பெட்டிக் கடையில்
ஒரு ரூபாய் மீதிக்காய்,
கண்ணாடி ஜார் திறந்து
ஆரஞ்சு மிட்டாய் ஒன்றை
எடுத்துக் கொண்டது,
அதன் சுவை பிடிக்கும்
என்பதினும்,
அஞ்சு பைசாக்கு அதை
ஆசையோடு வாங்கி சாப்பிட்ட
பால்ய பருவத்தை அது
நினைவூட்டியதாலேயே
இருக்கக் கூடும்..!

- ஆதியோகி

Pin It