கோவிலில் மாட்டிறைச்சியை வீசிய ஷிவகுமார்

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்திலுள்ள சயீ தாபாத்-மதனப்பேட் பகுதிகளில் கடந்த வாரம் திடீரென வகுப்புக் கலவரம் வெடித்தது. இக் கலவரத்திற்கு காரணம் மதனப்பேட் பகுதியில் அமைந்துள்ள ஹனுமன் கோவிலுக்குள் வெட்டப்பட்ட மாட்டின் கால்கள் வீசப் பட்டதும், பச்சை நிறபொடிகள் தூவப்பட்டிருந்ததும்தான்.

இந்த இழிவான செயலில் ஈடுபட்டது முஸ்லிம்கள்தான் என்று பிரச்சாரம் முடுக்கி விடப் பட... சயீதாபாத் - மதனப்பேட் பகுதிகளில் கலவரம் மூண்டது.

இப்பகுதியிலுள்ள முஸ்லிம் களின் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் தாக்கப்பட்டன. வாக னங்கள் எரிக்கப்பட் டன. வழக்கம்போலவே கலவரத் தின்போது, கலவரத்தைக் கட்டுப் படுத்துகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீதே காவல்துறையி னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு முஸ்லிம் இளைஞர்க ளையும் கைது செய்திருக்கின்ற னர்.

கலவரப் பகுதிகளில் தடை உத் தரவை அமல்படுத்திய காவல்து றையினர் முஸ்லிம் இளைஞர்க ளைத் தேடித் தேடி கைது செய் துள்ளனர்.

கலவரத்தை உருவாக்கிய சமூக விரோதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறையும் முஸ்லிம்க ளையே குறி வைத்து கைது பட லத்தை நடத்தியிருப்பது விந்தை யாக இருக்கிறது என்கிறது ஹைதராபாத்திலிருந்து வெளி வரும் சியாசத் உருது பத்திரிகை.

"கலவரத்தை முஸ்லிமல்லாத சமூக விரோதிகள்தான் நிகழ்த்தி னர் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தும் அவர்களைக் கைது செய்யவில்லை என்கின்றனர் சயீதாபாத் முஸ்லிம்கள்.

"தெலுங்கு நாளிதழ்களில் வெளியாகியுள்ள போட்டோக்க ளின் அடிப்படையில் கலவரக்கா ரர்கள் அடையாளம் காணப்பட் டுள்ளனர். டி.வி. சேனல்களும் கலவரக்காரர்களின் போட்டோக் களை வெளியிட்டுள்ளன...'' என்று ஹைதராபாத் கூடுதல் ஆணையர் சத்திய நாராயணன் (டிடெக்டிவ் பிரிவு) தெரிவித்திருந்த போதும், அந்த போட்டோக்களில் உள்ள (முஸ்லிமல்லாத) பலரைக் கைது செய்யாத காவல்துறை, ஜாகீர் உசேன் காலனி, ஜீவன் யார் ஜுங் காலனி, அமீன் காலனி, கர்மா குடா உள்ளிட்ட முஸ்லிம் பகுதி களிலுள்ள வீடுகளுக்குள் நுழைந்து முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்துள்ளது.

அதே சமயம், கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிமல்லாத உள் ளூர் இளைஞர்கள் (முஸ்லிம்க ளால்) அடையாளம் காட்டப் பட்ட பிறகும் அவர்களை போலீ சார் கைது செய்யவில்லை' என் றும் சுட்டிக் காட்டியுள்ளது சியாசத் நாளிதழ்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி 14 முஸ்லிம் இளைஞர்களும், 4 இந்துக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இப்படி கைது செய் யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீது கடுமையான குற்றப் பிரிவு களின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருக்கும் போலீஸ், இந்துக் கள் மீது அற்பமான, சாதாரண மான வழக்குகளைப் போட்டு பாரபட்சத்தைக் காட்டியிருக்கி றது என்றும் முஸ்லிம் இளைஞர் களை காவல்துறை கைது செய்த தில் போலீஸ் இன்ஃபார்மர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என் றும் அதே சமயம், கலவரத்தில் ஈடுபட்ட இந்து இளைஞர்கள் கைது செய்யப்பட எவரும் காவல்துறைக்கு உதவி செய்ய வில்லை என்றும் செய்தி வெளி யிட்டுள்ளது உருது நாளிதழ்.

