2001

சனவரி

அயோக்கியத்தனம்

கீழ்வெண்மணி, கொடியன்குளம், தாமிரபரணி, மேலவளவு, புளியங்குடி... இன்னும் இன்னும் கொடூரங்களை நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்திக் கொண்டே இருங்கள். நாங்கள் கோமதிநாயகம் கமிஷன், மோகன் கமிஷன் அறிக்கைகளை அமைத்து ஆட்சியைக் காப்பாற்றி விடுவோம் என்று கமிஷன்கள் அரசுக்கு உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மோகன் கமிஷனின் அறிக்கை அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு.

 – கனல்

அருந்ததியர்கள் மீது திணிக்கப்படும் அசிங்கம்

தலித் என்ற சொல் முழுக்க முழுக்க அருந்ததியினருக்குதான் பொருந்தும். காரணம், தலித் என்ற சொல்லுக்குள் ஒளிந்துகிடக்கும் உட்சாதி ஆதிக்கங்களுக்கு பலியாவது இவர்கள்தான். இவர்கள் இன்னும் அடிப்படை உரிமைகள் கூட முழுமையாகக் கிடைக்கப்பெறாத நிலையில் செருப்புத் தைத்து வறுமையிலும் உயிரைப் பணயம் வைத்து மலக்குழியிலும் வாழ்க்கையைத் தொடரும் இம்மக்களின் அடுத்த தலைமுறையாவது விடுதலை பெறவேண்டும். போராட்டமே வாழ்க்கையான நிலையிலும் போராட வழியின்றி வழிநடத்த ஆளின்றி தவிக்கின்றனர் இம்மக்கள்.

– மீனாமயில்

ச்சீ... ச்சீ... இந்து மதம் வேண்டாம்!

‘மாட்டுக்கு போடுறதுக்காக பக்கத்து கிராமங்களுக்கு கோரைப்புல்லை பிடுங்கப் போனால் ஆதிக்க சாதிக்காரங்க போலிஸ்ல புடுச்சிக் கொடுக்கறாங்க. போலிஸ்காரங்களும் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் திருட்டு கேஸ்ல உள்ள வைக்கறாங்க. போன வாரம் கூட அஞ்சு பொம்பள பிள்ளைகளை புடிச்சிட்டுப் போயிட்டாங்க. தாழ்த்தப்பட்டவங்களா பொறந்துட்டோம், நாங்க என்ன செய்ய முடியும்?” என்கின்றனர் வேலம்மாளும், எலிசபெத் ராணியும். இவர்கள் இருவரும் அண்மையில் இசுலாத்திற்கு மாறியவர்கள்; தங்களுக்கு சூட்டப்பட்டஇசுலாமியப் பெயர்கள் கூட இவர்களுக்கு நினைவில்லை.

– மீனாமயில்

‘2000 ஆண்டு காலமாக தமிழர்களின் பண்பாடு வேறானது; ஆரியப் பண்பாடு என்பது வேறானது. தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தங்களை தமிழர்களாகக் கருதாதவர்களை என்னதான் சொல்வது? இங்கு இருந்துகொண்டே சமஸ்கிருதம் தங்களுக்கு தாய்மொழி என்று கூறி அதை உயர்வாகவும், தமிழைக் கீழாகவும் நினைக்கிறார்கள். தமிழை ஏற்க மறுப்பவர்களை நாங்கள் ஏற்க மறுப்பதில் என்ன தவறு?

