வே.முத்துக்குமார் பன்முகப் படைப்பாளி. இளைய தலைமுறையின் புதிய வரவாய் தமிழிலக்கிய உலகிற்கு கிடைத்த வரப் பிரசாதம்.

தன் வாழ்வில் தனக்கு மட்டுமே வாய்த்த சில அபூர்வத் தருணங்களைத் தாமிரபரணியின் நதி நீராய் உள்ளங்கையில் தேக்கி தன் சக மனிதருக்கு மாற்றும் சாகசமே ‘இசைக் குறிப்புகளை மொழி பெயர்த்தல்’ கவிதைத் தொகுப்பாகும். அழகிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ள இக் கவிதை நூல் வாசகரை நிச்சயம் வசப்படுத்தும் வைர வரிகளுடன் மிளிர்கின்றது. கவிஞர் தன் வாழ் வில் கண்டுணர்ந்த மனிதர்களையும், அனுபவங்களையும் அள விடும் கருவியாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.

ஓய்வின்றி உழைக்கும் அம்மாவுக்கு, விடாது பெய்த மழை கோலம்போடும் வேலை யை மிச்சப்படுத்தியது கண்டு கவிஞர் மனம் குதூகலிக்கின்றது.

கடந்து செல்கிற சவ ஊர்வலம் தனி மனுஷியாய் கிராமத்தில் தவிக்கும் அம்மாவை நினைவூட்டுவதாய் அமைந்த கவிதை கண்களை ஈரப்படுத்துகின்றது.

மருகிக் கிடக்கும் அம்மாவின் மன ஏக்கங்களே எழவு வீட்டில் மாரடித்து அழும் அம்மாவின் ஒப்பாரி என்று எழவு வீட்டு ஒப்பாரிக்கு கவிஞர் கூறும் காரணம் மன இறுக்கத்தை உருவாக்கி விடுகின்றது.

கவிஞரின் நாத்திக யதார்த்தம் பல கவிதைகளில் பவனி வருகின்றது.

ஓங்கிய கோபுரத்தில் சிலை யாய் கடவுளும், ஒடுங்கிய குடி சையில் உயிருடன் மனிதனும் என்ற கவிஞரின் ஒப்பீடு போற்றத்தக்கது.

ஊர் கூடி திருவிழா கொண்டாடத் தீர்மானித்த இரவில் கடவுள் களவு போன சம்பவம் சிரிக்கமட்டுமின்றி சிந்திக்கவும் வைக்கின்றது.

பிரார்த்தனைகள் பலிக்காது போகிற ஒவ்வொரு முறையும் தெய்வங்கள் இழந்து கொண்டி ருக்கின்றன தங்களது பக்தர்களை.

கோரிக்கைகள் நிராகரிக்கப் படும்போது எழுகின்ற நியாய மான நிகழ்வுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேர்த்திக் கடன் செலுத்த

பய பக்தியோடு

பிரகாரம் சுற்றிவந்து

உண்டியலில் காசு போட

கைகள் எத்தனிக் கையில்

அவசரமாய்த் தடுக்கிறது

வாசலிலிருந்து கேட்கும் குருட்டுப் பிச்சைக்காரனின் ஓலம்.

- மனிதாபிமானம் செறிந்த துலாபாரம் என்ற இக்கவிதை நம் மனப் பாரத்தை இலேசாக்கி விடுகிறது.

கூரிய உச்சரிப்புகளுடன் விரி யும் கவிதை வீச்சில் வீரிய மிக்க யதார்த்த உணர்வுகள் பளிச்சிடு கின்றன ஒவ்வொரு கவிதை யிலும்.

- பாளையம் சையத்

Pin It