chidambaram priestsசிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடை ஏறி சாமி தரிசனம் செய்ய வந்த ஜெயஷீலா என்ற பெண்ணை அங்கிருக்கும் ரவுடி தீட்சிதர் கூட்டம் சாதிப் பெயரைச் சொல்லி, திட்டியதோடு தாக்கவும் செய்திருக்கின்றது.

எப்படி சிவனடியார் ஆறுமுகசாமியை தேவாரம் பாட விடாமல் கை, கால்களை உடைத்து வீதியில் தூக்கி எறிந்தார்களோ, அதே போல ஜெயஷீலாவையும் இழிவு செய்திருக்கின்றது கொழுப்பெடுத்த பார்ப்பனக் கூட்டம்.

இந்தக் கூட்டத்தின் கொட்டத்திற்கு ஒரே காரணம் நாட்டின் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து அரசு அமைப்புகளும் பார்ப்பன சேவை மடங்களாக இருப்பதுதான்.

2014 ஆம் ஆண்டு வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கோயிலின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, கோயிலை அரசு கையகப்படுத்த முடியாது எனக் கூறியிருக்கின்றது.

மேலும் கோயிலின் வருமானத்தை அனுபவித்துக் கொள்ளவும் பார்ப்பனக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்படி தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தீர்ப்பு கொடுத்தார்கள்.

அதாவது கோயில் இருக்கும் வரை அதன் சொத்துக்களை தீட்சிதக் கூட்டம் சூறையாடலாம். ஆனால் கோயிலை விற்க அனுமதி இல்லை என்பதுதான் தீர்ப்பின் பொருள். இதுதான் பார்ப்பன நயவஞ்சகத் தீர்ப்பு.

நந்தனையும், பெற்றான் சாம்பானையும் முடித்துக் கட்டிய தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி, மன்னன் இராஜராஜனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதன்தான் என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து, அதை இன்று வரை நிலைநாட்டி வரும் தீட்சிதர்கள், கோயிலின் ஒரு செங்கல்லுக்குக் கூட சொந்தமில்லை என்றாலும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கோயிலின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடி வரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்ட தீட்சிதர்கள்தான் இன்று வரை நம்மை இன இழிவு செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தன்னுடைய உச்சிக் குடுமியில் முடிந்து வைத்துக் கொண்டு எல்லாவிதமான அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றம் செய்யும் இடமாக சிதம்பரம் கோயிலை மாற்றி வைத்திருக்கின்றார்கள்.

தற்போதைய பிரச்சினை என்பது தீட்சிதக் கூட்டத்திற்கு உள்ளேயே நடக்கும் உள்ளடி வேலைகளால்தான் அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.

சிற்றம்பல மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய ஜெயஷீலா என்ற பெண்ணை அங்கிருக்கும் கணேச தீட்சிதர் என்பவரின் மகன் தர்ஷன் தீட்சிதர் என்பவர்தான் அழைத்து வந்திருக்கின்றார்.

இந்த தர்ஷன் தீட்சிதர்தான் தன் மகனுக்கு அர்ச்சனை செய்ய வந்த லதா என்ற பெண்னை அர்ச்சனை செய்யாமல் ஏமாற்றியதோடு, அதை தட்டிக் கேட்டபோது அந்தப் பெண்ணைத் திட்டி கன்னத்தில் அறைந்து, பிடித்துத் தள்ளிவிட்ட ரவுடி.

இன்று இவனே ஒரு தலித் பெண்ணை சிற்றம்பல மேடையில் நின்று வழிபட அழைத்துச் செல்கின்றான் என்றால், இதில் இருக்கும் உள்ளடி வேலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி இருப்பினும் தீட்சித ரவுடிக் கும்பலின் பார்ப்பன சாதிவெறி மீண்டும் முச்சந்தியில் அம்பலமாகி இருக்கின்றது.

தற்போது பாதிக்கப்பட்ட ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாக்குதல் தொடர்பான சட்டப் பிரிவுகள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு தீட்சிதன் கூட கைது செய்யப்பட்டவில்லை.

தொடர்ச்சியாக தீட்சிதக் கூட்டம் தமிழ் மக்களின் மீது தாக்குதல் தொடுப்பதையும், அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்துவதையும் செய்து வருகின்றது. பெரியார் மண் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நம்மால் ஒரு சிறு குள்ளநரிக் கூட்டத்தின் கொட்டத்தை அடக்கி கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை என்றால் பெருமை பேசுவதில் என்ன பயன் இருக்கின்றது?

தமிழ் மக்களின் உழைப்பில் உருவான கோயிலில் தமிழில் பாட முடியாது என்பதும், கோயிலின் அதிகாரம் பாப்பன தீட்சிதக் கும்பலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்பதும் சிதம்பரம் கோயில் தமிழ்நாட்டில் உள்ளதா, இல்லை ஆரியவர்த்தத்தில் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

ஆயிரங்கால் மண்டபத்தை பணத்திற்காக, சிவகாசி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் மற்றும் ரத்னா ஸ்டோர்ஸ் தம்பதியினரின் திருமணத்திற்கு ஆகம விதிகளை மீறி கோவிலை விடுதிபோல் அலங்கரித்து வாடகைக்கு விட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கினார்கள்.

இப்போது மட்டுமல்ல 1993லேயே ரூ.1,27,500 மதிப்புள்ள வைரத் தொங்கல் நகை களவு போனது. களவுக்குக் காரணமானவர்கள் பூசை செய்கிற சுமார் 300 தீட்சிதர்களுக்கு மத்தியில்தான் இருக்க வேண்டும் என்று கைலாச சங்கர தீட்சிதர் என்பவரே பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல கோயிலில் இருந்த நந்தனார் சிலை அகற்றப்பட்டு தீண்டாமையின் அடையாளமாக மூடிவைக்கப்பட்ட தெற்கு கோபுர வாசல் இன்றுவரை திறக்கப்படவில்லை.

இவற்றை எல்லாம் இன்றும் தமிழ் மக்களும், தமிழகத்தை இதுவரை ஆண்ட அரசுகளும் கைக்கட்டி வாய்பொத்தி வேடிக்கை மட்டுமே பார்த்து வந்திருக்கின்றனர்.

தீட்சிதர்களுக்கு தமக்கு சோறுபோடும் தமிழக மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றோ, அவர்களை மதிக்க வேண்டும் என்றோ எப்போதுமே தோன்றியது கிடையாது. காரணம் பார்ப்பனக் கூட்டத்தின் டிஎன்ஏவிலேயே சாதியக் கொழுப்பு அதிகமாகப் படிந்திருக்கின்றது. காட்டிக்கொடுத்தும் கூட்டிக் கொடுத்துமே வாழ்ந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்களைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கின்றது.

தான் என்ன செய்தாலும் உச்சிக்குடுமி நீதிமன்றமும் அதிகார வர்க்கத்தின் மேல் மட்டத்தை ஆக்கிரமித்திருக்கும் லங்கோடு பார்ப்பனக் கூட்டமும் தன்னை காப்பாற்றிவிடும் என்ற திமிர்தான் கையை நீட்ட வைக்கின்றது.

சாதி சொல்லி திட்டும் நாக்குக்கோ, சாதி சொல்லி அடிக்கும் கைகளுக்கோ தமிழ் மக்கள் புத்தி புகட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உண்டக்கட்டி பார்ப்பனக் கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசு பாதிக்கப்பட்ட ஜெயஷீலாவுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். அதே போல வரலாறு முழுவதும் தீட்சிதக் கூட்டத்தால் இழிவு செய்யப்பட்ட அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாக உடனடியாக சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

- செ.கார்கி

Pin It