லண்டனில் இருந்து வெளியாகும் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழை மேற்கோள் காட்டி, “கவுதம் அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார். அது இந்தியாவை அடையும் நேரத்தில், அதன் விலை இரட்டிப்பாகும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் பைகளில் இருந்து சுமார் ரூ.32,000 கோடி அவர் எடுத்துள்ளார்” என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இந்தியப் பத்திரிகைகளில் இது பெரிதாக வெளியாகவில்லை.

ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையில் அது அதானியின் ஊழல், மோசடிகளைப் புட்டுப்புட்டு வைத்து விட்டு “கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப் பெரிய மோசடி இது” என்று குற்றம் சாட்டியுள்ளது.

அதானியின் மோசடிகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து விசாரிக்க இதுவரை பிரதமர் மோடி எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் போது நாடாளுமன்றத்தில் அதானி குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் எழுப்பிய வேண்டுகோளை ஏற்கவில்லை மோடி.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் செபியிடம் விசாரிக்கச் சொல்லி இருந்தாலும், செபி இது குறித்து ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் பிரசாந்த் பூஷன்.

சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் மோடி அரசு 7லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா ஊழல் செய்திருப்பதாக செய்தி வெளியானது. இது குறித்தும் ஒரு விளக்கம்கூட மோடி தரவில்லை.

இப்படிக் கார்ப்பரேட் அதானி என்ற ஒரு தனிப்பட்ட நபருக்கு, மோடியின் நண்பருக்கு உதவுவதும், அதானியின் பெருந்தொகைக் கடனைத் தள்ளுபடி செய்வதும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும். இதுவும் ஊழலின் வடிவம்தான்.

பிற அரசியல் கட்சிகளையும், பாஜக அல்லாத மாநில அரசுகளையும் ஊழல்மயப்படுத்திக் காட்டும் மோடியின் அரசு, ஊழலில் மலிந்து கிடக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அடுத்த ஆண்டுத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் அதானி தொடர்புடைய ஊழல்கள் விசாரிக்கப்படும் என்று நம்பிக்கை தருகிறார் ராகுல் காந்தி. அதில் மோடியும் வருவார் என்று நம்புவோம்.

அந்த நல்ல நாளுக்காக இண்டியா கூட்டணியைத் தேர்ந்தெடுப்போம். பா.ஜ.க கூட்டணியைத் தோற்கடிப்போம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It