தாழ்த்தப்பட்ட மக்களுள் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கடைநிலையில் இருப்ப வர்கள் அருந்ததியர்கள். ஏன் என்று கேட்கக் கூட நாதியற்றுக் கிடந்த இவர் களை முதன் முதலாகத் திரும்பிப் பார்த்து உரிமையுடன் கரம் நீட்டிய இயக்கம், திராவிட இயக்கம்.

உரிமையிழந்து, உடைமையிழந்து, அடிமைகளைப் போல் இருந்த அந்தக் காலத்தில், அவர்கள் தன்னுணர்வும், முன்னேற்றமும், எழுச்சியும் பெற வேண்டுமென்றால், அருந்ததியருக்கு முதலில் கிடைக்கச் செய்ய வேண்டியது கல்வி என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான வழியைக் காட்டிய முதல் இயக்கம் திராவிட இயக்கம்.

1920ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரான சர்.பி.டி.இராசன் அவர்களின் சிறிய தந்தையார் இலட்சுமணசாமி அவர்கள், அருந்ததிய இளைஞர்களை அரவ ணைத்து, “அருந்ததிய மகாஜன சபை” என்ற அமைப்பை உருவாக்கிக் கொடுத் தார். இவ்வியக்கம் உருவான இடம் மதுரை உத்தமபாளையம்.

திராவிட இயக்கத் தலைவர் ஒருவரால் அமைக்கப்பட்ட முதல் அருந்ததியர் அமைப்பான இச்சபை, கல்வி ஒன்றையே முன்னிலைப்படுத்தி, அதற்கான பணிகளைச் செய்தது.

அதே 1920ஆம் ஆண்டில் சென்னையில் ராவ்சாகிப் எல்.சி.குரு சாமி அவர்கள், தான் பிறந்த அருந்ததியர் சமூக மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக எழுச்சியை மையப்படுத்திச் சென்னை அருந்ததியர் சங்கம் என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், தன் நண்பர் எச்.எம். ஜெகநாதனுடன்.

எல்.சி.குருசாமி அவர்கள் தன் நண்பர் எச்.எம். ஜெகநாதனுடன், சர்.பிட்டி. தியாகராயர், டி.மாதவனார் (டி.எம்.நாயர்) ஆகிய தலைவர்களைச் சந்தித்துத் தம்மை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். இவை குறித்து, “பழங்குடி மக்களின் தலைவர்களின் வரலாறு” என்ற நூலில் ஏ.கே. சாமி விரிவாக எழுதியிருக்கிறார்.

ஆக, அருந்ததியர் களின் முதன்மைத் தலை வர்களான எல்.சி. குரு சாமி, எச்.எம். ஜெகநாதன் இருவரும் திராவிட இயக்கத்தை நெஞ்சில் ஏந்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படித்தான் அருந்ததியர், சமூகத்தின் வாழ்வியலும் முன்னேற்றமும் திராவிட இயக்கத்தில் இருந்து தொடங்கியது, தொடர்கிறது.

1959ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக இருந்தவர், பெருந்தலைவர் காமராசர் அவர்கள். அந்த ஆண்டில் மதுரை டவுன்ஹால் ரோடில் அமைச்சர் கக்கனுக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தியது “தமிழ்நாடு அருந்ததியர் சங்கம்”. இப்போராட்டத்திற்குத் தலைமை ஏற்றுக் கைதானார், பெரு. எழிலழகன். இப் போராட்டத்தின் நோக்கம் உயர் பதவிகளில் அருந்ததியர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே.

இதன் பயனாகச் சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பிரிந்த தர்மபுரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக பி.சங்கரனையும், நெல்லை மாவட்டத் துணை கண்காணிப் பாளராக ஆர். காளி யப்பனையும் நியமித்தார் பெருந்தலைவர். இவர்கள்தாம் உயர் பதவிக்குப்போன முதல் இரு அருந்ததி யர்கள்.

இதைத் தொடர்ந்து வி.எஸ். சிவப்பிரகாசத்தை நாடாளுமன்ற மேலவையின் முதல் அருந்ததியர் உறுப்பினராகவும் இடம்பெறச் செய்தார் காமராஜர்.

காங்கிரஸ் கட்சியினால் அருந்த தியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து “தமிழ்நாடு அருந்ததியர் சங்கம்” என்ற பெயரில் மதுரையில் உருவானது.

இந்தச் சங்கத்தின் முதன்மைத் தலைவர்களான பெரு.எழிலழகன், பெ.கா. இளஞ்செழியன், தூத்துக்குடி செல்லையா, இளஞ்சேரன், உடுமலை எஸ். பழனியப்பன், திண்டுக்கல் பழனிச்சாமி, போத்தனூர் பத்திரன், பரமக்குடி ஜேம்ஸ் குருபாதம் போன்ற வர்கள் அனைவரும் பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கப் பகுத்தறிவாளர்கள்.

நாமக்கல் சின்னையன், பி.வி.ராவ் போன்ற காங்கிரஸ் சார்புடையவர்கள் இச்சங்கத்தில் இருந்தாலும், அதன் தொடக்க கால வரலாற்றுப் பணி திராவிட இயக்கத்ததைச் சார்ந்தே இருந்தது.

இருந்தாலும் அக்கால கட்டத்தில் அரசியல் அடிப்படையில் மக்கள் அணிதிரண்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ்தான்.

குறிப்பாக கலைஞர் அவர்கள் பல்வேறு பணிச் சுமைகளின் இடையிலும் அருந்ததியர் சங்கங்களுடன் தொடர்பில் இருந் துள்ளார்.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவராக கலைஞர் இருந்த பொழுது, இலங்கை அருந்ததியர் சங்கத் தலைவர் எம். வேலாயுதம் அவர்களுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதம் கலைஞரால் எழுதப்பட்ட தேதி 20.05.1981. அக்கடிதத்தில்...

