Connect the dots - Conspiracy Theory

இது சதியா, அல்லது வெறும் சதிக் கோட்பாடா என்பதை உறுதி செய்ய நீங்கள் 2034 வரை காத்திருக்க வேண்டியிருக்காது என்பது எமது நம்பிக்கை.

Dot 1: குஜராத் மாடல் --> தமிழக 'வெற்றி' மாடல் - Fake News Factory

நம்ம பெரிய ஜி பிரதமராவதற்கு முன்பு, சமூக ஊடகங்கள் ஓரளவே ஊடுருவியிருந்த 2011 - 2014 காலகட்டத்திலேயே இரு பெரும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் இந்தியா முழுமைக்கும் வெற்றிகரமாகச் சென்றடைந்தது. ஒன்று, அப்போதிருந்த அரசாங்கம் 2G, Coal Gate போன்ற ஊழல் மலிந்த அரசாங்கம் என்றும்; இரண்டு, குஜராத்தில் ஜி-இன் ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுவதாகவும், ஊழலை ஒழித்து - வளர்ச்சியைக் கொண்டுவர ஜி தான் பிரதமராக வேண்டும் என்பதும்தான்.

actor becoming pmகைபேசியும் சமூக ஊடகங்களும் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில், 2011-14 போன்றதொரு பொய்ப் பிரச்சாரம் பன்மடங்கு வேகமாக இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. அது என்னவென்றால், நம் நடிகர் முதல்வரான பின்னர், தமிழ்நாட்டில் லஞ்சமும் ஊழலும் முற்றாக ஒழிந்துவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி என்கவுண்டர் / மரண தண்டனை தருவதாகவும், நோயாளி இறந்துவிட்டால் தனியார் மருத்துவமனையில் பில் கட்டத் தேவையில்லை என்றும், பொதுத் தொகுதிகளில் ஏராளமான தலித் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்ததாகவும்... ஒரே ஸ்கிரிப்டை ஏராளமான இன்ஃப்ளுயன்சர்கள் வடமாநிலங்களில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரமாக அரங்கேற்றி, ஜி-க்கு அடுத்தபடியாக இந்தியாவின் மீட்பராகத் தகுதியுள்ள ஒரே தலைவராக நம் நடிகரை வெற்றிகரமாக நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.

Dot 2: வளர்ச்சி நாயகன் பிம்பக் கட்டுமான டெம்ப்ளேட்

அத்வானியிடம் அமாவாசையாக இருந்து படிப்படியாக வளர்ந்து ஜி பிரதமராக வந்த பின், முந்தைய பிரதமர்கள் ஜனநாயகத்தின் பெயரில் செய்து வந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறுவது, (மணிப்பூர், விவசாயிகள் போராட்டம் போன்ற) கடினமான அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வது போன்ற செயல்பாடுகள் அடுத்தடுத்த தேர்தல்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சி நாயகன் என்ற பிம்பத்தின் மீதும் கீறல்களை விழச் செய்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு புத்தம் புதிய வளர்ச்சி நாயகரைத் தயார் செய்து வெற்றிகரமாக நிறுவுவது நாக்பூர் முதலாளிகளுக்கும் ஒரு அசாத்தியமான சவாலாக இருக்கும். எனவே, நாயக பிம்பம் சிதையாமல் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்ட உத்திதான், எல்லா வெற்றிகளுக்கும் "வளர்ச்சி நாயகன்" காரணம், எல்லாத் தோல்விகளுக்கும் மற்றவர்கள் காரணம் என்பது.

ஊடகங்களிலோ, ஏன் நாடாளுமன்றத்திலோ கூட எதற்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக எதிர்கட்சிகள் எவ்வளவு நியாயமான கேள்விகளை எவ்வளவு ஆதாரப்பூர்வமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், எவ்வளவு நேரடியாகக் கேட்டுக் கதறினாலும், போராடினாலும் மௌனப் புன்னகையே பதிலாகத் தருவது அல்லது அடிக்கடி அயல்நாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு விமானப் படிக்கட்டுகளில் கை அசைத்துக்கொண்டிருப்பதும், உலகத் தலைவர்களுடன் கை குலுக்கிக் கொண்டும், அந்த நாட்டின் மிக உயரிய விருதுகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருப்பதும்; உள்நாட்டுப் பயணங்கள் என்றால் அம்மாநில கலாச்சார உடைகளையும் தொப்பிகளையும் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, பெரிய திட்டங்கள், பாலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்வது (மாதிரி போட்டோ ஷூட் செய்வது), மற்ற இரயில்களின் வேகத்தைக் குறைத்தாவது அதிவேக இரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைப்பதுமாக வளர்ச்சி நாயக பிம்பத்தை உயர்த்தும் வேலைகளை மட்டும் செய்தால் போதுமானது.

