எண்ணை வைத்து என்னை எண்ண வேண்டாம்
முள்ளில் பதிந்த முழுமுகிலின் முளைவடிவம்
பனியில் படிந்த நுரையின் நுதல்
எறும்பு எடுக்கும் தீனியின் திண்ணத்தை
காட்டிலும் மீச்சிறு மடங்குதான்
ஒற்றின் ஓராயிரம் இணைந்தால்
அதுவும் ஓர் வட்டமே...
கருமையின் கண்கள் இணைந்தால்
அதுவும் ஓர் காரிருளே...
காற்றைக் களவாட எவனுமில்லை அவனியில்
அப்படியே நானும்.
தோற்றுப் போகவில்லை
ஏற்றிக் கொள்வதற்காக தேற்றிக் கொண்டிருக்கிறேன்

இப்படிக்கு,
நான்.

அதிரா

Pin It