“இந்து மதத்தின் சாதிப் பாகுபாடு கொடுமை காரணமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும், பொட்டுப் பூச்சிகளாக புன்மைத் தேரைகளாக வாழ்ந்து வந்த அருந்ததியர் குலப் பெருமக்கள் தன்மானத்தோடும், மனித கவுரவத்திற்கேற்பவும் வாழ்வதற் கான உரிமைகளுக்கு, இலங்கையில் நெடுங்காலமாகப் பாடுபட்டு வரும் நண் பர் எம். வேலாயுதம் அவர்களால் தோற்று விக்கப்பட்டு இயங்கி வரும் இலங்கை அருந்த தியர்கள் சங்க ஐம்ப தாவது ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெறவிருப்பது அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.

விழா எல்லா வகையிலும் சிறப்புற்றுத் திகழ எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள் கிறேன்”.

கலைஞரின் இக்கடிதத்தில் அருந்ததியர் மக்கள் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, மனித கவுரவம் இழந்து, பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இருக்கிறார்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டும் அதே வேளையில், இம்மக்களின் உரிமைகளுக் காகப் பாடுபடும் அருந்ததியர் சங்கத்தை வரவேற்று வாழ்த்துவதில் இருந்து, கலைஞர் அவர்களின் இதயத்தில் அருந்ததியர்கள் எப்படிப் பதிவாகியிருக் கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

அதனால்தான் சட்டப் பேரவையில் அருந்ததியருக்குப் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த நிலையில், மல்ல சமுத்திரம் ஆர். நல்லமுத்து அவர்களை தி.மு.க. சார்பில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கினார் கலைஞர். நல்லமுத்து வென்ற தொகுதி சங்ககிரி.

அவரின் மறைவுக்குப்பின் சேலம் சி.வீரமணியை அதே தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு அனுப்பியவர் கலைஞர்.

சட்டப்பேரவையின் முதல் துணைப் பேரவைத் தலைவராக வி.பி.துரைசாமி அவர்களை அமரவைத்தவர் கலைஞர். வி.பி.துரைசாமி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதற்கும் கலைஞரே காரணம்.

ஓர் அருந்ததியரை சட்டப்பேரவை துணைத்தலைவராக கலைஞர் அமரவைத் ததன் விளைவால்தான் இன்று பேரவைத் தலைவராக ஓர் அருந்ததியர் வரமுடிந்தது.

அந்தியூர் செல்வராசு போன்றவர் களை அமைச்சர்களாக்கி, அருந்ததியர் சமூகத்திற்கு ஓர் அரசியல் உயர்வைக் கொடுத்தார் கலைஞர்.

இன்று பெரிய அரசியல் கட்சிகளில், எந்த ஒரு கட்சியிலும், கட்சிப் பதவியில் உயர் இடத்தில் யாரும் இல்லை. மாறாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக அருந்த தியரான வி.பி.துரைசாமி அவர்களை அமரவைத்த செயல் கலைஞருக்கும் அருந்ததியருக்குமான உள்ளார்ந்த பிணைப்பைக் காட்டுகிறது.

இவைகளுக்கெல்லாம் உச்சமான கலைஞரின் செயல், அருந்ததியருக்கு தனி உள் இடஒதுக்கீடாக 3.5 விழுக்காடு வழங்கியது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடை யிலும் நீதிபதி ஜனார்த்தனம் தலை மையில் ஆணையம் அமைத்து இந்த உள் இடஒதுக்கீட்டைக் கலைஞர் வழங்கிய தால், இன்று கல்வி, வேலை வாய்ப்பு களில் அருந்ததியர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

இப்படி ஒவ்வொரு காலகட்டங் களிலும், கலைஞர் அருந்ததியர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள், அந்த மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்லப் படாத வரலாறாகவே இருக்கிறது-.

குறிப்பாக கிராமப்புறங்களில் அறியாமையில் இருக்கும் மக்களிடம், கலைஞரால் கிடைத்த பயன்களை விளக்கி அதன் மூலம் ஒரு எழுச்சியை அல்லது முன்னேற்றத்திற்கான வழிகாட்டு தல்களை இன்றைய அருந்ததியர் அமைப்புகள் செய்ய வேண்டியது அவசியம்.

தொடக்கத்தில் விழுந்து கிடந்த அருந்ததியர் சமூகத்தை எந்த திராவிட இயக்கம் அரவணைத்ததோ, எந்த திராவிட இயக்கம் விழிப்புறச் செய்ததோ, அந்த திராவிட இயக்கத்தில், கலைஞர் தலைமையில் ஒன்று திரளவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

அதனை உணர்ந்து, அருந்ததியர் அமைப்புகளான ஆதித்தமிழர் பேரவை யும், தமிழ்ப் புலிகள் அமைப்பும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத் திற்குத் தங்களுடைய முழுமையான ஆதரவினை அறிவித்திருக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

இதேபோன்று, வரலாறு அறிந்திருக்கும் மற்ற அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களும், கலைஞ ரின் கரங்களை வலுப்படுத்த முன்வர வேண்டும். தங்கள் சமூக மக்களிடம் இந்த உண்மைகளை உரத்த குரலில் எடுத்துச் சொல்லி, நாடாளுமன்றத் தேர்தலில், உதய சூரியனுக்கு வாக்களிக்கும்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

திராவிட இயக்கமும், கலைஞர் அவர்களும் தங்கள் சமூகத்திற்கு ஆற்றிய நன்மைகளுக்கு, நன்றி செலுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்பாக, எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அருந்ததியர் சமூக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Pin It