உடலில் உள்ள தேவை இல்லாத இடங்களில் உறுப்பின் ஒரு பகுதி (அ) திசுக்கள் முன்னால் தள்ளப்படுவதே குடல் இறக்கம்.

ஹயாடஸ் ஹெர்னியா (Hiatus Hernia) என்பது மார்பு, வயிறு பாகத்திற்கு இடையேயுள்ள தடித்த தசைச்சுவரின் (Diaphragm) இடையில் உணவுக்குழாய் வழியாக அடி வயிற்றுப்பகுதி தள்ளப்படுவது ஆகும்.

அடி வயிற்று உறுப்புகள், முன் பக்கத்தில் தொடை அடிவயிறுடன் சேரும் பாகத்தில் (Groin) தள்ளப்படுவது இன்கியூனால் ஹெர்னியா (Inguinal Hernia) எனப்படும். அடிக்கடி அதிகமான பளு தூக்குபவர்கள், பேதி, மலசிக்கல், அதிகபடியான வயிறு பகுதியில் தசை, சத்தற்ற உணவு, சிகரட், இவைகள் எல்லாம் தசைகளை வலுவிழக்க வைத்து ஹெர்னியா வர வழி வகுக்கிறது.

பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்கு பின்னால் இது வரும் வாய்ப்புகள் அதிகம்... தொடர்ந்த இருமல், கனமான பொருட்களை தூக்குதல் ஆகியவற்றால் பெண்களுக்கு இது வர வாய்ப்பு உள்ளது.

எளிதில் நோய்வாய்ப்படுபவர்கள் முன்பக்கம் குனிந்து அதிக கனமான பொருள்கள் தூக்கக்கூடாது. அப்படி தூக்குவதன் மூலம் அவர்களுக்கு ஹெர்னியா வரும் வாய்ப்புகள் அதிகம். மேலும் , மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அழுத்தமான அசைவுகள் ஏற்படுத்த கூடாது.

ஆண்களுக்கு உடலில் வளைவு பகுதியானது அடிவயிற்றின் நுழைவாயில் (Groin) தள்ளப்படுகிறது. இந்த பாதை வழியே தான் ஆண்களுக்கு விதை கோளங்கள் விதைப்பைக்குள் செலுத்தப்படுகிறது. ஆண்களுக்கு குறிப்பாக விதைப்பையை சுற்றி லேசான வலி, வீக்கம் ஆகிய அறிகுறிகள் தென்படும். வயிற்று பகுதியில் அதிகப்படியான தசைக்கோளம் லேசாக வெளியே தள்ளிக்கொண்டு வரும் போதே இதை உணரலாம் அந்த பகுதியில் வலி இருக்கும். நோயாளிக்கு வலி, வாந்தி முதலிய அறிகுறிகள் இருந்தால் நோய் தீவிரமடைந்து இருக்கும்.

இதனை ஆரம்ப காலத்திலேயே அக்குபஞ்சர் முறையில் மருந்து எதுவும் உட்கொள்ளாமலேயே குணப்படுத்தலாம்.

Pin It