சொல்லின் அடுக்குகள்
Ambedkarதீப்பற்றி எரிகின்றன
புல்லின் நுனிகளும்
பேராயுதங்கள் ஆகின்றன
இன்னும் நிகழும்
அவமானங்களின் அதிகரிப்பில்

மண்ணில் மனிதர்களை சமமாய்
மதிக்க வேண்டும் என்றவரை
கல்லில் சிலையான பின்பும்
கயவர்கள் அவமதிப்பதை
எண்ணில் நெஞ்சம்
எரிமலையாய் வெடிக்குதடா!

விழிகளின் சிவப்பில்
சேகரித்த நெருப்பில்
மொழியினைத் தோய்த்து
தாளினை எரிக்கின்றோம்
உங்கள் உயிரினை நினைத்து!

புரட்சியாளர் சிலையல்ல
அதுவெங்கள் எழுச்சி அடையாளம்
திரட்சியுற்ற
சாதியழிப்புச் சமரின் படைக்கலம்!

விடுதலைப் போரிது எனில்
வெடிகிடங்கு எமதுடல்
படுகளம் வா உனக்கது
உயிரினின்று விடுபடல்
அதைவிடுத்து
சிலையிடம் என்னடா
சிறுசெயல் செய்திடல்?
Pin It