மௌனத்தைப் பதிலாகத் தரும்
பெரும் பரப்பொன்றில்
நின்றபடி
நான் வினாக்களைத்
கொடுத்த வண்ணம் ‌‌‌‌‌‌இருக்கிறேன்

மனத்தில் இழையும்
நிராசையொன்று
கோப்பை கோப்பையாய்க்
கசப்பைக் குடித்துக்
காலம் தள்ளுகிறது

பாதம் நெருடும் முட்கள்
குருதி பார்ப்பதில்லை

எதிர்கால இருண்மையின்
வலுவான கரங்கள்
பின்னால் நின்று
என் கண்களைப் பொத்திக்
திசை மாற்றுகிறது !

--- மனத்தில் இழையும்
நிராசையின் கைப்பாவையாகி
நிற்கிறேன் நான் !

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்