– பழ. நெடுமாறன் : ‘தலித் தலைமை தாங்கினால் இரட்டிப்பு மகிழ்ச்சி' 

பிப்ரவரி

அம்பேத்கருக்கு வயலின் வாசிக்கக் கற்றுத் தந்தோம்

பாபாசாகேப்பின் கைகளில் வலி ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அப்போதுஅவர் ஓவியம் தீட்டுவதில் நாட்டம் கொண்டு அதில் ஈடுபட ஆரம்பித்தார். அப்புறம் வயலின் பயிற்சி நின்று போனது. அவர் டெல்லிக்குச் சென்று விட்டதும் ஒரு காரணம். டெல்லியில் முகர்ஜி என்பவர் அவருக்கு வயலின் கற்றுத் தந்தார் என நான் கேள்விப்பட்டேன். வயலின் கற்றுத் தந்ததன் மூலம் அப்படியொரு மகத்தான அறிஞரோடு எனக்கு ஏற்பட்ட உறவை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். அவருடனான சந்திப்பு, எனக்கு வாழ்க்கை அளித்த மிகப்பெரும் பரிசு என எண்ணுகிறேன்.

– பல்வந்த் சாத்தே

தலித்மயமாக்கல்

இன்று, உலக முதலாளியம் முன்வைக்கும் முதல் கோரிக்கை அரசுக் கட்டுப்பாட்டை நீக்குதல் என்பது. இங்குதான் உலக முதலாளியத்திற்கும் தலித் மக்களுக்குமான முரண்பாட்டின் அடிப்படை வேர் கொண்டுள்ளது. அம்பேத்கரின் காலத்தில் அரசுத் துறை என்பது உருக்கொண்டு வளர்ந்து கொண்டிருந்தது. அரசுப் பணிகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், எண்ணிக்கையில் குறிப்பிடத் தக்கவையாகவும் இருந்தன அன்று. இன்று நிலைமை தலைகீழ் Zero job என்று அரசு முழங்கும் காலம் இது. இன்றைய சூழலைப் புரிந்து கொண்டு நாம் நமது கோரிக்கைகளைப் புதுப்பிக்க வேண்டும்; புதிதாக உருவாக்க வேண்டும். உலக முதலாளியம் உருவாக்கியுள்ள அத்தனை மாற்றங்களும் இன்றைய சூழலில் தலித் மக்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

– அ. மார்க்ஸ்

விசாரணை கமிஷன்கள் பற்றி ஒரு விசாரணை ரவிக்குமார் எதற்காகப் போராடினாய் இந்திராணி? இலக்கியா சுவாமி சகஜானந்தா சி. தங்கராஜ் ’நந்தனின்' நவீன தீண்டாமை புலேந்திரன் வரலாற்றில் மறைக்கப்பட்ட நம்மினப் போராளிகள் கவுதம சன்னா இடஒதுக்கீடு இனி இல்லை ஸ்டீபன்

தேர்தல் முறையில் தீர்வு இருக்கிறது என்று நம்பக்கூடாது. நம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், நம்மாள் எம்.எல்.ஏ., எம்.பி. ஆனால் நம் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு மாயை என்று அம்பலப்படுத்துகிறோம். சட்டமன்றத்தை ஒரு போராட்டக் களமாகப் பார்க்கலாம். ஆனால், அதையே தீர்வாகப் பார்க்கக் கூடாது.

 – பூ. சந்திரபோஸ் : ‘தேர்தல் முறையில் தீர்வு இல்லை' 

மார்ச்

நஞ்சை விற்பவர்கள்

உதட்டளவில் தலித் அரசியல் பேசிக் கொண்டு நடைமுறையில் இதுநாள் வரை எதிர்த்துக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் மற்றும் மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்வது என்பது எந்த அம்பேத்கரிசத்தில் இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. நாம் இதுநாள் வரை எதிர்த்துவந்த சாதி அமைப்பை கட்டிக் காக்கத் துடிக்கும் பா.ஜ.க. பரிவாரங்கள் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளுக்கு நேர் எதிரானவை. இந்துத்துவாவை உயர் மூச்சாகக் கொண்ட பா.ஜ.க. ஒரு கொடிய நஞ்சு. ஆனால், அது நஞ்சல்ல நல்லது என்று கூவி விற்பவர்கள் ...? – தலையங்கம் 

