1960களில் இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்று பொதுவுடைமைச் சிந்தனையாளர்களாலும் முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் பேசப்பட்டு வந்தது. அதன் உச்சகட்டமாக அன்றைய காங்கிரசுக் கட்சி அரசின் பிரதமர் இந்திரா காந்தி 9.7.1969 இல் தனியாருக்குச் சொந்தமாக இருந்த 14 வங்கிகளை நாட்டுடைமை ஆக்கினார். தமிழ்நாட்டில் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் அதில் அடங்கும். பின் நாளில் மேலும் சில வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

Indian Bank 400

மய்ய அரசின் பிரதமர், நிதி அமைச்சர், மற்ற அமைச்சர்கள், அரசின் செய லாளர்கள், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், வங்கிகளின் தலைவர்களும் மேலாண்மை இயக்குநர்களும் எனப் பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் இந்தப் பதவிகளில் எல்லாம் அமர்ந்து கொண்டு நிர்வாகம் செய்த பொதுத்துறை வங்கிகளின் செயல் பாடு பெரும் சீர்கேட்டினை அடைந்துள்ளது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் மொத்த வராக் கடன் நிலுவை 2017 மார்ச் மாத இறுதியில் 7.11 இலட்சம் கோடியாக இருந்தது. அது 2017 செப்டம்பர் மாத இறுதியில் ரூ.8.4 இலட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.

இதில் பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் நிலுவை 2014 மார்ச்சு மாத இறுதியில் ரூ.2.16 இலட்சம் கோடியாக இருந்தது. இது 2017 செப்டம்பர் மாத இறுதியில் ரூ.7.33 இலட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.

பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் நிலுவையில் பாரத ஸ்டேட் வங்கியும் பஞ்சாப் நேசனல் வங்கியும் பாங்க் ஆஃப் இந்தியாவும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்து முன்னணியில் இருக்கின்றன. 2017 செப்டம்பர் மாத இறுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் வராக் கடன் நிலுவை ரூ.1,86,115 கோடி; பஞ்சாப் நேசனல் வங்கியின் வராக் கடன் நிலுவை ரூ.57,630 கோடி; பாங்க் ஆஃப் இந்தியாவின் வராக் கடன் நிலுவை ரூ.49,307 கோடி ஆகும்.

கடனை வசூலிப்பதற்காக நடப்பில் உள்ள பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் மய்ய அரசு 2002ஆம் ஆண்டில் வங்கிகளின் வராக் கடன்களை வசூலிப்பதற்கென்றே SARFAESI Act (Securitisation and Enforcement of Financial Assets and Enforecment of Security Act) எனப்படும் தனிச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் 2016இல் திருத்தம் செய்யப்பட்டது.

இத்தனிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த பின்னரும் பொதுத்துறை வங்கிகளால் வசூலிக்க முடிந்த வராக் கடன் தொகை எவ்வளவு தெரியுமா? அதாவது 4ரூ அளவுக்கே வராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

2014-15 ஆம் ஆண்டில் ரூ.30,800 கோடி வராக் கடன் வசூலிக்கப்பட்டது.

2015-16ஆம் ஆண்டில் 46,54,753 கடன்களுக்கு ரூ.2,21,400 கோடி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதில் ரூ.22,800 கோடி மட்டுமே வசூலிக்கப் பட்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் 22,61,873 கடன்களுக்கு ரூ.2,86,000 கோடி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதில் ரூ.28,000 கோடி மட்டுமே வசூலிக்கப் பட்டது.

வசூலிக்கப்பட முடியாது என்ற நிலையில் வங்கிகள் வராக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றன. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகள் 2015-16 ஆம் ஆண்டில் ரூ.57,586 கோடிக்கும் 2016-17ஆம் ஆண்டில் ரூ.81,683 கோடிக்கும் வராக் கடன் தள்ளுபடி செய் துள்ளன.

