முதன்முதலாகத் தமிழ்நாட்டில் வளர்மதி என்னும் மாணவியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. அறவழியில் போராடுகின்றவர்களைக் கூட இன்று உள்ள பொம்மை அரசு சிறையில் அடைக்கிறது.இதனைக் கண்டித்தும், மாணவி வளர்மதியை விடுதலை செய்யக் கோரியும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில், கல்லூரிகளின் வாயில்களில் துண்டறிக்கைகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இப்பணியை நம் தோழர்கள் தொடங்கிவிட்டனர்.

வரும் 2ஆம் தேதி புதன்கிழமை காலை, பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் சுபவீ, தோழர்களுடன் இணைந்து சென்னை, நந்தனம் கலைக்கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கைகளைக் கொடுப்பார்.

------------

ஜெர்மனியில் பெரியார்!

தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதைக் கோட்பாடுகள் உலகு தழுவியவை. அதனால்தான் இன்று அவர் புகழ் உலகெங்கும் பரவிக் கொண்டுள்ளது.அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரை இன்னும் தமிழ்நாட்டில் சிலர் தாக்கி எழுதியும், பேசியும் வருகின்றனர்.அதுவும் அவர் கொள்கைகளின் வலிமையைத்தான் காட்டுகிறது. அதே நேரம் அவர் கருத்துகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்படுவதுடன், பல நாடுகளிலும் அவர் தொடர்பான விழாக்கள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

2017 ஜூலை இறுதியில் மூன்று நாள்கள், ஜெர்மனி நாட்டில், பெரியார் அனைத்துலக மையம் சார்பில், பெரியார் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.தமிழர்களுக்குப் பெருமை, பெருமிதத்தைச் சேர்த்துள்ளார் பெரியார்.

ஜெர்மன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், உடன் சென்றுள்ள கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி, ஒளிவண்ணன் ஆகியோருக்கும் நம் மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!

அம்மாநாட்டில் பங்கேற்று கட்டுரை படிக்க இருக்கும், நம் பேரவையின் இலக்கிய அணி ஒருங்கிணைப்பாளர் தோழர் லதாராணி பூங்காவனத்திற்குப் பேரவைத் தோழர்கள் அனைவரின் வாழ்த்துகளும் உரியன.

Pin It