கடந்த 2004ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் வழக்கில் முக் கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார் காஞ்சி சங்கராச்சாரியா ரான ஜெயந்திரர்.

இந்தப் படுகொலை நடந்த சம யத்தில் பத்திரிகைகள், புலனாய்வு இதழ்கள், காட்சி ஊடகங்கள் என எல்லாமே போட்டி போட் டுக் கொண்டு ஜெயந்திரருக்கு எதிராக வரிந்து கட்டின.

அப்போதைய ஜெ. ஆட்சியில் தான் ஜெயந்திரர் கைது நிகழ்ந் தது. அதன் பின்னர் வந்த திமுக ஆட்சியின்போது ஜெயந்திரர் மீதான வழக்கு நீர்த்துப் போகத் துவங்கியது. இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் ஜெயந்திர ருக்கு ஆதரவாக பல்டியடித்தன.

அப்போது ஜெயந்திரரை கைது செய்து, வழக்கின் விசா ரணை அதிகாரியாகவும் செயல் பட்ட காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம் குமாரும் மரணமடைந்து விட்ட நிலையில் ஜெயந்திரர் வழக்கு புதிய திசையில் பயணிக்கிறது.

புதுவை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்நிலையில், தமிழக அரசியல் பரபரப்புகளுக்கிடையே சத்தமில் லாமல் சைலன்ஸ் பிராஸஸ்ஸôக வழக்கிலிருந்து விடுதலையாக நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஜெயந்திரர் மேல் பகீர் குற்றச்சாட்டு கிளம்பியுள் ளது.

சங்கர ராமன் கொலை வழக் கில் ஜெயந்திரர் மீதான விசார ணையை நடத்தி வரும் நீதிபதி ராமசாமிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயந் திரர் முயல்வதாக ஆடியோ டேப் ஆதாரத்தைக் காட்டி தமிழ் தொலைக்காட்சி ஒன்று செய்தி ஒளிபரப்பியது.

அதில், ஜெயந்திரர் மற்றும் அவரது இரண்டு பெண் உதவி யாளர்கள் மற்றும் நீதிபதி ராம சாமி ஆகியோர் சங்கர ராமன் குறித்தும், பணம் பட்டுவாடா குறித்தும் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறி ஞர் சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்து புதுச்சேரியில் நடக்கும் ஜெயந்திரர் வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருக்கி றார்.

ஜெயந்திரர் தொடர்பாக வெளியாகியிருக்கும் ஆடியோ வில், “இன்னும் ஒரு வாரம், பத்து நாட்களில் மீதமுள்ளவற்றையும் கொடுத்து விடுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள்...'' என்று ஜெயந்திரர் பேசுவதாக பதிவாகியுள்ளதாம்.

இதை வைத்து ஜெயந்திரருக் கும் நீதிபதிக்கும் இடையேயான பணப்பரிவர்த்தனைகள் குறித்த பேச்சுவார்த்தைதான் அது என விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சாட்சிகளை உடைப்பதிலும், பிறழ் சாட்சி யாக மாற்றுவதிலும் ஜெயந்திரர் தரப்பு வெற்றி பெற்று ஏறக் குறைய நீர்த்துப்போகும் நிலை யில்தான் வழக்கு பலவீனமாக இருக்கிறது. இதில் நீதிபதியிடம் பேரம் பேசுவதன் மூலம் இந்தப் படுகொலை வழக்கை இழுத்து மூடப் பார்க்கிறது ஜெயந்திரர் தரப்பு என்கிறார்கள் இந்த வழக்கை கவனித்து வரும் வழக் கறிஞர்கள்.

நீதி வழங்கும் நீதிமன்றங்களி லும் ஊழல் கரை படிந்து வருவ தாலும் சட்டத்தின் ஓட்டை களை பயன்படுத்தியும் ஜெயந்தி ரர் போன்ற செல்வாக்குமிக்கவர் கள் தப்பித்து விடுகின்றனர்.

செஷன்ஸ் நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வரை ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இருக்கும் நீதிப திகள் பலருக்கு ரேட் நிர்ணயம் உண்டு. அந்தந்த நீதிமன்றங்க ளில் வழக்காடும் வழக்கறிஞர் களுக்கு ஒவ்வொரு நீதிபதியைப் பற்றிய பயோடேட்டா நன்கு தெரியும்.

அதனால் இந்த வழக்கறிஞர் களே தங்கள் கிளையண்டுக ளுக்கு ஐடியா கொடுப்பதும், நீதிபதியின் பலவீனங்களைக் குறித்து சொல்வதும் நடை முறையான விஷயங்களாகவே இருக்கின்றன.

இந்த பாதையில்தான் ஜெயந் திரரும் பயணித்திருக்கிறார். ஜெயந்திரரின் செல்வாக்கும், அவரது பண பலமும் தீர்ப்பை அவருக்கு சாதகமாக வளைக்க உதவும். ஆனால் ஜெயந்திரரைக் கைது செய்த நேரத்திலும், இப் போது பணப் பேரம் பரபரக் கும் நிலையிலும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. குற்றவா ளிகள் தப்பி விட அதிமுக அரசு அனுமதித்துவிடக் கூடாது.

- அபு

Pin It