நீதிமன்ற வரலாற்றில் வி.ஆர். கிருஷ்ணய்யர் தனித்துவநாயகனாக கம்பீரமாக ஒளிர்கிறார். வழக்கறி ஞராக விவசாயிகள், தொழிலாளி களுக்காக, அரசியல் கைதிகளுக் காக வாதாடி புதிய தீர்ப்புகளை படைத்தவர். உச்சநீதிமன்ற நீதிபதி யாக செயல் பட்டு, வரலாற்று சிறப்புமிக்க பல புதிய தீர்ப்புகளை தந்தவர்.

கேரளத்தில் இ.எம்.எஸ்-ஸின் அமைச்சரவையில் அமைச்சராகச் செயல்பட்டவர். சட்டமன்ற உறுப் பினராக கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து செயல்பட்டவர்.

அவரது புகழ்மிக்க பாரம்பர்யப் பெருமைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சாதகமாக பயன் படுத்தியவர். சிறந்த ஜனநாயக வாதி, மனித நேயவாதி, உயர்ந்த போராளி.

அவரும் சிறைவாசத்தை அனுப வித்தவர். சிறைக் கைதிகளின் நலன்கள், உரிமைகளுக்காக பல வகைகளில் போராடி வென்று சாதித்தவர்.

எப்போதும் கம்யூனிஸ்ட்களின் நண்பன். கம்யூனிஸ்ட்களால் விமர் சிக்கப்பட்ட விஷயமும் உண்டு. ஆயினும் கொள்கை சார்ந்த போராளி வாழ்க்கையில் நின்று நிலைத் தவர். அவரது வாழ்க்கைச் சரிதத்தை ரவி குட்டிக்காடு என்ற மலையாள எழுத்தாளர் மிக அழ காக இலக்கிய நடையில் எழுதியி ருக்கிறார். தேசாபிமானி வார இதழில் தொடராக வந்தது. அ. அலெக்ஸ் தமிழில் மொழி பெயர்த் திருக்கிறார். தமிழில் நூலாக வெளியிட்ட சோக்கோ அறக்கட்ட ளையை எத்தனை பாராட்டினாலும் தகும். எல்லோரும் வாசிக்க வேண் டிய சிறந்த நூல்.

வெளியீடு : சோக்கோ அறக் கட்டளை, ஜஸ்டிஷ் பகவதி பவன், 143, லேக் வ்யூரோடு, கே.கே.நகர், மதுரை - 20, விலை : ரூ.70-

மு.முருகேஷ் எழுதிய உயிர்க்கவிதைகள்

இளம் கவிஞர்களுக்கெல்லாம் இனிய தோழனாக பிரகாசிக்கிற மு. முருகேஷ், ஹைக்கூ கவிதை வடிவத்தின் தீவிர ஊழியர். அவரது புத்தகம் ‘உயிர்க் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஹைக்கூ நூலாக வெளிவந்திருக்கிறது.

வண்ணப் புகைப்படங்கள் பன்னிரண்டு. அவையே கவித்துவ வண்ணப்பேரழகு. பேரழகுக்கு சூட்டும் மகுடமென இவரது ஹைக்கூ கவிதைகள்.

“தூங்கும் அம்மா” ‘தாலாட் டும்’ சின்னக் கொலுசு

தாமரைப்பூ மொட்டு பறிக்கும் ஏழைச் சிறுவனின் வண்ணப்படம். அவன் கையில் சிறிய நீர்த் துளிகள்.

“பறிக்க நீட்டிய கைகளில்/ ஈர முத்தம் தந்தது/ தாமரை இலைநீர்/

குளத்துநீரில் நீந்தும் மாடு, ஆடு, மனிதன் வண்ணப்படமாக.... அதற்கு எழுதப்பட்ட கவிதை

மாடு, ஆடு, மனிதன்/குளிக்கிறார்கள் ஒன்றாய் / பேதம் பார்ப்பதில்லை தண்ணீர் /

தாத்தா தோளில் உட்கார்ந் திருக்கிற சந்தோஷம் பேரன் வண்ணப்படம்

உன்னை விட உயரம் நான் / குதிக்கிறான் பேரன் / தாத்தாவின் தோள் மீதிருந்து /

வித்தியாசமான சிந்தனைத் தெறிப்புகள். புதிய நினைவுக் கோணங்கள். ஆழமான அர்த்த பூர்வமான சமுதாயச் சிந்தனை.

