இந்த உள்நாட்டுப் போர் "சாட்சிகளற்ற போர்' என்பது, பல முறை தனது பணிகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில், இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை.

தீர்ப்பாயத்தின் அறிக்கையின் இந்தப் பகுதி, போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததன் காரணமாக ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும், குறிப்பாக விடுதலைப் புலிகள் படையினர் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பொது மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட ராணுவ மற்றும் பிற நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்துகிறது.

பொதுவான பார்வையாளர்கள் முன் பல தொண்டு நிறுவனங்கள், தற்பொழுது இலங்கையில் உள்ள "உள்நாட்டுப் போரின்' நிலை குறித்து நிபுணர்கள் அளித்த பல அறிக்கைகளைத் தீர்ப்பாயம் கேட்டது. பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குமூலங்களை அவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, அவர்கள் அடையாளத்தை மறைக்க "உள்ளக விசாரணை' முறையில் தீர்ப்பாயம் விசாரித்தது.

da_34இந்த உள்நாட்டுப் போர் "சாட்சிகளற்ற போர்' என்பது, பல முறை தனது பணிகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில், இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை. உண்மையில், தொடக்கக் காலத்தில் பலியானவர்கள், பெரும்பாலும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களே! விமர்சன கருத்துகளை ஊமையாக்க நினைத்த இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஏற்ப நடைபெற்றதாகவே இவை இருந்தன. பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் சாட்சிகளின் கருத்தின்படி, இது ஓர் உள்நாட்டுப் போர். இன அழிப்பை செயல்படுத் தும் ஒரு நடவடிக்கை. சொல்லப் போனால் இனப்படுகொலை என்றே கூறலாம். இதை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள இலங்கை அரசு தயாராக இல்லை. மாறாக, கொள்கைகள் குறித்தும், போர், எண்ணிக்கைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலன் குறித்தும் தவறான தகவல்களை கொழும்பு பரப்பியது.

இந்த தவறான தகவல்கள், ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கனரக ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொகையை குறைவாகவே கணக்கிட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மிகவும் சுருங்கிய நிலையில் இறுதியாக நடைபெற்ற பாரிய இடப்பெயர்வு தொடங்கிய போதுதான், அவ் வாறு இடம் பெயர்ந்த மக்களை எண்ணியபோதுதான் – அரசு தவறான தகவல் கொடுத்தது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிய வந்தது.

ராணுவம் மேற்கொண்ட அட்டூழி யங்கள் பொது மக்களோடு தொடர்புடையவையாகவே இருந்தன. போர் விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக சில சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். காயம்பட்ட பொதுமக்களின் உடல்களில் தீக்காயங்களை பல சாட்சிகள் கண்டுள்ளனர். பிறர் "நாபாம்' போடப்பட்டதன் அறிகுறிகள் வெளிப்படையாக இருந்ததாக நம்புகின்றனர். வேறு பல எரியும் தன்மையுள்ள பொருட்களுக்கான ஆதாரங்கள் இருந்ததை, இம்மாதிரியானவைகளால் காயம்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரற்ற உடல்கள் காணப்பட்டதை பல சாட்சிகள் உரைத்தனர்.

இதன் மூலம் காயம்பட்ட பலரோடு, பொது மக்களின் சாவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறைந்த நிலையில், மனித நலன் சார்ந்த பொது கட்டமைப் புகள் அழிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறிவைக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.

மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொது கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்விடங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணு வம் நடத்திய தொடர்ச்சியான எறிகணை தாக்குதலானது, ஜெனிவா ஒப்பந்த மீறலாகும். குடிநீர் பற்றாக்குறை, அடிப் படை மருத்துவ வசதிகள் இன்மை, தொடர்ந்து கல்வி வசதிகள் கிடைக்காத தன்மை ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் பறிக்கப்பட்டன. மேலும் இச்சூழலில், பொது மக்களின் சாவு எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் உள் ஆவணங்களின் படி, ஏப்ரல் 2009 வரை, வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு போரின் இறுதி வாரங்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.

சட்ட விரோதமான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ, பயன்படுத்தாமலோ, தமிழ் மக்களை அழித்தொழிக்க முயல் வது என்பதே ஒரு வகையான போர்க் குற்றமாகும். ஆயுத மற்றும் அரசியல் எதிர்ப்புகளை அடக்குவதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது. நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலம் ராணுவம் முற்றிலும் பொது மக்கள் வாழ்விடங்களாக மட்டும் இருந்த பகுதிகளான – மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் இடம் பெயரும் மக்கள் மற்றும் நிறைய கிராமங்கள் போன்றவற்றையே தாக்கியதாக உறுதியாகத் தெரிகிறது. மேலும், தாமாக முன் வந்து சரணடைந்த தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகள் ஆகியோர் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டதற்கு போதுமான ஆதாரம் உள்ளது. இது இன அழிப்புக் குற்றச்சாட்டிற்கும் சர்வதேச சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டிற்கும் பெரிதும் சான்றுகளாக உள்ளன.

எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன்னர் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பிற அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமைகள் குறித்தும் ஆராய வேண்டும். இடம் பெயர் "முகாம்கள்' அல்லது "தடுப்பு முகாம்கள்' (வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ளபடி) பற்றி சாட்சிகளின் வாக்குமூலங்கள் கவனத்திற்குரியவை. தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் வரையிலோ, மறு குடியமர்த்தப்படும் வரையிலோ தங்குவதற்கான இடைத் தங்கல் முகாம்கள் என்று அரசாங்கத்தால் வர்ணிக்கப்படும் இம்முகாம்கள், நலன்புரி கிராமங்களாகவே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி 15 முகாம்கள் ஒதுக்கப்பட்டன. அந்த முகாம்களில், ஜெனிவா ஒப்பந்தமும் மனித உரிமைக்கான அனைத்துலக அறிக்கையும் தொடர்ந்து மீறப்படுகின்றன.