ஒதுக்கப்பட்டவர்களே

ஒதுக்கும் புதிரை வண்ணார்கள்

சட்டம் மட்டும் ஒழித்திருக்கும் தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் சமூகம் ஒழிக்க, புதிரை வண்ணார் போன்று எண்ணிக்கையில் குறைவாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டும் இருக்கும் மக்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். பிற சாதியினர் தங்களை அடிமைப்படுத்துவதை உணர்ந்து போராட்டத்தில் இறங்கியிருக்கும் தலித் மக்கள், முதலில் தங்களை சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்னொருவரை அடிமைப்படுத்திவிட்டுத் தனக்கான விடுதலைக்கு மட்டும் குரல் கொடுப்பது, எவ்வளவு கேவலமான விஷயம்? அப்படியே தலித் மக்களுக்கு விடுதலை கிடைத்தாலும், அது சமூக விடுதலையாக இருக்காது. மாற்றம் வேரிலிருந்து வரவேண்டும். அப்பொழுதுதான் ஒட்டுமொத்த சமூக விடுதலை என்பது சாத்தியமாகும்.

– மீனாமயில் 

ஏப்ரல்

தெகல்கா டாட் ராம்

ஆயுதங்கள் வாங்கப்படவில்லை; ஆனால், ஆயுதங்கள் விற்பதற்குத் தேவையான கையூட்டுகளைப் பெறக்கூடிய 31 மனிதர்கள் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தரப்பட்டுள்ள விலை ரூ.11 லட்சம். இந்திய அரசியலில் இது ஆச்சரியத்துக்குரியது அல்ல. ஆட்சிகள் மாறினாலும் அதிகார வர்க்கங்களின் இந்த பேரங்கள் தொடரவே செய்கின்றன. அரசியல் தலைவர்களின் தலைகள் அவ்வப்போது உருளுகின்றன. ஆனால், இந்த அதிகார வர்க்கம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு விடுகிறது. இந்த அதிகார மட்டத்தை தலித் மக்கள் நெருங்கக்கூட முடியாது. அத்தனைபேரும் பார்ப்பன – பனியாக்கள்தான். பெரும் தொழிலதிபர்களின் சுரண்டலுக்காக, இந்தப் பார்ப்பன உயர்சாதி அதிகார வர்க்கம், மிக எளிதாக சட்டங்களை உருவாக்கி பேரங்களை முடித்து விடுகின்றன.

– விடுதலை க.ராசேந்திரன்

காஞ்சீவரமா? காஞ்சிபுரமா?

பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டிய புத்தர், பார்ப்பனர்களின் தலையாய கொள்கையான சுயநலத்தை ஒதுக்கி, தியாகத்தை ‘காவி' நிறத்தில் தந்தார். பவுத்தத் துறவிகளின் அய்ந்து பொருட்களில் காவி உடையும் ஒன்று. இது, துவராடை, காஞ்சீவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது (‘காஞ்சி' என்றால் காவிநிறம், ‘சீவரம்' என்றால் மேலாடை) இத்துணிகளை பெருமளவு அணிந்த துறவிகள் வாழ்ந்ததால், காஞ்சீவரம் என்றே தொண்டை மண்டலத் தலைநகரம் அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைக்கத்தான் தற்போது காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டுள்ளது. – கவுதம சன்னா

தலித் மக்கள் மதம் மாறக்கூடாது தி.மு.க. அரசின் மக்கள் விரோத ஆணை ஆப்கான் நாட்டின் ஆர்.எஸ்.எஸ்.

விடுதலை க.ராசேந்திரன் ஜாதி வெறிக்கு மேலவளவு பாடம் கற்பிக்குமா? ஜெயராஜ் பெண்களின்

முன்னேற்றமே ஆண்களின் விடுதலை அன்னை மீனாம்பாள் சினிமாவும் தலித் சினிமாவும் குட்டி மதமாற்றம் பாலையா டாக்டர் அம்பேத்கரின் தேர்தல் பிரச்சாரம் கவுதம சன்னா விதைக்கப்பட்ட ஆர்.கே.எஸ். எஸ்.நடராஜன்

