வரலாற்றில் மதங்களை பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் பலர் தங்களை கடவுளின் தேவதூதன் என்றும், கடவுளின் குமாரர்கள் என்றும் சொல்லியே தங்களின் உலுத்துப்போன பிற்போக்கு மத கருத்துகளை மக்களிடம் திணித்தார்கள். அந்தந்த கால ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாக செயல்பட்ட இவர்கள், ஒருவகையில் சில முற்போக்கு பாத்திரத்தையும் வரலாற்றில் ஆற்றினார்கள். அது மக்களை பல கடவுள் வழிபாட்டில் இருந்து ஒரு கடவுள் வழிபாட்டிற்குத் திருப்பியது. இதன் மூலம் பல்வேறு குழுக்களாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த மக்களை தாங்கள் ஒரே கடவுளை பின்பற்றுபவர்கள், ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கி மனிதர்களிடம் ஒரு ஐக்கிய உணர்வை உருவாக்கியது. அதுவே அந்த மதங்கள் மற்ற மதங்களை அழிக்கவும் தன்னையே தனிப்பெரும் மதமாக அறிவித்துக் கொள்ளவுமான வலிமையை அதற்குக் கொடுத்தது. ஆனால் வரலாற்றில் மனிதர்களைப் பிரித்து அவர்களை சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கி, அவர்களை நிரந்தர அடிமைத்தனத்தில் உழல நிர்பந்தித்த ஒரே மதம் பார்ப்பன இந்துமதம் தான்.
முப்பத்து முக்கோடி தேவர்களும், கோடிக்கணக்கான கடவுள்களும், அந்தக் கடவுள்களை பெருமைப்படுத்த எழுத்தப்பட்ட சாஸ்திரங்களும், புராணங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் என எல்லாமே குறிப்பிட்ட ஒரே சாதியைச் சேர்ந்த, அந்தச் சாதியின் மேலாண்மையை தூக்கிப் பிடிக்கும் கருத்தியலாக இருப்பது பார்ப்பன இந்துமதத்தில்தான். உலகில் வேறு எந்த மதத்திலும் தன்னுடைய கருத்தியலை கடைபிடிக்கும் கோடான கோடி மக்களை தேவடியாப் பயல் (சூத்திரன்) என்று சொன்னதாக, அதையே சட்டமாக்கி அசிங்கப்படுத்தியாக குறிப்பாகக் கூட நம்மால் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட பாசிச பார்ப்பனியம் தன்னை காலந்தோறும் இந்த மண்ணில் நிலைத்து நிற்க அது பார்ப்பனர்கக்ச் சார்ந்து இயங்கியதைக் காட்டிலும், அதனால் சூத்திரன் பட்டம் பெற்றவர்களையே பெரும்பாலும் சார்ந்து இருந்துள்ளது. அன்று பார்ப்பானுக்கு தன்னுடைய மனைவியையே கூட்டிக்கொடுத்து மோட்சத்திற்குப் போக ஆசைப்பட்ட சூத்திர மன்னர்கள் தொடங்கி, இன்று பார்ப்பனியத்தின் அடிப்பொடிகளாக அவர்களின் மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட, சூத்திரன் என்ற நிலையை தங்களுக்குக் கிடைத்த மிக உயரிய அங்கீகாரமாகக் கருதும் சங்பரிவாரங்களில் இருக்கும் நபர்கள்வரை பார்ப்பனியத்தை இந்த மண்ணில் அழியவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட நபர்களால்தான் வரலாற்றில் தனக்கு எதிராக இருந்த அத்தனை தத்துவங்களையும் பார்ப்பனியத்தால் அழிக்க முடிந்தது. பெளத்தம், சமணம், சாங்கியம், உலகாயதம் என அனைத்து முற்போக்கு தத்துவங்களையும் பார்ப்பனியம் சூத்திர அரசர்களையும், சூத்திர அடிமைகளையும் கொண்டே ஒழித்துக் கட்டியது. நாடு முழுவதும் செல்வாக்காக இருந்த புத்த, சமண மதத்தை அழித்ததோடு அல்லாமல், அவர்களின் விகாரைகள் அனைத்தையும் அழித்து, இந்துக் கோயில்களைக் கட்டி அங்கே பார்ப்பான்களையும், பாப்பாத்திகளையும் கடவுள்களாக நிறுவினர். இது எல்லாம் அறிவியல் ரீதியாக பல வரலாற்று அறிஞர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கூறினார். ஆனால் அதைச் சீரணிக்க முடியாமல் குய்யோ முய்யோ என சத்தம் போட்ட காவி பயங்கரவாதிகள், அவர் தலைக்கு ஒரு கோடி விலை வைத்த கைப்பிள்ளைகள், இப்போது குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கோயில் வேண்டுமா? இல்லை மசூதி வேண்டுமா? என அப்பட்டமாக மதவெறியுடன் மோடி பேசியதற்கு என்ன செய்யப் போகின்றார்கள்?
