தனியாக பேசிக் கொள்வது
நோவு
தான் மட்டுமே தானென்பது
தாகம்
தன்னையே சுரண்டுவது
சாவு
தானாகி தவித்துக் கிடப்பது
தவம்
மண் அள்ளித் தின்பது
சிறுபிள்ளை வாதம்
மரணம் சுரண்டிய ஜீவனம்
மானுட மயக்கம்
மின் மயான தகிப்பில் யாரோ
முனங்கிக் கிடக்கும் சொல்லொன்றில்
சாம்பல் நிற போதை
எதிரேயிருக்கும் சுடலை மாடசாமிக்கு...!
- கவிஜி