அந்த முகாம்களுக்குள் நடைபெற்ற பல வேதனையான நிகழ்வுகள், தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களிடம் புகார் செய்யப்பட்டன. ஒருவருக்கு ஒதுக்கப்படும் வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால் வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல் நலன் பாதிக்கப்பட்டு, சரும நோய்கள் ஏற்படுகின்றன. பலர், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் காலரா மற்றும் சத்துக் குறைவினால் மரணமடைந்திருக்கின்றனர். நீர் வழங்கல் ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது. ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இது போதாதது மட்டுமல்ல; சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுத்தது.

அடிப்படை சுகாதாரம், கழிவறை பயன்பாடு மற்றும் துணி துவைப்பதற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு உடுத்தியிருந்த உடை மட்டுமே இருந்தது. குப்பைகள் அந்தந்த இடங்களிலேயே கிடந்தன. கழிவுத் தொட்டிகள் சிமென்ட்டால் கட்டப்படாததால் அடிக் கடி உடைந்து, கழிவு நீர் வெள்ளமாக வெளியேறி, சில சமயங்களில் சில குழந்தைகள் அவற்றில் மூழ்கி இறக்கும் அளவிற்கு இருக்கிறது. நிறைய குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்று இருக்கின்றனர்; அல்லது பெற்றோரில் ஒருவரின் ஆதரவில் மட்டும் உள்ளனர். இதனால் முகாம்களில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாக நேர்கிறது.

ஏற்றுக் கொள்ள முடியாத மற்றொரு அரசுக் கொள்கை என்னவெனில், தமிழ் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களைப் பணிய வைக்கும் ஆயுதமாக உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. உணவு வழங்கலை தடை செய்தது மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டது ஆகியவை – ஆபத்தான உணவுப் பற்றாக்குறைக்கு வழிகோலின. மேலும் கூடுதலாக, தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து வழங்கலை தடை செய்தது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானதும் ஆகும்.

அழிக்கப்பட்ட கிராமங்களிலும், "நலன்புரி கிராமங்களிலும்' அரசும் ராணுவமும் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகளும், வல் லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் அரச படையால் தொடர்ந்து நடத்தப்பட்ட மற்றுமெõரு பாரிய கொடுமையாகும். மானுடத்திற்கு எதிரான குற்றமாக "ரோம்' சட்டத்தில் குறிக்கப்படும் இது, கருக்கலைப்பு, குடும்ப பெருமைக்கு இழுக்கு, அவமானம் மற்றும் மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற மேலும் பல துயரங்களுக்கு வித்திட்டது. இப்படி குறிவைத்து நடத்தப்படும் கொடுமைகளுக்கு, போர்ப் பகுதிகளுக்கு வெளியில் வாழும் தமிழர்களும் பலியாயினர். பெரும் எண்ணிக்கையில் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை தவிர, கடத்தல், படுகொலை, முன்அறிவிப்பற்ற கைதுகள், தடுத்து வைத்தல், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரமும் நடந்தது.

மேலே உள்ள பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை, மனித உரிமைக் கண்காணிப்பகம் (28.7.2009 மற்றும் 24.11.2009), அம்னஸ்டி இன்டர்நேஷனல் (10.8.2009) மற்றும் கொள்கை மாற்றுகளுக்கான மய்யம் (செப்டம்பர் 2009) ஆகியவற்றின் அறிக்கைகளில் காணலாம்.

தமிழ்த் தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்தல் மற்றொரு கொடுமையாக இருந்தது. அதிலும் இப்படியான படுகொலைகளில் முக்கியமாக, ராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராசா ரவிராஜ் மற்றும் டி. மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டது முக்கியமானது.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த 1979இன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பல்வேறு கொடுமைகளுக்கு வழிவகை செய்த அரசின் கொள்கைகளுள் முக்கியமானதாகும். அது சட்டத்திலும் ராணுவ சட்ட அமைப்பிலும் உள்ள பாதுகாப்புகளை குறைத்து, அவற்றைத் தவறாக பயன்படுத்த வழி செய்தது.

இறந்தவர்களின் உடல்கள் அவமரியாதை செய்யப்பட்டதும் சாட்சிகள் மூலம் தெரிய வருகிறது.

சுருக்கமாக, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை நீக்கவும், தமிழ் மக்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவும், இலங்கை அரசு, உலகளாவிய சட்டங்கள், ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றிற்கு எதிரான ஓர் ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதனால் விளைந்த கொடுமைகளான வல்லுறவு, துன்புறுத்தல், படுகொலைகள், "காணாமல் போதல்' மற்றும் உணவு, நீர் மற்றும் மருந்து வழங்கலை தடை செய்தமை ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன. கனரக ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களான வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் கொத்து குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதானது, உலகளாவிய சட்ட நிலைகளுக்கு அப்பால் இலங்கை அரசை நிறுத்தியுள்ளன. வன்கொடுமைகள், இன அழிப்பு, சொல்லப் போனால் இனப் படுகொலை ஆகிய குற்றங்கள், கொழும்பில் திட்டமிடப்பட்டன என்பது வியப்பளிக்கவில்லை. போர்க் குற்றங்களும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களும் நடந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
Pin It