வண்ணப் படங்கள் கண்ணை யும், கவிதைகள் மனசையும் புதிய அனுபவத்தால் விரியச் செய் கின்றன.

பாராட்டத்தக்க புதிய நல்ல முயற்சி. வடிவமைத்த மாரீஸ் எனும் கலைஞனை பாராட்டலாம்.

இன்னும் கொஞ்சம் செறிவும், வார்த்தைச் சிக்கனமும் வந்தி ருந்தால், கச்சிதமும் கவித் துவமும் இன்னும் கூடுதலாகியிருக்கும்.

அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி

அம்மையப்பட்டு, வந்தவாசி -

604 408. விலை : ரூ.30-

டாக்டர் கி.அம்பலவாணன் எழுதிய ஓமியோபதி

மருந்துகாண் ஏடு

மருத்துவக்கல்வி தமிழில் சாத்தி யமா என்ற கேள்வி பதிலற்று நிற் கிறது. தமிழில் பொறியியல் கல்வி சாத்தியமான பின்பும் கூட இந்தக் கேள்வி இன்னும் நிமிர்ந்தே நிற் கிறது.

மருத்துவக்கல்வியும் தமிழில் சாத்தியப்படும் என்பதை ஓமியோ பதி மருத்துவர்கள் நிரூபித்து வரு கின்றனர். அமரர் புலவர் த.ச. இராசாமணி, சு.சம்பத்குமார், அ.ந. வணங்காமுடி, ச. வெங்கடாசலம் போன்றோர் ஏற்கனவே ஓமியோ பதி மருத்துவ நூல்களை தமிழில் எழுதியிருக்கின்றனர். டாக்டர் கு.கணேசன் போன்றோர் அலோ பதி நூல்களை தமிழில் தந்திருக் கின்றார். அந்த வரிசையில் கோவை வடவள்ளி கி.அம்பலவாணன் என்ற ஓமியோபதி மருத்துவரும் மருத்துவ நூல் எழுதியிருக்கிறார்.

“ஓமியோபதி மருத்துகாண் ஏடு” என்ற தலைப்பில் எழுதப் பட்ட இந்த நூலில் நோய்க் குறி களும் அவற்றுக்கான மருந்துகளும் விளக்கமாகவும் துல்லியமாகவும் எழுதப்பட்டுள்ளன.

அனுபவரீதியாக கற்றறிந்து மருத்துவம் செய்கிற ஓமியோபதி மருத்துவர்களுக்கு வெளிச்சமும் பாதையும் காட்டுகிற கைவிளக் காகவும் கையேடாகவும் திகழ் கிறது இந்நூல்.

பக்கவிளைவுகள் எதுமில்லாத மாற்றுமருத்துவமான ஓமியோபதி நம்பிக்கையளிக்கிறது. குணநலத் திரிபுகள், மனநலத்திரிபுகளுக்கும் கூட மருந்துகள் இருப்பது ஓமியோபதியின் தனிச்சிறப்பு.

இந்த நூலின் தனிச்சிறப்பு சகலமும் ஓமியோபதியில் சாத்தியம் என்று சாதிக்காமல், ஓமியோபதி யின் உன்னதத்தையும் எல்லையை யும் ஒரு சேர உணர்த்துகிறது. ஓமியோபதி மருத்துவத்துக்காக பிற நூல்களை வாசிக்க வேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டுகிற நேர்மை இந்த நூலுக்கு உண்டு.

குறுகிய காலத்தில் பல பதிப்பு களைக் கண்டிருக்கிற இந்த நூலை, பல புகழ்பெற்ற மருத்துவர்கள் வியந்து பாராட்டியிருக்கின்றனர்.

மனோரஞ்சிதம் பதிப்பகம் ஆசிரியர் கிருஷ்ணசாமி தெரு, வி.என்,ஆர்.நகர்,வடவள்ளி,

கோவை -41. விலை ரூ. 190

Pin It