இருவரும் பயணித்த பேருந்தில்
இன்றும் பயணச்சீட்டின்றி ஏறிக்கொள்கிறது
உன் நினைவுகள்..
பயணத்தில் ஒலிக்கும் பாடலோடு
கண்கள் பேசிய வார்த்தைகளையும்
இசையாய் செவிக்குள்
நிரப்புகிறது காற்று..
பகிர்ந்த அன்பும்
பரிமாறாத நேசமும்
வாசனைத் துளிகளோடு
பேருந்து முழுதும் விரவிக் கிடக்கிறது
நம் காதலாய்..
பயணம் முடிந்து
இறங்கிய பின்னும்
நீயமர்ந்த இருக்கையிலிருந்து
அகல மறுக்கிறது
மனசு.

- மணியன் ஜெயராஜ், கீழாத்தூர்