நார்வேஜிய நாடோடிக்கதை

முன்னொரு காலத்தில் ஒரு விவசாயி இருந் தார். அவருக்கு மூன்று மகன்கள். தனக்கு வயதாகி விட்டதால் கடனிலிருந்து நிலத்தை மீட்கும் பொறுப்பை தனது மகன்களிடம் ஒப் படைக்க முடிவு செய்தார். ஒருநாள் தனது மூத்த மகனை அழைத்து காட்டுக்குப் போய் விறகு வெட்டி வரும்படி கூறினார்.

மூத்தவன் காட்டுக்குப் போய் ஒரு பெரிய மரத்தை வெட்டினான். அந்த இடத்தில் உடனே ஒரு அரக்கன் தோன்றி “மீண்டும் இந்தக் காட்டுக்குள் உன்னைக் கண்டால் கொன்று விடுவேன்” என்று கூறினான்.

இதைக்கேட்ட மூத்தவன் பயந்து கோடாரியை அங்கேயே போட்டுவிட்டு மூச்சிறைக்க வீட்டுக்கு ஓடிவந்து விட்டான். விவசாயி தனது மகனைப் பார்த்து “இள வயதில் நான் அரக்கனுக்கெல்லாம் பயந்ததில்லை” என்றார்.

மறுநாள் இரண்டாவது மகன் காட்டுக்குப் போனான். அவனையும் அரக்கன் மிரட்டியதால் பயந்து ஓடி வந்துவிட்டான். எனவே மறுநாள் கடைசி மகன் காட்டுக்குப் போனான். போகும் போது ஒரு பாலாடைக்கட்டியை தனது தூக்குப்பை யில் எடுத்துக் கொண்டான். அரக்கன் தோன்றி வழக்கம்போல மிரட்டினான். சிறுவன் அரக்கனைப் பார்த்துக் கொண்டே பாலாடைக்கட்டியை நசுக்கிப் பிழிந்தான். பின்பு அரக்கனைப் பார்த்து “பார்த் தாயா! நான் பிழிந்ததில் இது கட்டியாகிவிட்டது. என்னை மிரட்டினால் உனக்கும் இதுபோன்ற கதி தான் ஏற்படும்” என்று பதிலுக்கு மிரட்டினான்.

உடனே அரக்கன் பயந்து போய் “ என்னை ஒன்றும் செய்யாதே! நான் உனக்கு மரம் வெட்ட உதவுகிறேன். உன்னை விட நான் வேகமாக வெட்டுவேன்” என்றான். பின்பு அரக்கன் ஏராள மான மரங்களை வெட்டிக் குவித்தான். நேரம் மாலையாகிவிட்டது. இருவருக்கும் பசி எடுத்தது. அரக்கன் தனது வீட்டுக்குச் சிறுவனை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பானை நிறைய கூழ் இருந்தது. இருவருக்கும் சாப்பாட்டில் போட்டி நடந்தது. சிறுவன் அதிகம் சாப்பிட்டு வென்றான்.

சாப்பிட அமரும் போதே சிறுவன் தனது தூக்குப்பையை மேசை மீது வைத்தான். நிறைய கூழை அரக்கன் இல்லாத போது தனது பையில் ஊற்றிவிட்டு அதை வயிற்றில் கட்டிக் கொண்டு கூழைக்குடிப்பதுபோல் நடித்தான். அரக்கனும் கூழைக் குடித்தான். சிறுவன் அளவுக்கு குடிக்க முடியவில்லை என்று கூறித் தனது தோல்வியை ஒப்புக்கொண்டான்.

சிறுவன் ஒரு கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தி எடுத்தான். பையிலிருந்த கூழ் வெளியே வழிந்தது. அரக்கனைப் பார்த்து “ நீயும் உன் வயிற்றைக் குத்தி குடித்த கூழை எடு” என்றான். முட்டாள் அரக்கனும் தன் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்தான். செத்து மடிந்தான்.

சிறுவன் அரக்கனின் குகையிலிருந்த தங்கம், வெள்ளியை அள்ளிக் கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்தான். கடனைத் தீர்த்து விவசாயி குடும்பம் செழிப்பாய் வாழ்ந்தது.