அவலத்தில் புரளும் தோல்பதனிடும் தொழிலாளர்கள் அழகிய பெரியவன்

ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது, அந்த நீதிபதி சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். நீதிபதிகள் நீதிச்சான்றோர்கள் (Judicial statemen) என்பது என் கருத்து. அப்படி அவர்கள் செயல்படும்போதுதான் மக்களின் நன்மைக்கு உதவும் விதத்தில் அரசமைப்புச் சட்டத்தை அர்த்தப்படுத்த முடியும். ஆனால், இது அந்தந்த நீதிபதிகளைப் பொருத்த விஷயமாகும். – நீதிபதி கே. ராமசாமி : ‘தனியார்மயமாக்கல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' 

பெண்களுக்கான மொழியே நமக்குக் கிடையாது. தொல்காப்பியத்திலிருந்து எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மொழி என்பது, ஆண்கள் தங்களுடைய அதிகாரத்தைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் ஆணை மய்யப்படுத்திய மொழியே உள்ளது.

– பாமா : ‘எழுத்து எதிர்ப்புணர்வுக்கான ஆயுதம் '

மே

எர்ரம்பட்டி தலித் மக்கள் மீதான வன்கொடுமை

ஏப்ரல் 14 தலித் மக்கள் அனைவரும் அம்பேத்கர் பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்பார்கள். மதுரைக்கு அருகிலிருக்கும் எர்ரம்பட்டி கிராம தலித் மக்களும் அதே நோக்கத்தோடுதான் அம்பேத்கர் படத்தை அலங்கரித்து, ஒலி பெருக்கிகள் கட்டி விழாவிற்குத் தயாரானார்கள். ஆனால், அன்றைய நாள் அவர்கள் எதிர்பார்த்தது போல் மகிழ்ச்சியான நாளாக அமையவில்லை. மாறாக... காலை 11 மணியளவில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 100 பேர் கொண்ட கும்பல் கம்பி, கடப்பாறை, கம்பு போன்ற ஆயுதங்களுடன் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பினுள் நுழைந்து ஆவேசமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. கும்பலின் ஒரு பிரிவு, வீடுகளைத் தீக்கிரையாக்கி தாக்குதல் நடத்திக் கொண்டு செல்ல, மற்றொரு பிரிவு வீடுகளில் புகுந்து, நெல் விற்று வைத்திருந்த பணம், நகை, பாத்திரங்களைக் கொள்ளையடித்து, வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆடு,மாடுகளை அவிழ்த்துச் சென்றுவிட்டது. கதறியழுத பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கூட கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து சுமார் 200 அடி தூரத்தில் தனியேயிருந்த காலனி வீடுகளையும் தாக்கி, தொலைக்காட்சிப் பெட்டி, மின் விசிறிகளை உடைத்துள்ளனர் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள்.

 – ரஜினி

தீவிரவாதிகளாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்

இன்றைய சூழலில், இசுலாமியர்களுக்கு பல முக்கியப் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, இசுலாமியர்கள் அந்நியர்களாகவும், தீவிரவாதிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை, வாழ்வதற்கான உரிமை என்பதே அவர்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. அவ்வப்பொழுது ஆயிரக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துத்துவா அமைப்புகளின் ஆயுதங்களுக்கு இரையாகின்றனர். எதிர்த்தாக்குதலுக்கு ஆயுதத்தைக் கையிலெடுத்த இசுலாமியர்களுக்கு ‘தீவிரவாதிகள்' என்ற இணைப்பெயர். இரண்டாவது பிரச்சனை – கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு இல்லாதது. இங்கு வாய்ப்பில்லாததால்தான் இசுலாமியர்கள் பிழைப்பு நாடி வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல். இதனால் வெளிநாட்டிலிருந்து நிறைய பணம் கிடைக்கிறது, ஆயுதங்கள் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. – மீனாமயில்

சுரண்டப்படும் பீடி தொழிலாளர்கள்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான கூலி, பீடி முகவர்களிடமிருந்து இந்தத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுத்தல், ஒழுங்கான மருத்துவ வசதி, தொழிலாளர் நலச் சலுகைகள், இந்தத் தொழிலை சிகரெட் தயாரிப்பு போல நவீனப்படுத்துதல் போன்றவை உடனடித் தேவையாகும். பீடித் தொழிலாளர்கள் குறித்த முறையான ஒரு கணக்கெடுப்பும் அவசியமாகிறது. குழந்தைத் தொழிலாளர்களை மீட்க, அரசு இந்தத் தொழிலை தரப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.

