கோபுர கலசத்தின் உச்சியில்
கடவுளின் கடவுளாய்
அமர்ந்திருக்கிறதோர் பறவை
கடவுளை
ஆசீர்வதித்ததின்
அடையாளமாய் பிரசாதமென
எச்சமிட்டு பறக்கிறது
மின் கம்பங்களின் எண்ணிக்கைக்கு
இணையாகக்கூட
மரங்கள் நடப்படாத நகரத்தில்
பறவைகள் இறங்குவதில்லை
பறவைகளின் சிறகசைவில்
சுழலும் காற்றில் மாசு நீங்கக்கூடும்
தங்க நாற்கர சாலைகளால்
இணைக்கப்படும் இந்நகரத்தின்
பழைய வரைபடத்தில்
பறவைகள்
இரையருந்திப் பறக்கும்
மாபெரும் மண் கிண்ணத்தைப்போல்
குளமொன்று இருந்தது
பெரும் மழைக்காலங்களில்
குளம்தேடி நீர்சூழ
நகராத காங்கிரிட் கப்பல்களாய்
மிதக்கும் குடியிருப்புகள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள்
- இசையாகும் தமிழும் தமிழாகும் இசையும்
- பெருநகர நிலை
- தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்
- பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி
- உயிருள்ள புழு உலகில் முதல் முறையாக மனித மூளையில்!
- ஆய்வறிஞராக உயர்ந்த தமிழாசிரியர்
- ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு இலட்சியங்களும் கல்வியும்
- விவரங்கள்
- தென்பாண்டியன்
- பிரிவு: புதுவிசை - ஆகஸ்ட் 2005