இந்தோனேஷியாவில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் இந்தியா உட்பட 28 நாடுகளை சுனாமி பீதியில் ஆழ்த்தியது.

மதியம் 1.40 மணிக்கு இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 8.7 ரிக்டர் அளவில் பதி வானது. நிலநடுக்கத்தின் அதிர்வு சென்னை, காஞ்சி, திருவள் ளூர், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.

சுனாமி எச்சரிக்கையை அடுத்து கிழக்கு கடற்கரையோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டன. சென்னையில் பல கல்வி நிறுவ னங்கள், தனியார் வர்த்தக நிறுவ னங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

சென்னையில் இரண்டு முறை லேசாக பூமி குலுங்கியதால் அதிர்ந்து போன மக்கள் வீடு களை விட்டு வெளியேறி வீதிக ளில் கூட்டம் கூட்டமாக நின்றிருந் தனர். மதியம் 4 மணியளவில் சுனாமி ஆபத்து இல்லை என்று பேரிடர் மையத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட பின்பும் மக்கள் மனதிலிருந்து பீதி அகலவில்லை.

8.7 ரிக்டர் அளவில் நில நடுக் கம் ஏற்பட்டபோதும் அது பெரிய அளவில் சுனாமி அலைகளை உரு வாக்கவில்லை என்பது ஆறுத லான விஷயம்தான்.

கடலுக்கடியில் உள்ள நிலத்தில் பூகம்பம் ஏற்படும்போது பூகம்பத்தின் அதிர்வினால் அப்பகுதியி லுள்ள நீர் வேகமாக இடம் பெயர் கிறது. இவ்வாறு இடம் பெயரும் கடல் நீர் அதிவேகமாக கடற்க ரையை நோக்கிப் பாய்கிறது.

கடலுக்கு பல கிலோ மீட்டர் கள் ஆழத்திலிருந்தே கரையை நோக்கி பயணிக்கும் நீர் கடற்க ரையை நெருங்கும்போது பல மீட்டர்கள் உயரத்துக்கு எழும்பி ராட்சத அலைகளாக மாறி அசுர வேகத்தில் கரையைத் தாக்குகின் றன. இதுதான் ஆழிப் பேரலைகள் (சுனாமி) என்று அழைக்கப்படு கின்றன.

2004ல் இதே சுமத்ரா தீவில் பண்டா அசே நகரில் அடுத்த டுத்து ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமி அலைகள் சுமார் 800 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கிப் பயணித்ததால் பெரும் சேதங்களை ஏற்படுத்தின.

ஆனால் 2004 சுனாமி தாக்குத லிலிருந்து நமது அரசாங்கம் பாடம் படிக்கவில்லை. சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டால் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்கிற எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளையும் திட்டமிடாத நிலையில் மிக பலவீனமாக இருக்கிறது நமது அரசாங் கம்.

இந்தியப் பெருங்கடலில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதை பசுபிக் பெருங்கடலில் அமெரிக்கா நிர்மானித்துள்ள சீஸ்மோஸ்கிராஃப் (பூகம்ப மாணி)தான் அறிவிக்க முடி கிறது.

11ம் தேதி சென் னையை அதிரச் செய்த பூகம்பம் எச் சரிக்கையை விடுத்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் நடந்த மனதில் ஏற்படும் அச்ச வுணர்வுகளை தவிர்க்க இயல வில்லை.

நிலநடுக்க செய்தியை அறிந்த சென்னை மக்கள் வீதிக்கு வர... இன்னொருபுறம் மக் கள் வாகனங்களில் வீடுகளுக்குப் புறப்பட சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கி நின்றது.

சுனாமி வரும் என நினைத்து சென்னை கடற்கரை சாலைகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதைத் தவிர வேறு பாதுகாப்பு ஏற்பாடு கள் எதையும் அரசு நிர்வாகம் செய்யவில்லை.

சுனாமி வராத நிலையிலேயே மக்கள் வீடுகளுக்குச் செல்ல 4 மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசலைக் கடக்க வேண்டியிருந் தது. லட்சக்கணக்கான மக்கள் செல்போன்களில் தொடர்பு கொண்டதால் தகவல் தொடர்பு சேவை ஸ்தம்பித்துப் போயின. செல்போன் மூலம் எவரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது.

சுனாமி வராத நிலையில் இவ்வளவு கஷ்டம் என்றால் சுனாமி, பூகம்பம் போன்ற பேரி டர் ஏற்பட்டால் சென்னை மாநக ரத்தின் ஒரு கோடி மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்! அவர்களை அப்புறப்படுத்த, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நமது அரசாங்கம் என்ன திட்டங்களை வைத் திருக்கிறது.

அப்படி பேரிடர் ஏற் பட்டால் மீட்புப் பணி களை மேற்கொள்வதற்கு முன்பே நெரிசலில் பெரும் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படும் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்?

இனியாவது அதற்கான திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியம் அர சுக்கு இருக்கிறது என்பதை அது உணர வேண்டும். பேரிடர்கள் ஏற்படும்போது செல்போன் நிறுவனங்க ளும் தகவல் தொடர்புகள் ஸ்தம்பிக்காத வகையில் கூடுத லான சேவையை வழங்குவது குறித்து திட்டமிட வேண்டும்.

சுனாமி பாதிப்பு உள்ள உலக நாடுகள் பேரிடர்களின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான திட்டங்களைத் தீட்டி ஒத்திகை பார்த்து வரும் நிலையில் நமது அரசோ... அது வரும்போது பார்த் துக் கொள்ளலாம் என்கிற ரீதியில் தீவிரத்தை உணராமல் இருக்கிறது.

- அபு

Pin It