– அழகிய பெரியவன்

சூன்

வெள்ளை திபெத்

சீனா, அணுக் கழிவுகளைக் கொட்டும் குப்பைக் கூடையாக திபெத்தை பயன்படுத்துகிறது. திபெத்தின் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 1,75,000 பேர் அகதிகளாகியிருக்கிறார்கள்(இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் திபெத்திய அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்) திபெத்திய உணர்வை அறவே ஒழித்திட சீன அரசாங்கம் இரு வழிகளில் முயன்று வருகிறது. உண்மையான திபெத்திய எல்லைகள் மாற்றப்பட்டு, திபெத்திய இடங்கள் சீனாவுடன் இணைக்கப் பெற்றும் சீனாவிலிருக்கும் சில இடங்கள் திபெத் எல்லையுடன் இணைக்கப்பட்டும் புதிய தன்னாட்சி திபெத் மாகாணத்தை சீன அரசு உருவாக்கியுள்ளது.

அய்ம்பது ஆண்டுகளாக சீன மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக திபெத்தினுள் அனுப்பியும், திபெத்தியர்களை சீனாவெங்கும் பரப்பியும் திபெத் என்ற நாட்டை முழுவதுமாய் அழித்துவிட முனைந்துள்ளது. – மாயா

 ***

அருந்ததியர் மக்களின் பண்பாடே இந்து மதத்திற்கு எதிரானதுதான். நாங்கள் கும்பிடுகிற சாமி மதுரை வீரனாகவும், ஒண்டி வீரனாகவும்தான் இருக்குமே தவிர, இந்து மதக் கடவுள்கள் அல்ல. நாங்கள் வசிக்கிற குடியிருப்புகள், எங்கள் திருமணச் சடங்குகள் அனைத்தும் இந்து மதத்திலிருந்து வேறுபாடானதாக இருக்கும். ஆகவே, நாங்கள் இந்துக்கள் அல்லர்.

 – எஸ்.டி. கல்யாண சுந்தரம் : ‘அருந்ததியர்கள் ஒரு தனித்த தேசிய இனம்' 

டர்பன் மாநாடு, சாதிப்பாகுபாட்டிற்கு மட்டுமின்றி இந்திய அரசியல் தலைமைக்கும் எதிரான சவாலாகும்; இன்றைய இந்துத்துவ சக்திகளின் வகுப்புவாதக் கொள்கைக்கும் சவாலாகும். அய்ரோப்பிய யூனியன் நமது பிரச்சனைக்கு செவிசாய்க்கத் தொடங்கியுள்ளது. தனது வர்த்தக உறவுடன் சம்மந்தப்பட்ட இந்திய நிறுவனங்களில் பாகுபாடற்ற முறையில் வேலைவாய்ப்பு வழங்க திட்டம் வைத்திருக்கிறது.

 – ஹென்றி திபேன் : ‘தலித்துகளுக்கு எதிரான இந்திய அரசு' 

சூலை

ரத்தத்தால் எழுதிய செய்தி

தனது பிம்பம் திரைப்படத்தில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் படத்தைத் தடை செய்யக் கோரினார் பூலான்தேவி. ‘உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அதைப் படம் பிடித்துக் காட்டுவீர்களா?” எனக் கேட்டார். ஆனால் அரசியல் தளத்திலும் அதே காரியம்தான் நடந்தது என்பதை அவர் உணரவில்லை. அவரது பிம்பம் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் வரையப்பட்டது; அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை.

