தேவையான பொருட்கள்:

புறாக் குஞ்சு - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
பூண்டு - 4 பல்
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி - சிறுதுண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 6
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பெரிய சீரகம் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைபழம் - அரை பழம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்

செய்முறை:

புறாக்குஞ்சுகளை சுத்தம் செய்து வயிற்று பாகத்தில் கீறி குடல் மற்றும் தேவையில்லாத பாகங்களை எடுத்துவிட வேண்டும். மிளகாய் வற்றல், சீரகம், மிளகு பெருஞ்சீரகம், பட்டை ஒரு துண்டு, இஞ்சி சிறிது துண்டு, பூண்டு, தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். அரைத்த விழுது, உப்புத்தூள், மஞ்சள்தூள் சேர்த்த எலுமிச்சை சாறு இவற்றில் புறாவினை தோய்த்து, நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற விட வேண்டும். வாணலியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி வெங்காயம் வெட்டிப் போட்டு கறியையும் சேர்த்து வதக்க வேண்டும். சற்று வதங்கியவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து வேகவிட வேண்டும். சிறிது நேரம் வேக வைத்து பின் 100 மில்லி கெட்டியான தேங்காய் பால் ஊற்றி சீறு தீயில் வேக வைக்க வேண்டும். கறி நன்றாக வெந்து சிவந்த நிறமாக எண்ணெய் தெளிந்து புரட்டினாற் போல் வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.



Pin It