மழை பெய்தால்
குடை விரித்து
வாய்நிறைய சாபமிட்டு
மழைநீர் சேகரிப்பு தொட்டிகட்ட யோசித்து
கட்டாமல் சிறு இடத்திலும் சிமெண்ட் பூசி
வீட்டுக் கழிவுகளை
சாக்கடைகளில் கள்ளத்தனமாய் திறந்து விடுபவர்கள்
கூடிநின்று முட்டி மோதுகிறார்கள்
நீரையும் சேறையும் கலக்கியபடி
குழாயில்
பீய்ச்சி அடிக்கப்படும்
நீருக்காக
அந்தக் குளத்தில்...

- சதீஷ் குமரன்

Pin It