இக்கலவரத்தின்போது முஸ்லி ம்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டபோதும் முஸ்லிம்கள் யாரும் எதிர் வினையை காட்ட வில்லை என முஸ்லிம்களின் அணு குமுறையை பாராட்டும் காவல்துறை, இன்னொரு பக்கம் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்குகளைப் போட்டிருக்கி றது.

இந்நிலையில் இக்கலவரத் திற்கு காரணம் என கடந்த 12ம் தேதி முஸ்லிமல்லாத சமூக விரோதிகள் 5 பேரை மதனப்பேட் காவல்துறை கைது செய்திருக்கி றது.

மதனப்பேட் ஹனுமன் கோவி லில் போடப்பட்டிருந்த காவல் தடையை (தடுப்பு கம்பிகள்) அகற்றிய சமூக விரோதிகள் அதன் பின் வெட்டப்பட்ட மாட்டின் கால்களை கோவிலுக்குள் வீசி யுள்ளனர்.

இக்கலவரத்தை நடத்திட சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்கிறது ஹைதராபாத் உளவுப் பிரிவு போலீஸ்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்பது வெளிப்படை யாக தெரிந்தும் இவர்கள் இந்துத் துவாவின் எந்தப் பிரிவைச் சேர்ந் தவர்கள் என்பதை காவல்துறை வெளிப்படுத்தவில்லை.

கைது செய்யப்பட்ட சமூக விரோதிகள் ஹனுமன் கோவிலுக் குள் வெட்டப்பட்ட மாட்டின் கால் களை வீசியெறிந்து கலவரத்தை உருவாக்குவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன் மதனப்பேட் பகுதியில் ஒரு மோட்டார் சைக் கிளை கொளுத்தி விட்டு ஹனுமன் கோவிலுக்கு வந்திருக்கின்றனர் என்கிறது உளவுப் பிரிவு போலீஸ்.

இந்த 5 பேர் கொண்ட குழுதான் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்திற்கு காரணம் என்றும் போலீஸ் விசாரணையில் இப்போது தெரிய வந்துள்ளது.

டிடெக்டிவ் பிரிவின் கூடுதல் கமிஷ்னரான சத்திய நாராயணா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைதராபாத் பழைய நகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 26 வழக்குகளில் தொடர்புள்ள நபர்களை (இக்கல வரச் சம்பவத்தில்) கைது செய்துள் ளதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், சி.சி. கேமராக்கள், செய்தித்தாள்களில் பதிவான படங்கள், சேனல்களில் வெளியான வீடியோ காட்சிகள் உட்பட விஞ்ஞான ரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள சமூக விரோதிகளை தேடி வருகிறது ஹைதராபாத் காவல்துறை. சைதா பாத் காவல் நிலையத்தில் 11 வழக் குகளும், மதனப்பேட், மொகல்புரா, சன்சங்பாக் காவல் நிலையத்தில் முறையே 6, 4, 2 வழக்குகளும் ஹுசைன் ஆலம் மற்றும் சந்நாயன் குட்டா காவல் நிலையத்தில் தலா 1 வழக்கு என்றும் பதிவு செய்திருக்கி றது. இக்கலவரம் ஹைதராபாத் பழைய நகருக்கும் பரவி பதட் டத்தை உருவாக்கியுள்ளது.

வழக்குகளில் பெரும்பாலா னவை முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராகவே பதிவாகியுள்ளன என் பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.

- ஃபைஸ்

கலவரங்களுக்கு காவல்துறையே காரணம்!

ஹைதராபாத் நகரின் அமைதியை குலைக்க சமூக விரோதிகள் தொடர் ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12ம் தேதி காலை ஹைதராபாத் பஹதூர்புரா காவல் நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்திருக்கும் மஸ்ஜித் இப்ரா ஹிம் கலிபுல்லாஹ் என்ற பள்ளிவா சலுக்குள் அதிகாலை தொழுகைக்கு முன் இறந்த நாயின் சடலத்தை வீசியெறிந்திருக்கிறது சமூக விரோதக் கும்பல் ஒன்று!

தொழுகைக்காக வந்த பள்ளி வாசல் நிர் வாகிகள் பள்ளிவாசலுக்குள் வீசியெறியப்பட் டிருந்த நாயின் உடலைக் கண்டு கொந்தளித்த போதும் பொறுமையைக் கடைபிடித்தவர்களாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்த னர்.

