என் உயிரே போகிறது
என்னை துடிதுடிக்க கொன்று கொண்டிருக்கும்
கொலைகாரனிடம் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" 
நடந்து கொள்ளச் சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

என் மண், என் காடுகள், என் மலைகள் என் கடல், என் ஆறுகளை
முற்றுமுழுவதுமாக திருடிய கொள்ளைக்காரனிடம்
"பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்து கொள்ளச் சொல்லும்
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

அவன் பேண்ட பீயை என் கையால் அள்ளிக்கொண்டிருக்கிறேன். 
இரண்டாயிரம் ஆண்டுகளாக தலையில் சுமக்கிறேன். 
இது தான் உன் விதி, பிறப்புச் சாபம் என்று சொல்பவனிடம்
"பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்துகொள்ளச்சொல்லும்
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

நாங்கள் கட்டிய கோவிலுக்குள் எங்களை விடமறுக்கிறவனிடம்
"பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்து கொள்ளச்சொல்லும்
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

அவனது துப்பாக்கிக் குண்டு எங்கள் ஸ்நோலின்களின் 
வாயை கிழித்துக்கொண்டிருக்கிறது. 
அவனிடமும் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்து கொள்ளச்சொல்லும்
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

எங்கள் அனிதாக்கள் தூக்குக்கயிற்றில் உயிர் துடிக்க தொங்கி கொண்டிருக்கிறாள்கள். 
கழுத்தில் கயிறை இறுக்கியவனிடம் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" 
நடந்துகொள்ளச்சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

எங்கள் உரிமைகள் குண்டி துடைக்கும் துணியாக கூட பாதிக்கப்படுவதில்லை.
என் ரத்தம் கொதிக்கிறது. என உரிமையை மறுப்பவனிடம்
"பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்து கொள்ளச்சொல்லும் 
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

நடுக்கடலில் பிணமாக நாறிக்கொண்டிருக்கிறேன். 
என் பிணத்தை கூட மீட்க வராத அவனிடம் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து"
நடந்துகொள்ளச்சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி, பசி மறுத்து சிறுகச் சிறுக சேர்த்த
என் பணத்தை எடுக்கவிடாமல் நடுத்தெருவில்
என்னை நிறுத்தியவனிடம் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து"
நடந்துகொள்ளச்சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

தான் விரும்பிய உணவை உண்ண விரும்பிய
என் தோழன் அத்லாக்கை கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பவனின்
கைகளில் படர்ந்தோடும் ரத்தத்தை பொறுத்துக்கொண்டு, 
கழுத்தை நெறிப்பவனிடம் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" 
நடந்துகொள்ளச்சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

தனக்குப் பிடித்த அல்லாவிடம் மனமுறுகி வேண்டிய "பாயை" 
மண்டையில் அடித்து சாகடித்துக் கொண்டிருக்கும் கொலைகாரனிடம்
"பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்து கொள்ளச் சொல்லும் 
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

என் கர்ப்ப பையை கிழித்து என்னையும் என் குழந்தையையும்
கொன்றுகொண்டிருக்கும் மரணவியாபாரியிடம் 
"பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" நடந்துகொள்ளச்சொல்லும்
உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

உனக்கு அடிமை வேலை பார்க்க மாட்டேன் என்று என்னுரிமை பேசியதற்காக
என் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றியவனுக்கும் "தன்னுரிமை இருக்கிறது", 
அவனிடம் "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து"
நடந்துகொள்ளச்சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

எங்கள் யோனிகளை கிழித்துக்கொண்டிருப்பவனிடம் 
"இப்படிக் கிழிப்பது தவறு, இது முறையன்று" என "பக்குவமாக இடம் பொருள் ஏவல் பார்த்து" 
நடந்துகொள்ளச்சொல்லும் உங்க அறிநெறியில் மலத்தைக் கரைத்து ஊற்ற வேண்டாமா?

நாறுகிறது உங்கள் அறநெறி.
நாறுகிறது உங்கள் ஜனநாயகம்.
நாறுகிறது உங்கள் கேடுகெட்ட நீதி
நாறுகிறது உங்கள் மக்களாட்சி
நாறுகிறது உங்கள் ஊடகநெறி
நாறுகிறது உங்கள் சட்டங்கள்

என் உயிரே போகும் போது
உங்கள் அறநெறி ஒரு கேடா?
உங்கள் ஜனநாயகம் ஒரு கேடா?
உங்கள் நீதி ஒரு கேடா?
உங்கள் மக்களாட்சி ஒரு கேடா?
உங்கள் ஊடகநெறி ஒரு கேடா?
உங்கள் சட்டங்கள் ஒரு கேடா?

மிச்சமிருக்கும் என் உயிரைப் பறித்துவிடுங்கள்.
துடித்துக் கொண்டிருக்கும் என் மூச்சை 
நிறுத்தி விடுங்கள்.
கொதித்துக் கொண்டிருக்கும் என் ரத்த ஓட்டத்தை
நிறுத்தி விடுங்கள்.

அப்படியாவது உங்கள் ஜனநாயகத்தை, நீதியை,
சட்டத்தை, தேசத்தை, மக்களாட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It