிறருக்கு வெறுப்பைத் தருகிறது. தனி ஒருவரின் வெறுப்பு இப்படியிருக்க தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அதனை ஏற்படுத்திய அந்த சமூகத்தின் மீது அதற்கு காரணமான இந்த சமூகத்தில் குறிப்பிட்ட தன் மீது வெறுப்பு என்பது தடையாக கொடுக்கப்படுகிறது என்பதை உளவியல் ரீதியாக சில கட்டுரைகளில் வெளிப்படுத்துகின்றன.

இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களுக்கு அதில் மாறுபட்ட கருத்துக்களை விமர்சனமாக வருமாயின் அதை சகித்துக் கொள்வது எந்த இனத்திற்கும் இது எழுதிய எழுத்தாளருக்கு மரியாதை என்பதை ஒரு ஜனநாயக ரீதியான எண்ணமாக்கி இதை முன்வைத்திருக்கிறார். இது ஒரு முக்கியமான அம்சமாக கூட நாம் சொல்லலாம். உழைப்புக்கு அதிர்ஷ்டத்திற்கும் சம்பந்தம் உண்டா என்ற ஒரு விவாதம் கூட இந்த புத்தகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரியப் வெற்றிகளை பெற சில சந்தோஷங்களை தியாகம் செய்வதில் தவறில்லை. அதற்குத் தேவை சுயக்கட்டுப்பாடு என்று அம்சங்களும் இன்றைய இளைய தலைமுறை மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது ( இதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விலை ரூபாய் 120 )

dr vijayakarthi 450“ஒரு கப் காபி சாப்பிடலாமா.. உங்கள் வெற்றிக்கான 30 ரகசியங்கள் “ என்பது டாக்டர் விஜய கார்த்திகேயன் இன்னொரு நூலாகும். முன்பு ஒரு நூலில் பதிமூன்று ரகசியங்களை சொன்னவர் இந்த நூலில் 30ரகசியங்களைச் சொல்கிறார். அனைத்தும் வெற்றிக்கானவை. அவை பெரும்பாலும் இது போன்ற சுய முன்னேற்ற நூல்களில் வெற்றிக்கான அம்சங்களை சொல்கிற போது உதாரணமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை மேற்கோளாகவும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து எடுத்துக்கொண்ட சில சம்பவங்களை எடுத்து விளக்குவதும் சகஜம். அப்படித்தான் இந்த நூலிலும் விளையாட்டு வீரர்கள் தென்படுகிறார்கள் அதில் ஒருவர் டென்னிஸ் வீரர் செர்பிய நாட்டைச் சேர்ந்தவர் நோவக் ஜோகோவிக்.

2011 ஆம் ஆண்டிற்கு பிறகு பதினெட்டாம் ஆண்டு வரை பாதி மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். ஒரு காலத்தில் தோல்வியிலிருந்து வெளியேறியவர். மீண்டும் என் வாழ்வில் எப்போது அல்லது டென்னிஸ் விளையாட வேண்டும் என்று தெரியாதவர் என்ற நினைப்பில் வேதனைப்படுத்திக் கொண்டவர். ஆனால் அவர் பின்னால் தொடர்ந்து விளையாட்டில் சாதனை புரிந்து அதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்.

இதில் குறிப்பிடப்படும் அரசியல்வாதி பெண்மணியை எடுத்துக் கொண்டபோது நல்ல விஷயம் என்பது தெரிகிரது. மார்க்ரெட் தாட்சர் இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி. அவரிடம் பிபிசி வானொலி ஒரு கேள்வியைக் கேட்கிறது. அது மிகப்பெரிய வெற்றிகளை குவித்து இவ்வளவு உயரத்தை அடைந்து விட்டீர்கள் ரகசியம் என்ன.. அவர் சொல்கிறார் என் பழக்கங்களை சரியாக பின்பற்றுவது தான் முக்கியமான காரணம்.. இது போல பல்வேறு விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள்.

சாதனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை வெற்றிக்கான படிகளாக அவர் சொல்கிறார். மாற்றம் தன்னிடமிருந்து கிளம்ப வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அப்படித்தான் அவர் கோவை நகரில் பணியில் இருந்தபோது சில பகுதிகளில் கட்டடங்கள் மீது திறந்தவெளியில் வண்ணங்கள் மிகுந்த ஓவியங்களை வரைவதற்காக ஒரு முயற்சியை இத்தாலி நாட்டு சீட் ஆர்ட் வல்லுனர்களையும் வைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் துவங்கி நகரின் கலாச்சாரம் மக்களின் வாழ்வியல் முறை வெளிப்பாட்டிற்காக அதை பயன்படுத்தியதை உதாரணமாகச் சொல்லலாம். ஒரு காபி சாப்பிடுவது என்பது உடலுக்கு புத்துணர்வு தருவதாகவும் அப்படித்தான் 30 காபி அவ்வப்போது சாப்பிட்டு ஒரு பெரிய ஊக்க விஷயங்களை இந்த நூலில் அவர் தெரிவித்திருக்கிறார், இதை சப்னா புத்தக நிலையம் கோவை வெளியிட்டிருக்கிறது இதன் விலை ரூபாய் 100

மூன்று நூல்கள் மூலம் பல வெற்றிப்படிக்கட்டுகளை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ள சாதனமாய் இந்நூல்கள் விளங்குகின்றன.

Pin It