"Success has many fathers" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ஆனால் இந்தியாவில்தான் "Many successes have only one father". நடிகரின் நடவடிக்கைகள் மேற்கண்ட டெம்ப்ளேட்டுடன் பொருந்திப் போவது தற்செயலானது அல்ல. இந்த டெம்ப்ளேட்டைக் கையில் கொடுத்து அச்சு பிசகாமல் நடக்கும்படி நடிகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும் “Script binding மட்டும் கொடுத்தால் போதும்ங்ணா, எப்படி Character-ஆகவே மாறி பின்னிப் பெடல் எடுக்குறேன்னு அப்புறம் பாப்பீங்ணா” என்று performance பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Dot 3: எதிர்காலத்தில் தமிழரே பிரதமர் - சின்ன ‘ஜி’ சென்னையில் சூளுரை

2023 ஜூன் மாதம் நமது டெல்லி சந்தான பாரதி சென்னை வந்து எதிர்காலத்தில் தமிழரே பிரதமர் என்று சூளுரைத்தார். நாம் ஆடு அண்ணாமலையையோ, கிராமத்து CEO வேம்புவையோ சொல்வதாக நினைத்துக் கொண்டிருக்க, நாக்பூர் காவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களது திட்டமிடலைத் தொடங்கி நடிகருடன் கான்ட்ராக்ட் போட்டிருக்கிறார்கள். அநேகமாக, அந்தத் திடீர் சூளுரை Contract கையொப்பமானதற்குப் பிறகு இருக்கலாம். அதன் பின் சில மாதங்களில் நடிகர் கட்சிப் பெயர், கொடி, சின்னம் என வரிசையாக அவர் விருப்பம்போல் பெற்று, Confident-ஆ இருங்க, நல்லதே நடக்கும் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

Dot 4: நடிகர் பிரதமராகி, அமெரிக்க - ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையே சமரசம் செய்வார் - நடிகரின் ஜோசியர்

நவீன ஜோதிடர்கள் ஓலைச்சுவடிகளையும் ஜாதகக் கட்டங்களையும் ஓயாமல் பார்த்து வருங்காலத்தைக் கணித்து வயிற்றுப் பிழைப்பை ஓட்டுவதில்லை. அவர்கள் சற்றேறக்குறைய Data Scientists. உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பது தொடங்கி, பல்வேறு சந்தர்ப்பங்களில் நடப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உள்ள Outcome-ஐ, போதுமான அளவு Data-வின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து, வெளியேறுவதற்குத் தேவையான அத்துணை அவசர வழிகளையும் உள்ளடக்கிய சாதுரியமான மொழியில் prediction-ஆகச் சொல்லி வருகிறார்கள்.

More the supporting data they have, more the confidence with which predictions are proclaimed. இங்கு நடப்பது ஒரு கணிப்பே அல்ல என்பது நம் கணிப்பு. மாறாக, வரும் சில பத்தாண்டுகளுக்கு நாக்பூர் அதிகார மையம் போட்டிருக்கும் சில contract-களின் insider information-ஐக் கையில் வைத்திருப்பவர் எவ்வளவு இறுமாப்புடன் ஒரு முன்னறிவிப்பைச் செய்ய முடியுமோ, அதைத்தான் நமது நடிகரின் ஜோசியர் செய்திருக்கிறார். ஞானசூன்யேஷ்வர் SIR இடமிருந்து எவ்வளவு துல்லியமாக insider information இவரிடம் பகிரப்பட்டிருந்தால், ஓட்டு எண்ணப்படும் நாளன்று அதிகாலையில் அவ்வளவு தைரியமாகப் பூங்கொத்துடன் நடிகரின் வீட்டுக்கு ஜோசியரால் வர முடிந்திருக்கும்?