பதறிப்போன காவல்துறை சற்றும் தாம திக்காமல் முஸ்லிம் காவலர்கள் மூன்று பேரை பள்ளிவாசலுக்கு அனுப்பி வைக்க... அவர்கள் அங்கிருந்த நாயின் உடலை அப்புறப்படுத்தி யதோடு அங்கு சிதறிக் கிடந்த இரத்தச் சிதறல்க ளையும் அவர்களே கழுவி பள்ளிவாசலை சுத்தம் செய்தனர்.

பள்ளிவாசல் சம்பவம் நிகழ்வதற்கு முன், இஷன்பாக் பகுதியிலுள்ள இந்துக் கோவில் ஒன்றில் மாட்டிறைச்சி வீசப்பட்டிருந்தது. இந்த தகவல் கிடைத்தவுடன் அலர்ட்டான காவல்துறை மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.

இதன்படி சிறப்பு போலீஸ் படையை உரு வாக்கி அவற்றை ஹைதராபாத் நகரின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தது. இந்த போலீஸ் படை நகரிலுள்ள அனைத்து வழிபாட் டுத் தலங்களையும் கண்காணித்து வந்தது.

இப்படி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலை யில்தான் பஹதூர்புரா பள்ளிவாசல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது காவல்துறையின் கவன மின்மையையும், அலட்சியப் போக்கையும் தான் வெளிப்படுத்துகிறது.

கிஷன்பாக் கோவிலில் மாட்டிறைச்சி வீசப் பட்ட சம்பவத்தைப் பொறுத்தவரை அதனை முஸ்லிம்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாக கூற முடியும்.

ஏனெனில், நாட்டில் எங்கும் பிறமத வழி பாட்டுத் தலங்களில் இதுபோன்ற இழி செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபட்டதாக ஒரு சம்பவமும் இல்லை. இது தவிர, இந்த கோவில் அமைந்திருக்கும் கிஷன்பாக் பகுதி இந்து சமய மக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் பகுதி.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் இங்கே செல்வதற்குக் கூட யோசிப்பான். அப்படி இருக்கும்போது இந்த இழிவான செயலில் அவன் எப்படி ஈடுபட முடியும்? என்கின்றனர் ஹைதராபாத் முஸ்லிம்கள்.

மஸ்ஜித் இப்ராஹிம் கலிபுல்லாஹ் பள்ளி வாசல் சம்பவத்தில் ஊடகங்கள் மற்றும் முஸ் லிம் தலைவர்கள் வந்து பார்வையிடுவதற்கு முன் (இந்த செய்தி பரவி விடக் கூடாது என்கிற முனைப்புடன்) துரிதகதியில் இயங்கி, பள்ளி வாசலைச் சுத்தம் செய்து ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைத்த போலீஸôர், மதனப்பேட் ஹனுமன் கோவில் சம்பவத்தின்போது மட்டும் அங்கு வீசப்பட்டிருந்த மாட்டிறைச்சியை அகற்றி சுத்தம் செய்யாமல் இரண்டு மணி நேரங்களுக் கும் மேலாக தாமதித்து வி.எச்.பி. மற்றும் பாஜக தலைவர்கள் அங்கு வந்து பார்வையிடும்வரை - மீடியாக்கள் இந்த சம்பவத்தை கவரேஜ் செய்யும் வரை காத்திருந்தனர். காவல்துறையின் இந்த நடுநிலையற்ற, பொறுப்பற்ற ஒரு சார்புதன்மை தான் கலவரங்களுக்கு தீப்பொறியாக மாறுகின் றன.

சிறுபான்மையினரை சகிப்புத்தன்மையற்ற வர்களாக, தீவிரவாதிகளாக, தேச விரோதிகளாக பெரும்பான்மையினருக்கு எதிரானவர்களாக சித்தரிப்பதில் இந்திய காவல்துறையின் பங்கு மிக அதிகம்தான்.

நாட்டு மக்களுக்கு நடுநிலையாக இயங்க வேண்டிய காவல்துறையில் மதச் சிந்தனைப் போக்கு இருப்பது ஆரோக்கியமான இந்தியா விற்கு ஆபத்துதான்.

- ஃபைஸல்

Pin It