ரிசர்வ் வங்கியின் நெறிமுறைப்படி ஒரு கடன் அது மோசடி என்று தெரியவந்தாலே அந்தக் கடன் நிலுவை யை வராக் கடன் என்று வங்கிகள் வகைப்படுத்தி வரு கின்றன. பஞ்சாப் நேசனல் வங்கி நீரவ் மோடிக்கு வழங்கிய ரூ.12,700 கோடி கடனும் ஆக்சிஸ் வங்கியும் ஐசிஐசிஐ வங்கியும் மேகும் சோக்சிக்கு வழங்கிய ரூ.8,000 கோடி கடனும் மோசடி எனத் தெரியவந்த தால் அவை வராக் கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் அய்தராபாத் தைச் சேர்ந்த தொட்டம் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனம் ரூ.1394 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட் டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறு வனத்தினர் பல வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளதின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த நாதெள்ள சம்பத் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.250 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இப்படிப்பட்ட வராக்கடன்களால் பொதுத்துறை வங்கி கள் இழப்புக்கு ஆளாகும் போது மய்ய அரசு அந்த இழப்பைப் பொதுத்துறை வங்கிகள் ஈடுகட்டுவதற்காக மக்களின் வரிப் பணத்தை எடுத்து பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடாகக் கொடுக்கின்றது. இப்படிப் பட்ட நிதி நெருக்கடியைப் பொதுத்துறை வங்கிகள் சமாளிக்கும் பொருட்டு மய்ய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2,11,000 கோடி மறுமூலதனமாக அளித்துள்ளது.

கடனை வசூலிக்க நீதிமன்றத்துக்குச் செல்லாமல் வங்கியும் கடன் பெற்றவரும் சந்தித்துப் பேசி ஒரு சமசர முடிவுக்கு வருவதற்காகவே லோக் அதாலத் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறுசிறு கடன் களை வசூலிப்பதில் லோக் அதாலத் நன்றாகச் செயல் படுகிறது.

பொதுநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, கடனை வசூலிப்பதில் ஏற்படும் சிரமங்கள், காலதாமதம் ஆகிய வற்றைத் தவிர்த்துக் கடன்களை விரைவாக வசூலிப் பதற்கென்றே கடன் வசூல் தீர்ப்பாயங்கள் 38 (Debt Recovery Tribunal-DRT) அமைக்கப்பட்டு உள்ளன. மேல் முறையீடு செய்திட (Debt Recovery Appellet TribunalDRAT) கடன் வசூல் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் 5 அமைக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் பல பகுதிகளில் 1990இல் சமதர்மத் துக்குச் சரிவு ஏற்பட்டது. அப்பொழுது முதல் பொதுவு டைமை ஏற்பாடு சமுதாய அமைப்பு வலிவானதாக இராது என்கிற கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்று எல்லாப் பொருளாதார நிபுணர்களும் நினைக்கின்றனர். அந்தக் கருத்தை நிலைநாட்டவே இந்தியா முழுவதிலும் இந்திய அரசுக்குச் சொந்தமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பிலேயே நடக்கின்றன என்கிற கருத்தை நிலைநாட்டவே முயற்சிக்கின்றன.

எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களிலும் மேலாண்மை இயக்குநர், மேலாளர் முதலான பொறுப்பில் உள்ளவர்கள் ஆளும் கட்சிக்காரர்களின் பரிந்துரைக்குச் செவிசாய்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பங்கு. சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஒரு பங்கு, வங்கி நிர்வாகிகளுக்கு ஒரு பங்கு என்று கடன் பெறும் தொகையில் 10 விழுக்காடு இலஞ்சமாகப் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதனால் பாதுகாப் பான உள்தணிக்கைக்கும் இந்தியத் தலைமைக் கணக் காயர் தணிக்கைக்கும் உட்படுத்தாமல் பொதுத்துறை வங்கிகளின் பணம் கொள்ளையடிக்கப்பட அனுமதித்து விட்டனர். பாரதிய சனதா அரசு பணக்காரர்களுக்குப் பொதுத்துறை நிறுவனங்களைச் சாதகமாகச் செயல்பட வைத்து, வருகிற 2019 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று உறுதியாகச் செயல்படு கிறது. இதை உணர்ந்து மக்கள் அந்த நோக்கத்தை முறியடிக்க முன்வர வேண்டும்.

Pin It