வடநாட்டு மில் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண் டும் சென்னைக் கூட்டத்தில் தீர்மானம் :

தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு 101 பேர்கள் கால்நடையாக பல்வேறு பகுதிகளில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்துவரும் வேலையில் சென் னையில் பல பகுதிகளில் அன்றாடம் மறியலும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வந்தன.

11.08.1938 அன்று சென்னைப் புதுப்பேட்டையில் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தலைமையில் ஒரு பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அது சமயம் வடநாட்டு இந்தியை கட்டாயமாகப் புகுத்துவதை ஆதரிக்கும் வடநாட்டு மில் முதலாளிகளின் துணிகளை அறவே தென்னாட்டு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கடலூர் எம்.என்.முத்து குமாரசாமி பாவலர் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இத்தீர்மானத்தைத் தோழர் சாமிநாதன் ஆதரித்துப்பேச, தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

பிறகு தோழர்கள் நித்தியானந்த அடிகள் திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் ஆகியவர்கள் சிலர் குறிப்பிட்ட பத்திரிக்கைகளை (இந்தியை ஆதரிக்கும்) பகிஷ்கரிக்கும் படி கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டுக்கு வரும் வடநாட்டுத் தலைவர்களான ராஜேந்திர பிரசாத், ஜமன்லால் பஜாஜ், சுபாஷ் சந்திரபோஸ் முதலியவர்களுக்கு கறுப்பு கொடி பிடித்து நமது வெறுப்பைத் தெரிவிக்கவேண்டம் என்றும் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பின் கூட்டம் கலைந்தது. (விடுதலை : 17-1-1938)

முதல் மந்திரி வீட்டு முன் மறியல்

முதல் மந்திரி வீட்டின் முன் மறியல் செய்த தொண்டர்களான நாமக்கல் எஸ்.வி.கோவிந்தசாமி படையாச்சியையும், ராஜபாளையம் எஸ்.சீனிவாச செட்டியாரையும் மதுரை எஸ்.லக்ஷ்மண நாயுடுவையும் போலீசார் கைது செய்து பிரதம நீதிபதி அபாஸ்அலி முன் ஆஜர் செய்தனர். வழக்கம் போல் நீதிபதி தொண்டர்களைக் கேள்விகள் கேட்டார்.

தோழர் நாமக்கல் கோவிந்தசாமி படையாச்சி பதிலளிக்கையில் தாம் ஒரு உபாத்தியார் என்றும் தனது சொந்தப் பணத்தைக் கொண்டே டிக்கட்  வாங்கி சென்னைக்கு மறியல் செய்ததாகவும் தனக்கு ஒருவரும் டிக்கட் வாங்க பணம் கொடுக்க வில்லையென்றும், ஒருவரும் மறியல் செய்ய தூண்டவில்லை யென்றும், இங்கிலீசும் தமிழும் படித்தவர்களுக்கே வேலை கிடைக்காத நிலைமையிருக் கையில் இந்தி எதற்கு என்றும் குறிப்பிட்டார். மேலும் தனக்கு களி வேண்டாமென்றும் அரிசி உணவே அளிக்க உத்தரவிடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். நீதிபதி கொடுக்க முடியதென கூற தான் உண்ணாவிரதமிருப்பதாகச் சென்னார்.

நீதிபதி : முன் எவனோ 86 நாள் பட்டினி இருந்தானே அப்படியா?

கோவிந்தசாமி : அவன் காங்கிரஸ் கையாள்.

கடைசியாக நீதிபதி அவர்களுக்கு 6 மாதம் கடின காவல் தண்டனையும் ராகிக்களியும் என்று தீர்ப்புக் கூறினார். (விடுதலை : 12-8-38).

தமிழர் பெரும்படை : சிதம்பரத்தில் அமோக மான வரவேற்பு, 4 மைலுக்கு ஊர்வலம் பொதுக் கூட்டத்தில் 5000 பேர் விஜயம்.

12-08-2013 மாலை 7 மணிக்கு படைவைதீஸ் வரன் கோவிலிருந்து சீர்காழி வந்து சேர்ந்தது. சீர்காழி தமிழன்பர்கள் வரவேற்று பொதுக்கூட்டத் திற்குப் படையை அழைத்துக் சென்றனர். சுமார் 1000 பொதுமக்கள் கூடியிருந்தனர். கூட்டத்திற்கு தமிழன் பரும் மிராசுதாருமான தோழர் சொக்கலிங்கம் செட்டியார் தலைமை வகித்தார். தோழர்கள் பரவஸ்து ஏ.ஜெ.கோபாலச்சாரியர் அவர்களும் கே.வி.அழகர்சாமி அவர்களும் தமிழர் படையின் நோக்கத்தையும், கட்டாய இந்தியின் நுழைவையும் பற்றி சுமர் 1ஙூ மணிநேரம் பேசினார்கள்.

