பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்
விலை ரூ.45

"புத்த சமயத்தை மறுபடியும் வகுத்தவர்கள் முறைப்படுத்தியவர்கள் என முக்கியமாகக் குறிப்பிடப்படும் அனைவரிலும் பெரியார்தான் மிகுந்த புரட்சித் தன்மையராகவும் குற்றம் குறைகளுக்கு இடமில்லாதவராகவும் இருக்கிறார். எப்படியெனில் அவர்தான் புத்தரின் மய்யமான போதனையைச் சுற்றிலும் ஆயிரம் ஆண்டுகாலமாய்ப் பெருகி இருந்த பழைய மரபுகளின் புறப் பெருக்கங்களை, ஏறக்குறைய முழுமையாகத் தவிர்த்து மேற்சென்றார்.''

ஆசிரியர் : ஞான. அலாய்சியஸ் பக்கங்கள் :104 வெளியீடு : புதுமலர் பதிப்பகம், 176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம், ஈரோடு 638 004 பேசி : 0424 2219340


சட்டமும் பெண்களின் பாலியல் உரிமைகளும்
விலை ரூ.70

"பெண்களின் தாழ்வுணர்ச்சியும், அடக்கம், மந்தத்தனம் அடிபணிதலும், பயம் எங்கிருந்து தோன்றுகின்றன. அவளின் வளர்ப்பில், இந்து வளர்ப்பில் (சாதிய), ஆண் ஆதிக்க மரபில் சுற்றுச் சூழலின் இறுக்கத்தில் இருக்கிறது. அமைதியான, சலனமற்ற, எந்திரமான மரபுக் குடும்பத்தைவிட, எழுச்சியும், வீறும் கொண்ட சுதந்திரமான பெண் - ஆண் குடும்பமே இனிமையான, இன்பமயமான வாழ்க்கைக்கு அடிப்படையாகும்.''

ஆசிரியர் : பிளேவியா அக்னீஸ் பக்கங்கள் : 160 வெளியீடு : விடியல் பதிப்பகம் ,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம், கோயம்புத்தூர் 641 015, பேசி : 04222576772


இடஒதுக்கீடும் இடர்ப்பாடுகளும்
விலை ரூ.30

"ஏழ்மையும் தாழ்த்தப்பட்ட தன்மையும் ஒன்றல்ல. தாழ்த்தப்பட்ட நிலை என்பது, சமூகப் பிரச்சினை, ஏழ்மை என்பது பொருளாதாரப் பிரச்சினை. தாழ்த்தப்பட்ட நிலையால் ஏழ்மை நிலை உண்டாக்கப்படுகிறது. ஆனால், ஏழ்மை நிலையால் தாழ்த்தப்பட்ட நிலை உருவாக்கப்படுவதில்லை. ஏழ்மையைத் தீர்மானிக்க, பொருளாதார அளவீடு மட்டுமே போதும். ஆனால், தாழ்த்தப்பட்ட நிலையைத் தீர்மானிக்க பொருளாதார அளவீடு மட்டும் போதாது; சமூக நிலையையும் அளவீடாகக் கொள்ள வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வு என்பது, பிறக்கும் சாதியிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது.''

ஆசிரியர் : செபமாலை ராசா பக்கங்கள் : 120 வெளியீடு : கில் பதிப்பகம், அய்டியாசு மய்யம், 26அ, வாழைத் தோப்பு, சிந்தாமணி சாலை, மதுரை 625001 


விடுதலை வீரர் ராஜு
விலை ரூ.20

"விடுதலை வீரர் தலைவர் ராஜு அய்யா என்றால் மேற்கு மாவட்டங்களில், அவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கோவை போத்தனூரை அடுத்த வெள்ளனூர் கிராமப் பள்ளியில் தீண்டாமை இருப்பதைக் கண்டு கொதித்தெழுந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்துக் கண்டித்து, தீண்டாமையை நடைறைப்படுத்தும் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, பள்ளி நிர்வாகத்தை கதிகலக்கிவிட்டார். நிலைமையின் பாதகத்தை உணர்ந்த தலைமை ஆசிரியரும், பள்ளி நிர்வாகம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டது.''

ஆசிரியர் : எழில் இளங்கோவன் பக்கங்கள் : 70
வெளியீடு : ஆதித்தமிழர் பேரவை,
51, மருதமலைச் சாலை, கல்லூரிப் புதூர்,
கோவை 641 041 பேசி : 0422 2439445 


தலித்துகளும் வன்கொடுமைகளும்
விலை ரூ.50

"தலித் மக்கள் மீதான வன்கொடுமைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியச் சட்டங்களும் நீதியும் அதைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டன. காரணம், சட்டம் நீதியும், ஆட்சியும் அதிகாரம், சாதி உணர்வாளர்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன. அத்தகையோரின் துணையோடுதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. எனவே, தலித் மக்கள் தங்கள் மீது ஏவப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த, வேறுவழிகளைத் தேட வேண்டியவர்களாக உள்ளனர். இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளவை, வெறும் வன்கொடுமைப் பட்டியலாக மட்டும் இல்லாமல், தலித் மக்களுக்கும், தலித் இயக்கங்களுக்கும் தற்காப்பு உணர்வையும், செயல் திட்டத்தையும் உருவாக்கும்.''

பக்கங்கள் : 170 வெளியீடு : தலித் ஆதார மய்யம்,
32, பாரதிதாசன் சாலை, அரசரடி, மதுரை - 625 016
பேசி : 0452 2302199

புகைக்கல்லில் ஓர் புகைச்சல்
விலை ரூ.50

"தமிழகத்தில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நமது சகோதரர்கள் என்று, சரிநிகர் சமானமாக வைத்துப் போற்றுகின்றோம். எந்த மொழி, எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும், தமிழ் மக்களுக்கு நிகராகவே நடத்தப்படும் நல்ல பண்பு உள்ளது. இந்திய குடிமக்கள் அனைவரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, சகல உரிமையும் பெற்றவர்கள். அதில் கர்நாடகா மட்டும் விதிவிலக்காக இருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா? மாநில உரிமைகள் என்பது வேறு. இந்நாட்டு குடிமக்கள் உரிமைகளை ஒரு மாநில அரசு பறித்து விடவா முடியும்?''

ஆசிரியர் : நி. நிஞ்சப்பன் பக்கங்கள் : 66 வெளியீடு : ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக் குழு, அமைதி இல்லம், பென்னாகரம், தருமபுரி பேசி : 94434 58491

.
-தலித் முரசு ஆசிரியர் குழு

 

Pin It