என் நிலம் நோக்கியே
நகரப் பார்க்கிறதுன்
வன்முறை வெறியாட்டங்கள்
நான் எனும் என் நிலத்தினை
மதபீடங்களில் கையளித்துவிட்ட
பலியாடுகள் போல்
குத்திக் கிழிக்கின்ற கொடூரங்களேந்தி
என் உதிரத்தை
கொத்திக் குடிக்கிறாய்
அகோரப் பசியேந்திய
சனாதனக் கருத்தியலை
வெறுப்பின் கணப்புடன்
என் மீதே கட்டி எழுப்புகிறாய்
சுயமிழந்து தன்மானமிழந்து
மேலாடையின்றி
அம்மணமாக்கித் துரத்துவதும்
ராம புருஷர்கள்
புணர்ச்சி கொள்வதுமாய்
உருப்பெறுகிறது காவிகளின்
உச்சபட்ச வன்மங்கள்
இந்தியாவை இந்து தேசமாக்கிட
சதுர்வர்ண சாம்ராஜ்யம்
உயரே உயரே பறந்திட
மனிதத்தை மதச் சங்கிலியால்
நெரித்துக் கொண்டேயிருக்கிறாய்
இழிசெயலே சாதி அடையாளமானது
இழிசெயலே மத நம்பிக்கையானது
இழிசெயலே தேசிய மயமானது
இழிசெயலே
சனாதனத்தின் நியாயங்களானது
எச்சரிக்கையாய் இருங்கள்
காவிகளில் கனன்றெரிகிறது
ஜனநாயகத்தின் பன்முகத் தன்மை

- நீதிமலர்

Pin It