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலுக்கு எதிரான வலுவான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு இருக்கின்றது. பிஜேபியால் இனி எந்தக் காலத்திலும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவே முடியாது என்ற அளவில் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கின்றது. இந்த சூழ்நிலையில் எதைச் செய்தாவது, என்ன மோசடி செய்தாவது தேர்தலில் வெற்றிபெற அது முயன்றுகொண்டு இருக்கின்றது. வெறும் கவர்ச்சி கோஷங்களையும், மோசடியான வளர்ச்சி புள்ளிவிவரங்களை மட்டுமே வைத்து இனி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பிஜேபி கும்பல், தங்களது வழமையான உத்தியான மிரட்டிப் பணிய வைக்கும் பாணியை கடைபிடிக்கத் துவங்கியுள்ளது. அதன் உச்ச கட்ட கோர வெளிப்பாடுதான் மோடி பனங்கந்தாவில் பேசிய வெறிப்பேச்சு. அவர் நேரடியாகவே இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருக்கின்றார். குஜராத் தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வப் போகின்றோம் என்ற அச்சம்தான் மோடியை வெளிப்படையாக தன்னுடைய ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவைப் பேச வைத்திருக்கின்றது.
குஜராத் தேர்தலுக்கு முன்பு நடந்த உ.பி உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைத்தது. மாநிலத்தில் உள்ள 5434 நகரப் பஞ்சாயத்து உறுப்பினர்களில் 4728 இடங்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. அதனால் வெறும் 662 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதே போல நகராட்சி உறுப்பினர் தேர்தலிலும் மொத்தமுள்ள 5261 இடங்களில் 4303 இடங்களில் பாஜக தோற்றிருக்கின்றது. அதே போல நகராட்சி மன்றத் தலைவர்களுக்கான தேர்தலில் 198 இடங்களில் 127 இடங்களில் பாஜக மண்ணைக் கவ்வி இருக்கின்றது. இதே போல மத்தியப் பிரதேச மாநில சித்ரகூட் தொகுதியில் நடைபெற்ற இடைதேர்தல், பஞ்சாபின் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், மகாராஷ்டிரத்தின் நாந்தோட் மாநகராட்சித் தேர்தல் போன்ற அனைத்திலும் பாஜக படுதோல்வி அடைந்திருக்கின்றது. இத்தனை தோல்விகளும் சேர்ந்து காவி வானரங்களின் மூளையில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. காவி பண்டாரங்களுக்கும், வளர்ச்சிக்கும் துளியும் சம்பந்தமே கிடையாது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள். காவிவேட்டி கட்டிக் கொண்டு காலித்தனம் செய்து பிழைக்கும் இந்தக் கும்பல்களால் ஒரு நாளும் நாட்டில் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை மாறாக இஸ்லாமிய வெறுப்பை வளர்க்கவும், மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் விற்பதற்கே இந்தக் கும்பல் லாயக்கு என்பதையும் ஒட்டுமொத்த இந்தியாவே இன்று ஒருமித்த குரலில் சொல்கின்றது.
அதனால்தான் பழையபடி குஜராத்தில் ராமர் கோயில் பிரச்சினையை எழுப்பி, இஸ்லாமிய மக்களை மிரட்டிப் பணிய வைக்க மோடியின் கெட்ட மூளை யோசித்து இருக்கின்றது. அதுவும் போதாமல் பாகிஸ்தான் சதி, சீனா சதி என்று, பேசாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கும் நாடுகளை எல்லாம் வம்புக்கு வேறு இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வெற்றியே ருசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்விகளால் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்து இருக்கின்றது. இனி இவர்கள் பைத்தியம் பிடித்த நாயைப் போன்றோ, இல்லை குடிக்க பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டும் ஒரு குடிநோயாளியைப் போன்றோ தான் நடந்துகொள்ளப் போகின்றார்கள்.
தேவை ஏற்பட்டால் கிருஷ்ணன் பிறந்த இடம், பிள்ளையார் பிறந்த இடம், அவன் அப்பன் பிறந்த இடம் என சொல்லி ஏதாவது ஒரு மசூதியை இடித்தோ, மாட்டுக்கறி தின்றான் என்று சொல்லி எவன் கழுத்தையாவது அறுத்தோ, இல்லை லவ்ஜிகாத் என்று சொல்லி யாரையாவது அடித்துக் கொன்று எரித்தோ தனது ஓட்டுவங்கியை மிரட்டியாவது உயர்த்திக் கொள்ள முற்படுவார்கள். வழக்கம் போல பார்ப்பன பாசிசத்தை நக்கிப் பிழைக்கும் சூத்திரர்கள் வந்தே மாதரம் என்றோ, பாரத்மாதா கீ ஜெய் என்றோ கோஷம் போட்டு வழிமொழிவார்கள்.
- செ.கார்கி