 – ஆதவன்

சுடுகாடாய் சங்கனாங்குளம்

சங்கனாங்குளம் போல் இன்னும் எத்தனை ஊர்களில் தலித் பெண்கள் ஆதிக்க ஆண்களின் அக்கிரம வெறிக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனர். அவை யாருமே கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே தலித் பெண்கள் மீதான தாக்குதல் என்பது காற்றடிப்பது போல, மழை பெய்வதுபோல இயற்கையான ஒன்றுதான் என்ற வாதத்தை வலுப்படுத்தவே செய்கிறது. பெண்களை வெறும் உடலாகப் பார்க்காதீர்கள் என்கிற வாதங்கள் தீவிர மடைந்து வருகின்றன. தலித் பெண்கள் வெறும் ‘பெண் உறுப்பாக' மட்டுமே பார்க்கப்படுகின்றனர். அதனாலேயே கம்யூனிஸ்டுகள் எதிர்பார்க்கிற வர்க்க வேறுபாடுகள் அழிந்த பின்னும், தலித் மக்கள் எதிர்க்கிற சாதி ஒழிந்த பின்னும் கூட பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள் விடுதலை வேண்டி இன்னொரு நூற்றாண்டுப் போராட்டத்திற்குத் தயாராக வேண்டியிருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. – மீனாமயில் 

ஆகஸ்ட்

சாதிஉள்நாட்டுப் பிரச்சனையா?

ஆகஸ்ட் மாதத்தை இனி ‘இனவெறி எதிர்ப்பு மாதமாக' வரலாறு வரித்துக் கொள்ளும். நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்கா – தகுதிவாய்ந்த இடமாக, குற்றவுணர்வு கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இனவெறிக்கு எதிராக உலகம் களமிறங்க வேண்டிய இடம் இந்தியா என்பது, எப்படி தங்களது பார்வையிலிருந்து போனதோ? இன ஒதுக்கலை விட கொடூரமான முறையில் இயங்கும் சாதியும், தீண்டாமையும் 30 கோடி தலித் மக்களை நாள்தோறும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான மக்கள், ஜப்பானியர்களைப்போல ஒன்றரை மடங்கு அதிகமான மக்கள் தொகையுள்ள தலித் மக்கள், இன ஒதுக்கலுக்கு ஆளாவது உலக அரங்கில் இப்போதுதான் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

– கவுதம சன்னா

ஜாதி தடையில்லை (எஸ்.சி./ எஸ்.டி. தவிர)

இனவெறி இந்தியாவில் ஜாதி வெறியாக உருப்பெற்றிருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டே மணமேடை விளம்பரங்கள். இந்தியாவில் ஜாதி உயிர்ப்புடன் இருப்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? எந்தவிதமான உறுத்தலுமின்றி ஜாதியை நிலைநிறுத்தும் நோக்கத்திற்காக இந்த மணமேடை விளம்பரங்களைத் தடை செய்யவும், ஒழுங்குபடுத்தவும் நாம் போராட வேண்டியது அவசியமாகிறது. – அழகிய பெரியவன் 

செப்டம்பர்

மாற்று மின்சாரத்தைப் பரிசீலியுங்கள்

கதிர் வீச்சு ஆபத்துகளால் உலகம் முழுவதும் அணுமின் நிலையங்கள் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் சென்னை கல்பாக்கத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் மற்றொரு முன்னோடி வேக அணு ஈனுலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் அணு ஆற்றல் துறை இறங்கியுள்ளது. ஏற்கனவே இங்குள்ள இரண்டு அணு உலைகள், பல கோடி ரூபாய் முதலீட்டை விழுங்கி எதிர்பார்த்ததைவிட பாதியளவு மின்சாரதையே உற்பத்தி செய்ய முடிகிறது. சுற்றுச் சூழல் கண்ணோட்டத்திலும் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் இந்த முறை ஏற்கக்கூடியதல்ல. இந்த ஆபத்தான அணுமின் நிலையத்தைக் கைவிட்டு மாற்று முறை மின்சார உற்பத்தியினை பரிசீலிக்க வேண்டியது அவசியம். – பெரியார் தி.க. தீர்மானம்     

