இந்த வலியை யார் உணர்வார்
இந்த வலியை புரிபவர் எவர்
இந்த வலியை பெறுபவர் யார்

இந்த வலியை எந்த மொழி கூறும்
இந்த வலியை எந்த தத்துவம் விளக்கும்
இந்த வலியை எந்த விரல்கள் துடைக்கும்
இந்த வலியை எந்த தோள்கள் சுமக்கும்

இந்த வலி எந்த வர்ணாசிரமத்தில் முளைத்தது
இந்த வலி எந்த தீண்டாமைக்குள் வெடித்தது


இந்த வலி எந்த வலியை விட பெரியது
இந்த வலி எந்த சிறுமையை விட சிறுமையானது

இந்த வலி எந்த துரோகத்தால் விளைந்தது
இந்த வலி எந்த குரோதத்தால் நிகழ்ந்தது

இந்த வலி எந்த மண்ணில் புதையும்
இந்த வலி எந்த உயிரில் உறையும்?

Pin It