தமிழில்: எஸ்ஏபி 

முன்னொரு காலத்தில் ஒரு விவசாயி இருந் தார். அவருக்கு மூன்று மகன்கள். தனக்கு வயதாகி விட்டதால் கடனிலிருந்து நிலத்தை மீட்கும் பொறுப்பை தனது மகன்களிடம் ஒப் படைக்க முடிவு செய்தார். ஒருநாள் தனது மூத்த மகனை அழைத்து காட்டுக்குப் போய் விறகு வெட்டி வரும்படி கூறினார்.

மூத்தவன் காட்டுக்குப் போய் ஒரு பெரிய மரத்தை வெட்டினான். அந்த இடத்தில் உடனே ஒரு அரக்கன் தோன்றி மீண்டும் இந்தக் காட்டுக்குள் உன்னைக் கண்டால் கொன்று விடுவேன்என்று கூறினான்.

இதைக்கேட்ட மூத்தவன் பயந்து கோடாரியை அங்கேயே போட்டுவிட்டு மூச்சிறைக்க வீட்டுக்கு ஓடிவந்து விட்டான். விவசாயி தனது மகனைப் பார்த்து இள வயதில் நான் அரக்கனுக்கெல்லாம் பயந்ததில்லைஎன்றார்.

மறுநாள் இரண்டாவது மகன் காட்டுக்குப் போனான். அவனையும் அரக்கன் மிரட்டியதால் பயந்து ஓடி வந்துவிட்டான். எனவே மறுநாள் கடைசி மகன் காட்டுக்குப் போனான். போகும் போது ஒரு பாலாடைக்கட்டியை தனது தூக்குப்பை யில் எடுத்துக் கொண்டான். அரக்கன் தோன்றி வழக்கம்போல மிரட்டினான். சிறுவன் அரக்கனைப் பார்த்துக் கொண்டே பாலாடைக்கட்டியை நசுக்கிப் பிழிந்தான். பின்பு அரக்கனைப் பார்த்து பார்த் தாயா! நான் பிழிந்ததில் இது கட்டியாகிவிட்டது. என்னை மிரட்டினால் உனக்கும் இதுபோன்ற கதி தான் ஏற்படும்என்று பதிலுக்கு மிரட்டினான்.

உடனே அரக்கன் பயந்து போய் என்னை ஒன்றும் செய்யாதே! நான் உனக்கு மரம் வெட்ட உதவுகிறேன். உன்னை விட நான் வேகமாக வெட்டுவேன்என்றான். பின்பு அரக்கன் ஏராள மான மரங்களை வெட்டிக் குவித்தான். நேரம் மாலையாகிவிட்டது. இருவருக்கும் பசி எடுத்தது. அரக்கன் தனது வீட்டுக்குச் சிறுவனை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு பானை நிறைய கூழ் இருந்தது. இருவருக்கும் சாப்பாட்டில் போட்டி நடந்தது. சிறுவன் அதிகம் சாப்பிட்டு வென்றான்.

சாப்பிட அமரும் போதே சிறுவன் தனது தூக்குப்பையை மேசை மீது வைத்தான். நிறைய கூழை அரக்கன் இல்லாத போது தனது பையில் ஊற்றிவிட்டு அதை வயிற்றில் கட்டிக் கொண்டு கூழைக்குடிப்பதுபோல் நடித்தான். அரக்கனும் கூழைக் குடித்தான். சிறுவன் அளவுக்கு குடிக்க முடியவில்லை என்று கூறித் தனது தோல்வியை ஒப்புக்கொண்டான்.

சிறுவன் ஒரு கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தி எடுத்தான். பையிலிருந்த கூழ் வெளியே வழிந்தது. அரக்கனைப் பார்த்து நீயும் உன் வயிற்றைக் குத்தி குடித்த கூழை எடுஎன்றான். முட்டாள் அரக்கனும் தன் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்தான். செத்து மடிந்தான்.

சிறுவன் அரக்கனின் குகையிலிருந்த தங்கம், வெள்ளியை அள்ளிக் கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்தான். கடனைத் தீர்த்து விவசாயி குடும்பம் செழிப்பாய் வாழ்ந்தது.

தமிழில்: எஸ்ஏபி

Pin It