பின் தலைவர் நன்றி கூறியதும் இரவு உணவிற்கு தோழர் சொக்கலிங்கம் செட்டியார் இல்லத்திற்குச் சென்று உணவு அருந்தி இன்று காலை (13.08.1938) ஆனிக்கான் சத்திரம் அதாவது சோழநாட்டின் எல்லை முடிவாகும் கொள்ளிடக் கரைக்கு இன்று காலை படைவந்து சேர்ந்தது. இது வரையில் படையானது சுமார் 140 மைல்கள் நடந்தும் 37 பொதுக்கூட்டம் வரை நடத்தியும் இன்று சோழ நாட்டின் எல்லையாகிய கொள்ளிடம் நதியை தோனி மூலம் கடந்து இன்று மாலை 5 மணிக்கு தொண்டை நாடாகிய வல்லம் படுகையைடைந்தது.

தொண்டர்கள்  தோனியில் ஏறி, கொடிபிடித்து முரசொலியுடனும், கொம்பு நாதத்துடனும் தோனிப் பாட்டுப்பாடிக் கொண்டு குதூகலமாயிருந்தது. தோழர்கள் “திருச்சி இல்லாமைப் பிடித்தோம், தஞ்சையையும் கைப்பற்றி னோம், இப்போது தென்ஆற்காடு ஜில்லாவில் நுழைந்து விட்டோம், வெற்றி நமதே” என்று கூறிச் சென்றது வெகு பொருத்தமாயிருந்தது.

தென்ஆற்காடு எல்லையான வல்லம் படுகையிலே சிதம்பரத்திலிருந்து 4 மைல் வந்து சிதம்பரம் பொது மக்களும் சிரம்பரம் தமிழர் புதுவாழ்வினர் குழுவினரும், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் புவனகிரி பிரமணரல்லாத தமிழ் கழகத்தாரும் சுமார் 500 பேர் வந்து படையை வரவேற்று மாலையிட்டு சிதம்பரத்திற்குப் படையை அழைத்து வந்தார்கள்.

வழியிலிருந்த அம்மாபேட்டை கிராமத்தார் ரோட்டில் நீர் தெளித்து தோரணங்கட்டி தெருவை அலங்கரித்திருந்தனர். வழிநெடுகத் தோரணங்களும், வரவேற்கும் போர்டு களும் கணக்கின்றி கட்டப்பட்டிருந்தன.

சிதம்பரம் முனிசிபல் எல்லையில் பொதுமக்கள் சுமார் 2000 பேர்கள் கூடி வரவேற்றனர். ‘தமிழ்வாழ்க’ என்ற பேரொலியுடன் முரசொலி முழங்க படை நகருக்குள் பிரவேசித்தது. வழிநெடுகத் தமிழன்பர்களும், பிரமுகர் களும் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மாலையிட்டு வரவேற்றனர். கடைத்தெருவில் பல வியாபாரி களும் வெள்ளி வியாபாரம் ஜனாப் ஏ.கே.காஜிஉசேன் சாயபு அவர்களும் தமிழர் படைத்தலைவர்களுக்கும் தனித்தனியே மாலையிட்டு அழைத்துச் சென்றார்கள்.

சில இடங்களில் காங்கிரஸ்காரர்கள் ஜப்பான் கறுப்பு கடிதாசிகளால் கறுப்புத் தோரணம் கட்டியிருந்தார்கள். இப்படிச் செய்தவர்களை பொதுமக்கள் கடுமையாக திட்டினார்கள்.

பின்னர் படையை கடைத்தெரு லால்கான் பள்ளி வாசல் முன்பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தபடி அழைத்து போனார்கள். சுமார் 5000 பேர் வரை பொதுமக்கள் கூடி இருந்தார்கள். ராவ்சாகி குமாரசாமிப் பிள்ளைத் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது.

படையின் சேனாதிபதி பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி “தமிழ்மொழிக்கு வந்துள்ள ஆபத்தை பற்றியும், இந்தியை ஆச்சாரியார் கட்டாயப்பாடமாக நுழைக்கும் சூழ்ச்சியைக் கண்டித்தும், பண்டைய தமிழர் நிலை இன்றைய தமிழர் நிலை என்பது பற்றியும், சமஸ்கிருதத்தின் சாயலான இந்தியைப் புகுத்தி, இறந்து விட்ட மந்திரி சபையினர் புதுப்பிக்கிறார்கள் என்றும் விரிவாக சுமார் 1ஙூ மணிநேரம் வீரமுழக்கவிட்டார்.

குறிப்பாகக் கருப்புக் காகிதத் தோரணங்கட்டியவர் வெட்கி தலையும் குனியும்படியாக அழகிரியின் பேச்சு அமைந்திருந்தது.

(விடுதலை : 17-8-38)

தொடரும். 

Pin It