 இந்தியாவில் இனவெறி இப்படித்தான் விடியல் ஜாதியம் வர்ணாசிரம இனவாதமே முடக்காத்தான் பாண்டியன் படுகொலை ஜெயராஜ் ரத்னம் ஒரு நாடு பறிக்கப்பட்ட கதை மாயா நாடு கட்டமைப்பும் சாதி ஆதிக்கமும் விடியல்

தீக்கிரையான திராசு சேரி சுரேஷ் இனவெறியும் இனவெறிக்கெதிரான எழுச்சியும் மாயா

தேசிய விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருக்கும் நிலையிலும்கூட, சாதிப்பிரச்சனை தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, தன்னை அழித்துக் கொள்ளவில்லை. உள்ளுக்குள் அது கனன்று கொண்டிருக்கிறது. கீறிப் பார்த்தால் தெரியும். நாளை வெள்ளைக்காரனிடமும் சாதிப் பிரிவினையை இவர்கள் உருவாக்கிவிடுவர்.

– டொமினிக் ஜீவா : ‘நாங்கள் அழுக்குத் தண்ணீரைக் குடித்து நீந்தியவர்கள்'

பண்பாட்டுத் தளத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராடிய பெரியாரை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லை. அவரை ‘பாசிஸ்ட்' என்று முத்திரை குத்தினார்கள். ‘பிராமண துவேஷம்' என்ற சொல்லையே கம்யூனிஸ்டுகள்தான் உருவாக்கினார்கள். ஒட்டுமொத்த ‘தமிழ் துவேஷ'த்தை இவர்கள் புரிந்து கொள்ளாததுதான் இதற்கெல்லாம் காரணம்.

 – தொ. பரமசிவன் : ‘பார்ப்பனர்களுக்கு அதிகாரமே உணவு'

அக்டோபர்

கடல் கடந்த தலித் குரல்

சாதி அமைப்புக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, இருநூறுக்கும் மேற்பட்ட தலித் பிரதிநிதிகள் பங்கேற்ற முதல் உலக மாநாடு தென்னாப்பிரிக்காவில், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்றது. இது, இனவெறிக்கு எதிராக அய்க்கிய நாடுகள் நடத்திய மூன்றாவது மாநாடாகும். இன ஒதுக்கலுக்கு எதிரான போராட்டக்களத்தில் வெற்றி வாகை சூடிய தென்னாப்பிரிக்க அரசு, தனது நாட்டிலேயே இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்வந்தது.

உலகம் முழுவதிலுமிருந்தும் 7000 பிரதிநிதிகள் கூடி, இனவெறி தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை விவாதித்தனர். இந்தியாவின் சாதி மற்றும் தலித் பிரச்சனைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட முதல் மாநாடும் இது தான். மாநாட்டில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்தும் 200க்கும் மேற்பட்ட தலித் பிரதிநிதிகள் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் கூடி இருந்தனர். – விடுதலை க. ராசேந்திரன்

கே. டேனியேல்

தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்திலும் இலக்கியத் தளத்திலும் கே.டானியல், கணேசலிங்கம், ஆழியான், டொமினிக் ஜீவா, சொக்கர், தெனியான் போன்றவர்கள் தலித் படைப்பிலக்கிய முன்னோடிகளாகப் போற்றப்படுகின்றனர். இவர்களுள் கே.டானியலின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

 – யாக்கன்

நவம்பர்

ஜனநாயகவாதிகள் எங்கே?

