கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்காரர்களுக்கு வாரி கொடுத்ததை மறக்க முடியுமா?

1) 2013 முதல் 2016 வரை மத்திய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப் பட்ட பணியிடங்களில் தமிழ்நாட்டில் பணிகளில் அமர்த்தப்பட்ட வடநாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 1988 பேர் தமிழர் களுக்குக் கிடைத்தது 110 பணிகள் மட்டுமே. (6 சதவீதம்)

2) பீகார் - இராஜஸ்தான் மாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் தேர்வாணையத்திடம் ‘கள்ளக் கூட்டு’ வைத்து தமிழ்நாட்டுக்குள் முறைகேடாக வடநாட்டுக்காரர்களை வேலைகளில் திணித்ததை மறக்க முடியுமா? - இப்படி முறைகேடாக சென்னை வருமான வரித் துறையில் வேலைக்கு வந்த 3 வடநாட்டுக்காரர்கள் கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

3) 2014ஆம் ஆண்டு மத்திய தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வட மாநிலத்துக்காரர்கள் இலஞ்சம் கொடுத்து தேர்வில் பெற்றி பெற்றது கண்டறியப்பட்டு, பிறகு தேர்வே இரத்து செய்யப்பட்டது.

4) அஞ்சல் துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைநிலை ஊழியர் களுக்கான தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகளே நடத்தி மாநில மக்களுக்கு வேலை வழங்கி வந்தன. அதையும் அகில இந்திய தேர்வாக மாற்றியது மோடி ஆட்சி. அதனால் தமிழக அஞ்சலகத் துறையில் வடநாட்டுக்காரர்கள் குவிந்தார்கள். தமிழே தெரியாத வடநாட்டுக்காரர்கள் கடுமையான தமிழ்மொழிக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களைவிட கூடுதல் மதிப்பெண் பெற்றார்கள். பிறகு நடந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு அந்தத் தேர்வும் இரத்து செய்யப்பட்டது.

5) தமிழ்நாட்டில் தேசியமய வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் தமிழ்மொழி தெரிந்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியை மாற்றியது மோடி ஆட்சி. கடந்த ஆண்டு ‘ஸ்டேட் பேங்க்’ பணியாளர் தேர்வில் ஆங்கில மொழி மட்டுமே அடிப்படைத் தகுதியாக்கினார்கள். அதன் விளைவு ஸ்டேட் வங்கியில் தமிழர் வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்காரர்கள் பறித்துக் கொண்டு விட்டார்கள். இந்த ‘பறிப்பு’களைத் தட்டிக் கேட்க வேண்டிய அ.இ.அ.திமு.க. ஆட்சி கேட்டதா? இல்லை; அது மட்டுமல்ல; ‘குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியையும் பறித்தது’ என்ற கதைபோல் தமிழக அரசு நடத்தும் தேர்வுகளிலும் வடநாட்டார்கள் குவிந்து வருகிறார்கள். அதிர்ச்சியடையாதீர்கள்!

கு. தனசேகர் எழுதிய “மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமைப் பறிப்பு நூல்”