சனாதனிகளே இதற்கு பதில் என்ன? (2)

மராட்டிய மருத்துவர் பகுத்தறிவாளர், தபோல்கர், இடதுசாரி சிந்தனையாளர்கள் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, இந்துத்துவ எதிர்ப்பாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் மோடி ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த கொலைகளை செய்தது கோவாவில் இருந்து இயங்கும் சனாதன சபை (சனாதன் சத் சன்ஸ்தா) எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொள்வதுதான் சனாதன வாழ்க்கை நெறியா? சனாதனிகள் பதில் சொல்ல வேண்டும்.

இந்த அமைப்பை ஒன்றிய ஆட்சி தடை செய்யவும் இல்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்ற தத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்காக இந்துக்களை கொலை செய்ய வேண்டும் என்கிறார் என்று திரித்து பேசும் சங்கிகள் சனாதன எதிர்ப்பாளர்கள் அன்று இந்த நான்கு சிந்தனையாளர்களையும் சுட்டு கொலை செய்தார்களே சனாதனிகள் இதற்கு என்ன பதிலை கூறப் போகிறார்கள். மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்த டாக்டர் தபோல்கர் பூனேயில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது 2013 ஆகஸ்ட் 20ல் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கை விசாரித்த சிபிஐ கொலை செய்தவர்கள் சனாதன சபை என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறியது. 5 ஆண்டுகள் கழித்து அமுல் கலே, ராகேஷ் பங்கேரா மற்றும் அமித் திக்விக்கார் என்ற மூன்று பேரை கைது செய்தது. பூனே நீதிமன்றம் மூன்றே மாதங்களில் இவர்களுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கியது. காரணம் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை என்பதுதான்.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பெங்களூரில் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இடதுசாரி சிந்தனையாளரான கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரி 20ஆம் தேதி உபி மாநிலம் கோலாப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அந்த மூன்று நபர்கள் இந்த கொலைகளிலும் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் கொலைக் குற்றவாளிகள் கூட கவுரி லங்கேஷ் வழக்கு விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்கள். அப்போது சித்தராமையா தலைமையிலான ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்று வந்த காரணத்தினால் தான் அவர் விசாரணையில் தீவிரம் காட்டி கைது செய்யப்பட்டார்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிது ஸ்டாலின் இந்துக்களை கொலை செய்யச் சொன்னார் என்று கேவலமாக திரித்து பேசும் சங்கிகளைக் கேட்கிறோம், சனாதனத்தை எதிர்த்தவர்களை உண்மையிலேயே கொலை செய்த சனாதன் வெறிக் கும்பலை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றத் துடிப்பதற்கு என்ன பெயர்? இதுதான் சனாதன வாழ்கை முறையா?

சிபிஐ கடந்த புதன்கிழமை அன்று மூன்று குற்றவாளிகளையும் விடுதலை செய்து விடலாம் என்றும், இந்த வழக்கில் மேலும் தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.பி.விகாஸ்குமார் மீனா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த கொலைகளுக்கு சதித்திட்டம் தீட்ட முக்கிய மூளையாக செயல்பட்ட வீரேந்திர சிங் துவக்கே மற்றும் துப்பாக்கியால் சுட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் சிபிஐ சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It