தமிழ் சினிமாவில் அடிக்கடி தென்படும் ஒரு காட்சி உண்டு. வில்லன் குரூப் ஏதோ ஒரு உண்மையைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்க, காமெடியன் அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் உண்மையை வில்லன் ஆட்களிடமே சொல்லுவார். ஆனாலும் வில்லன்கள் காமெடியன் சொல்வதைக் காமெடியாக உதாசீனப்படுத்திவிட்டு மீண்டும் அந்த உண்மையைத் தேடப் புறப்பட்டுவிடுவார்கள். கடைசியில் காமெடியனுக்கு “நான் தான் அப்பவே சொன்னேண்டா” என்று ஒரு டயலாக் வைத்து முடித்து விடுவார்கள். இந்த ஜோசியக் காமெடியனை வைத்து அவர்கள் சொன்ன திட்டத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

Dot 5: சங்கிகளின் கள்ள மௌனம், தற்குறிகளின் சத்தமும்

கேரளாவைச் சிறுபான்மை மதங்களிடம் முற்றாக இழந்து விட்டதாக இதுவரை கதறிக் கொண்டிருந்த சங்கிக் கூட்டம், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு சிறுபான்மை இனத் தலைமையிடம் அரசு சென்று விட்டதற்கான எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக பழனி முருகன் கோவில் நிலப் பரிவர்த்தனை முறைகேட்டில் "அது எப்படிடா எங்க பழனி முருகன் இடத்தை இந்தப் பாவாடை அரசாங்கம் திருட அனுமதித்தது?" என்று சிலம்பம் சுற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹரிஹர சர்மா வகையறாக்கள், திருப்பாற்கடலில் அனந்தசயனம் கொண்டிருக்கும் திருமாலின் மோனத்தில் ஆழ்ந்திருப்பதை நாம் என்னவென்று புரிந்துகொள்வது?

நடிகர் பிரதமராக வரவேண்டும் என்ற குரல்கள் மற்ற மாநிலங்களில் மட்டும் இல்லை; தமிழ்நாட்டுத் தற்குறிகளும் அவ்வப்போது எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள், இருப்பார்கள். நாம் ரூட் மாஃபியா என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் ஒரு டம்மி மாஃபியா. ஒரு நடிகரின் மேலாளர் ஒரு சிறு குழுவை வைத்து, சமூக ஊடக அல்காரிதம்கள் மூலம் நாட்டைப் பிடிக்கும் சக்தி வாய்ந்த மாஃபியாவை உருவாக்கி விட்டார் என்பதெல்லாம் அதீத கற்பனை. மாறாக, இங்கு களமாடிக்கொண்டிருப்பது நாக்பூர் சங்கி மாஃபியாவேதான். அவர்களிடத்தில்தான் சமூக ஊடக அல்காரிதங்களின் கடிவாளம் இருக்கிறது; அவர்கள்தான் நடிகர் பிரதமர் ஆக வேண்டும் என்ற தற்குறிக் குரல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். இந்தத் தனிக்குரல்கள், மெல்ல மெல்ல முழக்கங்களாக மாறும் நாடகத்தை அடுத்த சில ஆண்டுகள் நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

