நீண்டு வளர்ந்து கொண்டே
இருக்கும் தலைமுடியை
நாளை வெட்டிக் கொள்ளலாம்...

நீண்டு கொண்டே இருக்கும்
கடனுக்கான வட்டியை
வருகின்ற நாட்களில்
கட்டிக் கொள்ளலாம்...

நீண்டு கொண்டே இருக்கும்
குடும்பத்தின்
தேவைகளை கொஞ்சம் கொஞ்சமாய்
குறைத்துக் கொள்ளலாம்...

நீண்டு கொண்டே இருக்கும்
அச்சத்தை
நம்பிக்கை உள்ளவரை
எதிர்த்துக் கொண்டே இருக்கலாம்...

நீண்டு கொண்டே போனால்
சிந்திக்காமல்
உயிர் பறிக்கும் கொடுமையான
பசியை என்ன செய்வது?

- மு.முபாரக்

Pin It