கீற்று இணைய தளத்தின் அடுத்த முயற்சியாக இருந்த butitis.com என்ற ஆங்கில இணைய தளத்தை மீண்டும் நடத்தத் தொடங்கி உள்ளோம். கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் மற்றும் பெரியார் தத்துவங்களின் ஒளியில் உலக அரசியல் மற்றும் இந்திய அரசியலை விமர்சனப் பார்வையுடன் அணுகும் இணைய தளமாகவும், சாதி, மத, இன, நிறவெறி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆங்கிலத்தில் தமிழர்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் இணைய தளமாகவும் இது இருக்கும்.

இந்திய அரசியலில் தமிழகம் என்றுமே தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. அதற்குக் காரணம் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வரும் பார்ப்பன எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி. அந்த மரபின் தொடர்ச்சியாக, 10% உயர்சாதி இடஒதுக்கீடு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, காஷ்மீர் தேசிய இனப் பிரச்சினைக்கு ஆதரவு என தற்போதும் இந்திய அரசியலில் தமிழகத்தின் குரல் தனித்தே ஒலிக்கிறது. அந்தக் குரலுக்கு ஆங்கிலத்தில் கருத்தியல் ஆதாரங்களை, தத்துவப் பின்புலத்தை வழங்கும் இணைய தளமாக இது இருக்கும்.

கீற்று இணைய தளம் மட்டுமல்லாது, தமிழகத்தின் முற்போக்கு இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுவதோடு, ஆங்கிலத்தில் நேரடியாக எழுதும் தமிழர்களின் கட்டுரைகளையும், உலகு தழுவிய இடதுசாரிகளின் தோழமைக் குரலையும் இதில் வெளியிட இருக்கிறோம்.

சமகால அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் குறித்த தமிழ் நாட்டு முற்போக்கு சக்திகளின் கருத்து என்ன என்பதை வெளியுலகிற்குத் தெரிவிக்கும் விதமான கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுவது முதற்பணி. அதோடு, தமிழர்களின் பண்பாடு, வரலாறு குறித்த கட்டுரைகளை மொழி பெயர்க்க வேண்டும்.

இந்திய அரசியல் அரங்கில் நமது குரல் தனித்து ஒலிப்பதற்கான வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் வகையில் கீழ்க்காணும் தலைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.

1. திருவள்ளுவரில் தொடங்கி சித்தர்கள், வள்ளலார், அயோத்திதாசர் என நீண்ட பார்ப்பன எதிர்ப்பு மரபு
2. நீதிக் கட்சி வரலாறு மற்றும் சமூக, அரசியல் பங்களிப்பு
3. கீழடி, ஆதிச்சநல்லூர் என தமிழர்களின் தொன்ம வரலாறு
4. சுயமரியாதை இயக்க வரலாறு
5. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு
6. அரசியல் சட்ட எரிப்புப் போராட்ட வரலாறு
7. பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
8. திராவிட ஆட்சியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள்
9. ஈழப் போராட்டத்தின் நியாயங்கள்
10. ஏழு தமிழர் விடுதலை
11. தமிழக இடதுசாரிகளின் போராட்ட வரலாறு
12. தமிழகத்தின் ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள்

என மொழிபெயர்க்க வேண்டியவை ஏராளம் உள்ளன. 

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதற்கு தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களை அணுகுவது, நமக்கு மிக அதிக பொருட்செலவாகும். அதற்கான நிதியைத் திரட்டி, தொடர்ந்து அப்பணியில் ஈடுபடுவது பெரும் சிக்கலாகி விடும்.

butitis.com-க்கான கட்டுரைகளை இருவழிகளில் பெறுவது என முடிவெடுத்துள்ளோம்.

1. தன்னார்வலர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பது.

இப்பெரும் பணிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் உள்ள தன்னார்வலர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். ஒருவர் வாரம் ஒரு கட்டுரையை மொழிபெயர்த்துக் கொடுத்தாலே போதுமானது. Google Translate மாதிரியான செயலிகள் நம் பணியை எளிதாக்கிக் கொடுக்கும்.

இப்பணியில் இணைய விரும்புவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.  

2. மாணவ மொழிபெயர்ப்பாளர் திட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, மொழிபெயர்ப்பு மற்றும் நேரடிக் கட்டுரைகளை எழுத வைப்பது; அவர்களுக்கு சிறு உதவித் தொகை அளிப்பது

இதில் இரண்டு நன்மைகள், ஒன்று, குறைந்த அளவு நிதி ஆதாரத்தில் இத்தளத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்; இரண்டு, ஆங்கிலத்தில் எழுதக் கூடிய அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்க முடியும்.

மாதம் 100 கட்டுரைகளை மொழிபெயர்ப்பது; ஒரு கட்டுரைக்கு ரூ.300 மாணவர்களுக்கு உதவித் தொகை அளிப்பது என உத்தேசித்துள்ளோம்.

மாதம் 30,000; ஆண்டிற்கு 3,60,000 என்பது மிகப் பெரிய தொகை. ஒத்த கருத்துள்ள தோழர்கள் சிலர் கைகொடுக்க முன்வந்துள்ளனர். கூடுதல் பங்கெடுப்பு தேவைப்படுவதால், உங்களிடம் வருகிறோம்.

butitis.com நோக்கத்தில் அக்கறை உள்ள, அதே நேரத்தில் மொழிபெயர்ப்பில் பங்கெடுக்க இயலாத தோழர்களிடம் நிதி உதவி கோருகிறோம். தங்களால் முடிந்த நிதி உதவியைத் தாருங்கள்...

இதுவரையிலான வரவு செலவுக் கணக்கு 

keetru butitis expense 1

keetru butitis expense 2

keetru butitis expense 3

இதேபோல், ஒவ்வொரு மாதமும் butitis.com தளத்தின் வரவு, செலவுக் கணக்கு கீற்றிலும், பேஸ்புக் தளத்திலும் வெளியிடப்படும்.

நிதி உதவி அளிக்க வேண்டிய வங்கிக் கணக்கு எண்:

A/C NO - 139301503394
A/C Holder's Name - J Hemalatha
Branch - ICICI Bank, West Tambaram
IFSC Code - ICIC0001393
Account Type - Savings Account

 
UPI code:
hema google pay upi

பணம் செலுத்திய பின், அது தொடர்பான விவரங்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தவும். ஆர்வமுள்ள மாணவர்களை அறிமுகப்படுத்தவும்.

கீற்று தளம் பொருளாதாரச் சிக்கலில் தொய்வடைந்த போதெல்லாம் கை கொடுத்த தோழமைகளை நம்பியே இப்பெரும் வேலையில் இறங்கியுள்ளோம்.

தோழர்களின் ஒத்துழைப்போடு, இப்பெரும் பணியை வெற்றிகரமாக நடத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், மாணவர்களிடம் இச்செய்தியைக் கொண்டு சேர்க்கவும்.

என்றும் தோழமையுடன்

கீற்று நந்தன்

 
Pin It