நாள்: நவம்பர் 1, 8, 17, 24, டிசம்பர் 1 ஆகிய நாட் களில் காலை -11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் முழக்கக்கூட்டம்,“சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயிலில் நடைபெற்றது. “இப் போராட்டம் முதலில் 2010இல் சென்னையில் வழக்கு ரைஞர் அங்கயற்கண்ணி அவர்களின் முன்னெடுப்பிலும், மதுரையில் வழக்குரைஞர் பகத்சிங் முன்னெடுப்பிலும் தொடங்கியது.

2010 இல் பெண் வழக்குரைஞர்கள் அங்கயற்கண்ணி, பொற்கொடி, சக்திராணி, காசிநாதபாரதி, சேசுபாலன் ஆகியோர் உண்ணாப் போராட்டம் நடத்தி சிறை சென்றனர். சிறை சென்றும் உண்ணாப் போராட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தனர். அதன் பிறகு 2014 இல் தொடர் உண்ணாப் போராட்டம் நாள்தோறும் நீதிமன்றத்தில் நடைபெற்றது.valasa vallavanபிறகு 2015 இல் மீண்டும் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தில் காலைத்தொடங்கி இரவு வரை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் பகவத்சிங், செந்தமிழ்ச்செல்வன், செல்வகுமார் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டு 28 நாட்களுக்கு மேல் சிறையிலிருந்து வந்தனர். இந்தச் சூழலில் தலைமை பதிவாளர் தமிழில் வழக்காடலாம் என வாய்மொழி உத்தரவு அளித்தார். அத்தோடு பல்வேறு நெருக்கடிக்கு இடையில் மீண்டும் 2023 அக்டோபர் மாதம் 13 ஆம் நாள் உயர்நீதிமன்றத்தில் தமிழ் எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒழுங்கமைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நவம்பர் 1, 8, 17, 24, டிசம்பர் 1 ஆம் நாள் ஆகிய நாள்களில் தொடர் முழக்கக் கூட்டம் அனைத்துக்கட்சி இயக்கத் தலைவர் களை அழைத்து நடைபெற்றது, இப்போராட்டம் வழக்கு ரைஞர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டமல்ல, தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமை சிக்கல் என அனைவரும் உணர்ந்து அனைத்து அரசியல் இயக் கங்கள் தாங்கள் தங்கள் அமைப்புகள் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். ஏற்கனவே இருந்த அ.தி.மு.க அரசும் தற்போதைய தி.மு.க அரசும் தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தும் தட்டிக்கழித்த ஒன்றிய அரசு, தற்போது மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் சட்ட ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகள் தெளிவுபடுத்தியபடி, உச்சநீதிமன்றத்தின் கருத்துக் கேட்பிற்கு அனுப்பாமல், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2)இன் படி தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக ஆக்கிட, தமிழ்நாட்டு அரசின் கோப்பினை, நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இசைவு பெற்றிடவும், மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் பெயரைத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றிட சிறப்புச் சட்டத்தினை இயற்றிடவும் வேண்டுகை முன் வைக்கப்பட்டது.

8.11.2023 அன்று மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

Pin It