தமிழகத்தில் ஒரு சில ஊராட்சி ஒன்றியங்களில் தலித் மக்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல்கூட செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதில் ஒன்று மதுரை மாவட்டம். உசிலம்பட்டியில் 15 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 33 பேர் நகராட்சித் தலைவர் பதவிக்கும், 17 பேர் கவுன்சில் வார்டு பதவிக்கும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒருவர் கூட தலித் இல்லை என்பது, ஜனநாயகத்தின் வெட்கக்கேடான நிலையைப் பிரதிபலிக்கிறது. – அன்புசெல்வம்

அரசமைப்பின் முகப்புரை

எல்லா சட்டத்திற்கும் முகப்புரை என்பது, அதைப் புரிந்து கொள்வதற்கான ‘சாவி' போன்றதென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசமைப்புச் சட்ட முகப்புரை, We the people of India ‘இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்குகிறது. இது மிக முக்கியமான செய்தியை வழங்குகிறது. எப்படியெனில், முகப்புரை தயாரித்த குழு (நேரு) We the Nation of India ‘இந்திய தேசமாகிய நாம்' என வழங்கியது. இதை மாற்றி இந்திய மக்கள் என அழைக்க வைத்தது டாக்டர் அம்பேத்கர்தான்! – கவுதம சன்னா

டிசம்பர்

இது அடிப்படைவாதமில்லையா?

பெண்கள் உடலின் எந்த ஒரு பகுதியும் வெளியில் தெரியக்கூடாது என்று ஆப்கானின் தாலிபான்கள் நம்புவதை அடிப்படைவாதம், காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கும் உலகம், தலித் மக்களை மத அமைப்புகளுக்குள் நுழைய அனுமதி மறுத்து அவர்களுக்கு சம உரிமையை அளிக்க மறுக்கும் இந்து பார்ப்பனியத்தை மட்டும் கண்டிக்காதது ஏன்? – காஞ்சா அய்லைய்யா

பாகிஸ்தான் தலித்துகள்

பாகிஸ்தான் என்றதுமே நம் கண்முன் நிறுத்தப்படும் காட்சி, ‘இந்தியாவுக்கு எதிராக காய்களை நகர்த்தும் நாடு', ‘இஸ்லாமிய மதவெறியர்களை ஊக்குவிக்கும் நாடு' என்பதுதான். ஆனால், இந்தியாவில் இருப்பது போலவே அங்கும் தலித் மக்கள் உள்ளனர் என்பதும் அவர்கள் வன்கொடுமைக்கு ஆட்படுகின்றனர் என்பதும் பத்திரிகைகள் நமக்கு சொல்லாத செய்தி. ஆம், பாகிஸ்தானில் ஒன்றரை கோடி தலித் மக்கள் உள்ளனர். சிந்து மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிரைகி என்ற இடத்திலும் இவர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள்.

– சுரேந்தர் ஹேமன் வலசை

வெள்ளை மாளிகையின் மேல் விழõத குண்டு மாயா கண்டனம் தண்டனையாகுமா? செவ்வந்தி உள்ளாட்சித் தேர்தல் படிப்பினைகள் அழகிய பெரியவன் காஞ்சியில் மாட்டுக் கறி விற்கத் தடை விடுதலைக்காக வெளியேறிய

தலித்துகள் விடியல் பட்ஜெட் ஒரு தலித்துக்கு 12 பைசா கவுதம சன்னா சமூகம் சீரழிகிறது; யுத்தம் செழிக்கிறது கல்பாக்கம் அணுசக்தி ஆலை எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர்கள் போராட்டம் விடியல் கியூபா: தொடரும்

புரட்சி மாயா குழந்தைகளின் கல்வியைத் திருடியது யார்? சாயா உதேன்

அமெரிக்கா தனது கொள்கைகளாகக் கூறிக்கொள்கிற ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை, பேச்சுரிமை, கூடுவதற்கான உரிமை, சர்வதேசச் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் நடவடிக்கைகள் இல்லை; அது தன் சுயநலத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது என அரபு மக்கள் எண்ணுகின்றனர். – எட்வர்ட் செய்த் : ‘பயங்கரவாதம் அமெரிக்க எதிர்ப்பின் மறுபெயராகிவிட்டது'

Pin It