நெருக்கி நெருக்கி
ஒளிந்து நெளிந்து
உமிழ்ந்து பிறழ்ந்து
இருபது வருடங்களாக
கடந்து கொண்டிருக்கிறேன்
நடந்து போவதற்கும் குறைவான
யுகம் கடத்தல் அது
நகரும் மனித சக்கரங்கள்
ஒன்றுக்கொன்று முரண்பட்டவை
சூரிய கால்கள் சுழலும்
மழை இறகுகள் சுருங்கும்
காற்றும் காலமும் குவிந்து கடக்கும்
நேர்கோடுகளால் ஆன
வேடிக்கைகள் வினோதமானது
நகர்வது பற்றிய நல் ஒளி
சரிந்து கிளம்பும் லாட் ஷாட்டுக்கு
மனித பிம்பங்கள் தான் மாற்று
எந்தவொரு ஒப்பனையும் நுழைகையில் இருக்கும்
வெளியேறுகையில் இருக்காது
ஒவ்வொரு முறையும் ஒப்பனையற்ற தூரங்கள்
நிஜ முகங்களை ஒப்பித்து விடும் வீதிக்கு
பெயர் மட்டும் தான் ஒப்பனைக்காரர் வீதி

- கவிஜி

Pin It