Dot 6: நான் முதல்வர் ஆவேன் - நடிகை

இப்படி ஒரு திட்டம் இருப்பதாக நடிகை பல ஆண்டுகளுக்கு முன் சொன்ன ஒரு காணொளியை அநேகம் பேர் பார்த்திருக்கக்கூடும். அது விளையாட்டாகக் கூறப்பட்டதாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு ஆழமான விருப்பம் நடிகைக்கு இருப்பதாகவே தெரிகிறது. அடுத்த ஜெயாவாக உருவெடுக்க முதலில் அடுத்த இராமச்சந்திரன் தயாராக வேண்டும். அடுத்த இராமச்சந்திரனாக உருவெடுக்கத் தன் அப்பாவால் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு, அந்தப் பயணத்தில் முன்னேறிக்கொண்டிருந்த நடிகருடன் உறவு பேணி, திருமணம் போன்ற தடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘செல்வியாகவே’ அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தமது கனவை முன்நகர்த்திச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 2016, 2018 தலைவர்களின் இழப்புக்குப் பின் உருவானதாகச் சொல்லப்பட்ட வெற்றிடம், வருவேன் வரமாட்டேன் என்று உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரின் பின்வாங்கல், 2021 திராவிட மாடல் அரசின் உறுதியான முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பின், நாக்பூர் நாசக்காரர்களுக்கும் நடிகர்-நடிகைக்கும் இடையேயான ஒப்பந்தம் உறுதியானதாகப் புரிகிறது. ஒப்பந்தத்திற்குப் பின் நடிகர் எப்போதும் போல் இயக்குநர் - தயாரிப்பாளருக்குத் தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் மனதில் ஓடும் ஒரு லாஜிகலான கேள்வி எனக்குப் புரிகிறது. மகோரா முதல்வராகும் போது அவருக்கு இருந்த வயது மூப்பு பின்னணியில், அவருக்குப் பின் முதல்வராக ஜெயா காத்திருந்ததில் ஒரு லாஜிக் இருந்தது. தற்போதைய நடிகர் எப்போது ரிட்டையர் ஆவது, நடிகையின் கனவு எப்போது நிறைவேறுவது? இந்தக் காத்திருப்பின் பலன்தான் என்ன? அங்குதான் நாக்பூர் contract-ஐ நாம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு WIN-WIN-WIN-WIN contract.

Contract-படி:

  1. நடிகர் முதலில் முதல்வர் ஆவார், விரைவில் அடுத்த ஜி ஆக promotion வாங்கி டெல்லிக்குப் போய்விடுவார்.
  2. நடிகை தமிழகத்தை ஆள்வார். 3 & 4. நாக்பூராருக்கு இரண்டு WIN. ஒன்று, தமிழகத்தில் திராவிட அரசியலைக் காலி செய்வது; அடுத்தது, இந்திய அளவில் ஜி-க்கு Successor தேடிக் கண்டுபிடித்தாயிற்று.

நம் முன் உள்ள சவால்:

மேலே சொல்லப்பட்டிருக்கும் எதுவுமே ரகசியம் இல்லை. நம் முன்னால் மொத்த திட்டத்தையும் கசிய விட்டுவிட்டு, “உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. தேர்தல் நாடகக் கமிஷன் முதல், ஒன்றிய நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே காவிமயமாக்கப்பட்டு விட்டது. அனைத்துச் சமூக ஊடக நிறுவனங்களின் குடுமியும் எங்கள் கையில், நம்பகத் தன்மையற்ற காங்கிரஸை வைத்துக் கொண்டு பிராந்தியக் கட்சிகள் யாரும் எங்கள் திட்டத்தின் உரோமங்களைக் கூட ஒன்றும் செய்ய முடியாது” என்பதுதான் அந்தச் சவால். ஆம், உண்மையில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

மேலே விவாதிக்கப்பட்ட Conspiracy Theory-க்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள link-களுக்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

https://www.instagram.com/reel/Da2SzEDq_Ms/

https://www.hindutamil.in/news/tamilnadu/1012069-lets-make-a-tamil-the-prime-minister-of-the-country-amit-shah-assured-in-chennai.html

https://www.dinamalar.com/news/world-tamil-news/tamil-prime-minister-in-future-bjp-senior-leader-amitshah-target-to-win-25-lok-sabha-constituencies/3345011

https://m.dailyhunt.in/news/india/english/the+commune-epaper-thecom/vijay+can+remain+cm+for+50+yrs+destined+to+be+global+leader+can+mediate+between+us+and+russia+says+his+astrologer+radhan+pandit-newsid-n712336689

https://www.youtube.com/shorts/l8U1SBD3yZ8

https://www.oneindia.com/chennai/tn-cm-vijay-will-solve-russia-america-problems-claims-astrologer-radhan-pandit-gets-trolled-8088473.html

https://www.instagram.com/reel/DX8_rmcvx6b/

கீற்று பாஸ்கர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.