பொங்கல் பானையும்
மாடு கரும்பும் ஏரும்
அடையாளாச் சின்னங்கள்
நீரும் நிலமும் உயிரின் அடிப்படை
நீர் என்னவோ கேள்விக்குறியாய்...
மண் இலட்சத்தின் துணையோடு
விண்பார்க்குது
உலகமயமாக்கத்திற்கு
உயிர் கொண்டுழைத்தவன்
படையலா? தகவல் தொழில் நுட்பம்
கணினிகளில் பவனி வர
தொழில் வளர்ச்சியெனும் ஊடகத்தில்
தாரை வார்க்கப்படுகிறது
நமது பாரம்பரியத்தின் உயிர் தொடர்ச்சி
நிலங்களா இவை!
எம் மூதாதையர்களின்
குருதியும் சதையும்
சேர்ந்துழைத்த வியர்வைத்
துளிகளின் உரமேறிய வரலாற்றுத்
தடங்கள்!
இன்று இவை தொலைக்காட்சிப்
பெட்டிக்கும் செல்லிடம் பேசியிலும்
ரெண்டு நாலது...
வாகனமேறித் தொலைந்து போகிறதே!
தமிழா!
உனது இனம் உலக அரங்கினில்
அனாதையாய்த் தவிக்க
மரபென்னவோ
ஆயிரம் ஆயிரம்
கதைகள் சொல்லும்
வெறும் வண்ணப்பெட்டியின் முன்
பொங்கல் கவியரங்கம்
கேட்கவா நீ வாரிசானாய்
மஞ்சளுக்கு கரும்புக்கும்
நெல்லுக்கும்...
உயிர்கொடுத்த அந்த
பாட்டன் பூட்டன் வாரிசே!
கள்ளெனும் சூரியனாய்க் கிளம்பு
பொழுது விடியும்!

-  முத்து முருகன்

Pin It